5 ஜனவரி, 2012

05/01/2012


                                                               
1. அறிவியல் ஆராய்ச்சித் துறையில், சீனாவைப்போல்,  வளர்ச்சியை அடைய வேண்டுமெனில், மொத்த உள்நாட்டு உற்பத்தியில், குறைந்தது இரண்டு சதவீதத்தையாவது, அறிவியல் ஆராய்ச்சித் துறையில் முதலீடு செய்ய வேண்டும்' என, பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.
2. முல்லை பெரியாறில் புதிய அணை கட்டி, தமிழக - கேரள கூட்டுக் குழு கட்டுப்பாட்டில் நிர்வகிக்க கேரள அரசு தயாராக உள்ளது என கேரள முதல்வர் உம்மன் சாண்டி தெரிவித்தார். 
3. ஊழல் ஒழிப்பு நடவடிக்கைகள், வீட்டிலிருந்து துவக்கப்பட வேண்டும் என, முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் தெரிவித்துள்ளார். 
4.  கடலூர் மாவட்டத்தில் புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், அனைத்து உதவிகளையும்,தமிழக அரசு செய்யும் என முதல்வர் உறுதியளித்துள்ளார்.
5. சிட்னி தொடர் மட்டைப்பந்துப்போட்டியில் ஆஸ்திரேலியா 392 ஓட்டங்கள் அதிகம் பெற்று முன்னிலையில் உள்ளது.அணித்தலைவர் கிளார்க் மூன்றாவது சதம் அடிக்க வாய்ப்பு.
6. The two Indian traders, who have been holed up in a hotel in this southern Chinese trading town and facing threats to their lives, were released on Wednesday evening,
7. The Union Cabinet is likely to give its final approval for a national mission to try and improve the accuracy of monsoon forecasts by this month-end.
8. State government on Tuesday announced a hike in prize money awarded to medal winners in Olympics, Asian, Commonwealth, South Asian and National Games.
9. The Centre on Wednesday clarified that, barring the Public Provident Fund (PPF), the rates of interest on all small savings schemes will remain fixed throughout the tenure of investment.
10. Health authorities in the Philippines have declared an outbreak of a deadly rat fever in the flood-hit areas of the country’s southern region.
                                                                                                                                    -பாரதிஜீவா

Free Code Script

4 ஜனவரி, 2012

04/01/2012


                                                               

1.  ஹோர்முஸ் நீரிணை வழியாக, ஓமன் வளைகுடாவுக்குச் சென்றுள்ள அமெரிக்காவின் போர்க் கப்பல், மீண்டும் பாரசீக வளைகுடா பக்கம் வரக் கூடாது என, ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2. மேற்குலக நாடுகள், தங்கள் பண்பாடு மற்றும் கொள்கைகளைப் பரப்புவதன் மூலம், சீனா மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கின்றன. அதை, சீனா அனுமதிக்காது' என, சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ கூறியுள்ளார். 

3. இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையே, பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் புதிய நடவடிக்கைகளை ஏற்படுத்தும் பொருட்டு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். எம்.கிருஷ்ணா, இம்மாதம் 16ம் தேதி இலங்கை செல்ல இருப்பதாக மத்திய அரசு தகவல் தொடர்பு துறை தெரிவித்துள்ளது. 

4. முல்லைப் பெரியாறு அணையில், எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிவித்த ஐவர் குழு, அணையின் நீர்மட்டத்தை 120 அடிக்கு குறைத்திட வேண்டுமென்ற கேரளாவின் கோரிக்கையையும் நிராகரித்து விட்டது.

5. சிட்னி தொடர் மட்டைப் பந்துப்போட்டியில்இந்திய வீரர்கள் திணறலான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகின்றனர். கிளார்க், பாண்டிங் இருவரும் சதம் அடித்து அசத்த ஆஸ்திரேலிய அணி வலுவான இலக்கை நோக்கி முன்னேறுகிறது. 

6. மகாராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை காலிறுதியில், தமிழக அணி வலுவான முன்னிலை நோக்கி முன்னேறுகிறது.



