1. வங்கதேசத்தில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான
ஆட்சியைக் கவிழ்க்க, சதித்
திட்டம் தீட்டியது தொடர்பாக, இரண்டு இராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
2. இலங்கையில் மனித வளத்தை மேம்படுத்தும் நோக்கில் ரூ. 100 கோடி நிதியுதவி அளிக்கப்படும் என
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.
3. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப், இம்மாதம்
தாயகம் திரும்பலாம் என்ற தனது திட்டத்தை ஒத்தி
வைத்துள்ளார்.
4. புதுச்சேரியில்,
அண்மையில் வீசிய தானே புயலால், வரலாற்றுச்
சின்னமான அரிக்கமேடு பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
5. இத்தாலி நாட்டின் கடற்பகுதியில் விபத்துக்குள்ளான, கோஸ்டா கன்கார்டியா கப்பலில் இருந்து
மீட்கப்பட்ட இந்தியர்களில் 15 பேர், நேற்று இந்தியா திரும்பினர்.
6. மேற்குவங்கத்தில், விரைவுத