Free Code Script

3 ஜனவரி, 2012

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு- கால அட்டவணை அறிவிப்பு



இந்த கல்வியாண்டில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவ, மாணவியருக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஏப்ரல் 4ம் தேதி முதல் 23ம் தேதி வரை 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெறவுள்ளது.
இது குறித்து பள்ளிக் கல்வி தேர்வுத் துறை செய்திக் குறிப்பு வெளியிட்டுள்ளது.
ஏப்ரல் 4ம் தேதி- தமிழ் முதல் தாள்
ஏப்ரல் 6ம் தேதி- தமிழ் இரண்டாம் தாள்
ஏப்ரல் 11ம் தேதி- ஆங்கிலம் முதல் தாள்
ஏப்ரல் 12ம் தேதி- ஆங்கிலம் இரண்டாம் தாள்
ஏப்ரல் 16ம் தேதி- கணிதம்
ஏப்ரல் 19ம் தேதி- அறிவியல் 
ஏப்ரல் 23ம் தேதி- சமூக அறிவியல் 
தமிழகம் முழுவதும் சுமார் 11 லட்சம் மாணவ, மாணவிகள் இந்த கல்வியாண்டில் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை எழுத உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 
இந்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட சமச்சீர் கல்வித் திட்டத்தினால், அரசு மற்றும் மெட்ரிக் என சி.பி.எஸ்.இ. தவிர அனைத்து பள்ளி மாணவர்களும் ஒரே பாடப்பிரிவின் கீழ் தேர்வு எழுத உள்ளனர்.



Free Code Script

03/01/2012


                                                             
1.இந்தோநேசியாவில் நேற்று நிலநடுக்கம் ஏற்பட்டது.இது ரிக்டர் அளவுகோலில்  5.3  என்ற அளவில் பதிவானது.
2.பாகிஸ்தான் இராணுவத்தைத் தாக்க வேண்டாம் என,தாலிபான்களுக்கு,அதன் தலைவர் முல்லா உமர் உத்தரவிட்டுள்ளார்.
3. வியாழன் கிரகம் அருகே மிக நெருக்கமாகச் சந்திரன் இருக்கும் அரிய காட்சியை இன்று வானில் காணலாம்.
4. அடுத்த 2 வாரங்களுக்கு, பெட்ரோல் விலை உயர்வு தொடர்பான அறிவிப்பு வெளிவராது என, எண்ணெய் நிறுவன வட்டாரங்கள் அறிவிப்பு.
5.தானே புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை,இன்று முதலமைச்சர் பார்வையிடுகிறார்.
6. New dam is the only solution, says Kerala.
7. Union budget will be presented after the completion of assembly elections for  5 states, Finance minister says.
8. Export growth in November is the slowest in two years due to slowdown in U.S.
9. India hopes for a turnaround in its batting in the second test match against Australia.
10. Bus services up to Kumily resume after a gap of 28 days.
                                                                                      -பாரதிஜீவா

Free Code Script

2 ஜனவரி, 2012

02/01/2012


                                           
1. ஈரான் மீது மேலும் பல பொருளாதாரத் தடைகளை விதிக்கக் கூடிய, பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அளிக்கும் நிதியுதவியைக் குறைக்கக் கூடிய பாதுகாப்பு மசோதாவில், அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கையெழுத்திட்டுள்ளார்.
2. அணுமின் நிலையங்கள் குறித்த தகவல்களை இந்தியாவும், பாகிஸ்தானும் பரஸ்பரம் பரிமாறிக் கொண்டன. 
3. திருப்பதி வெங்கடேசப் பெருமாள் கோவிலில் ஆங்கிலப் புத்தாண்டையொட்டி சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களில் ஒன்றரை லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 
4. தேர்தல் கமிஷனர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் வகையில், அரசியல் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டியது அவசியம் என, தலைமை தேர்தல் கமிஷனர் குரேஷி கூறியுள்ளார்.
5. கன்னியாகுமரி கடலில் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்ட 12வது ஆண்டுவிழாவை முன்னிட்டு, தமிழ் அமைப்புகள் சார்பில் திருவள்ளுவர் சிலை பாதத்தில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
6. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் மழைப் பொழிவு குறைந்ததால்,கோவை மாவட்டத்திலுள்ள அணைகளுக்கு நீர்வரத்து குறைந்தது.
7. Prime Minister Manmohan Singh on Monday faced an angry protest from social activist Anna Hazare's supporters, who waved black flags.
8. Chief Minister Jayalalithaa on Sunday announced Pongal bonus for government employees, a measure that will cost the government Rs. 264 crore.
9. The events lined up for the Coimbatore Vizha began on a green note on the first day of the New Year at the Uzhavar Sandhai at R.S. Puram.
10. There is a near 10 per cent increase this year in property tax collection in the Coimbatore Corporation.
                                                                                                                                    -பாரதிஜீவா






Free Code Script

27 டிசம்பர், 2011

13/12/2011

1.இந்தியப்பெருங்கடலில் உள்ள செஷல்ஸ் தீவில் சீனா இராணுவத்தளம் அமைக்க முடிவு செய்துள்ளதாக,சீன இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
2.நாடு முழுவதும்,வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்போர் எண்ணிக்கை 4 கோடிப் பேருக்கும் அதிகம் என மய்ய அரசு அறிவித்துள்ளது.
3.நாட்டில், வீடற்ற அனைவரும்,இரவு நேரத்தில் தங்க போதுமான அளவு, இரவுநேரத் தங்குமிடங்கள் அமைத்துதர, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4.முல்லைப்பெரியாறு அணை தொடர்பான,இரு மாநில அரசுகளின் மனுக்கள் மீது இன்று உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
5.தமிழக அரசின்,புதிய இந்துசமய அறநிலையத் துறை அமைச்சராக ஆனந்தனும், சமூகநலத்துறை அமைச்சராக வளர்மதியும் பதவியேற்றனர்.
6.முதுமலையில் நடைபெறும் யானைகள் முகாமுக்கு,தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும்,யானைகள் கொண்டுசெல்லப்படுகின்றன.
7.Tamilnadu Government  announces educational assistance to the students belonging to the various communities.
8.All seven labourers,kidnapped from a village of Bihar have been released by the Maoists.
9.The industrial production of India registered a negative growth of 5.1 percent in October,reasons the fall of stock markets.
10. Tamilnadu  government gave Rs.1 crore to the Tamilnadu Tennis Association to conduct a tournament next year.                                          -பாரதிஜீவா

Free Code Script

12/12/2011


                                                      
1. உலக பருவநிலை மாற்றம் குறித்த, ஐ.நா., வின் சர்வதேச மாநாட்டில்,
வளர்ந்த நாடுகள் தாங்கள் வெளியிடும், கார்பன் அளவைக் குறைப்பதற்கான, சட்டப்பூர்வ ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளன.
2. கேரள முதல்வர் உம்மன் சாண்டியும், எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தனும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசத் தீர்மானித்துள்ளனர்.
3. எதிர்வரும் மார்ச்சு மாதத்திற்குள் மின்தடை முற்றிலும் தவிர்க்கப்படும்என,தமிழகமின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார். 
4. மின்சாரத்தை சேமிக்கும் விதத்தில்,கோவை மாநகராட்சி சார்பில் தெருக்களில் மின் கம்பங்களில் எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டன. 
5.  ஐந்தாவது ஒருநாள் மட்டைப்பந்துப் போட்டியில் இந்தியா 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வென்றது.
6. Leaders of major Opposition parties on Sunday shared the dais with anti-corruption crusader Anna Hazare during his daylong fast.
7. The Pakistani Taliban is in peace talks with the Pakistani government, a senior commander in the militant group said on Saturday.
8. A special session of Tamil Nadu Assembly will be held on December 15, to express the solidarity of the people and all political parties.
9. The Mettupalayam Road four-lane work completion is likely to skip another deadline. 
10. The State Government has sanctioned Rs. 3.95-crore for the construction of a bridge across River South Pennar to Thorappall.
                                                                                                       -பாரதிஜீவா

Free Code Script

09/12/2011


1. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க, ஆஸ்திரேலியா ஆதரவு அளிக்கும் என, ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
2.  அமெரிக்காவிடம் இருந்து, ஆயுத தளவாடங்களை அதிக அளவில் வாங்கும் நாடுகள் பட்டியலில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என, அந்நாட்டின் ராணுவத் தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.
3. அணுமின் நிலையங்கள், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானதாக இருப்பதுடன், மிக குறைந்த செலவில் மின்சாரம் தயாரிப்பதற்கும் உதவியாக உள்ளன என, மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
4. கைகள் தவிர, உடலின் எந்தப் பகுதியிலும் பச்சை குத்தியிருக்கும் இளைஞர்களை, ராணுவத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என, இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 
5.  தமிழகத்தில் மூளை பாதிப்பு-நிமோனியா காய்ச்சல், தொண்டை அடைப்பான், ஹெபடைடிஸ் பி உள்ளிட்ட 5 நோய்களிலிருந்து குழந்தைகளைக் காக்கும் ஒரே தடுப்பூசி முறை ("பென்டாவேலன்ட்) வரும் 17-ம் தேதி அறிமுகப்படுத்தப்படுகிறது.
6. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய வீரேந்திர சேவக்,    219 ஓட்டங்கள் குவித்து உலக சாதனை படைத்தார். இவரது அதிரடி ஆட்டம் கைகொடுக்க, 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, நான்கிற்கு ஒன்று என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
7. The Tamil Nadu government has decided not to attend the proposed talks on the Mullaperiyar dam dispute issue to be held in New Delhi on December 16.
8. The Kerala government moved the Supreme Court on Thursday for a direction to the Tamil Nadu government to reduce the water level in the Mullaperiyar dam from 136 ft. to 120 ft. so as to avoid any immediate calamity.
9. Traffic police personnel are the first respondent to road accidents and if well-trained they can save many lives on roads, City Police Commissioner Amaresh Pujari said.
10. The United States moves to strengthen its military alliances in Asia are not aimed at containing China, a top U.S. defence official said on Thursday.

Free Code Script

08/12/2011



1. ரஷ்யாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில், மோசடிகள், முறைகேடுகள் நிகழ்த்தப்பட்டதால் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என, சோவியத் ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மிக்கெயில் கோர்பச்சேவ் கோரியுள்ளார்.
2.  இலங்கையில், அரசு மற்றும் தமிழர்களுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுவார்த்தையில் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து நிலவி வருகின்றன. இதனால், அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 14ம் தேதி நடக்க உள்ளது.
3. குழந்தைத் திருமணத்திற்கு எதிராகப் போராடி, அவற்றை தடுத்து நிறுத்திய, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகளுக்கு, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், நேற்று தலா 10,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கினார். 
4. தமிழகத்துக்கு கூடுதலாக, ரூ25ஆயிரம் கோடி நிதியுதவி, கூடுதல் மின்சாரம், மண்ணெண்ணெய் வழங்கும்படி, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,தமிழக முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.
5. இந்திய-மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் மட்டைப்பந்துப் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

07/12/2011


1.பாகிஸ்தானுடனான அமெரிக்க உறவை மறு பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டதாக அமெரிக்க செனட் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
2,இந்திய எல்லையைத் தாண்டிச் சென்ற குரங்கு ஒன்று, பாகிஸ்தான் வனத்துறையிடம் சிக்கியது. அது உளவு பார்க்க அனுப்பப் பட்டதா என அதிகாரிகள் சோதித்து வருகின்றனர்.
3.லோக்பால் மசோதாவின் வரைவு அறிக்கை, பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்படுவதற்கு, மேலும் கால தாமதம் ஆகும் என்ற தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.
4. அற்ப நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு, அறிவுசார்ந்த கேரள மக்கள் இரையாகி விடக் கூடாது' என, தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. கூடங்குளம் அணு மின் நிலையத்தில், இரண்டு அணு உலைகள் செயல்படுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால், அரசுக்கு கூடுதலாக, 2,653 கோடி ரூபாய் செலவாகும் என, தகவல் வெளியாகியுள்ளது.
6.  இந்தியாவில் 33 விழுக்காடு வனங்கள் இருக்க வேண்டிய இடத்தில், 24 விழுக்காடுதான் உள்ளன. எனவே, விவசாயிகள் மரங்களை வளர்க்க முன்வர வேண்டும் என்று, வேளாண் பல்கலை துணைவேந்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
7. China has, for the first time, laid direct blame at the doorsteps of Dharamshala for the at least 11 self-immolation protests.
8. Tamil Nadu Chief Minister on Tuesday ordered release of water from Veeranam, Vaniyar, Chinnar and Barur water bodies in the state.
9. Being physically fit is more important than losing weight, when it comes to reducing death risks, a new study has suggested.
10. Viswanathan Anand wriggled out of an inferior position against David Howell in the third round of the London Chess Classic at the Olympia Media Centre in London on Monday                             -பாரதிஜீவா                                                                                                     

பிரபலமான இடுகைகள்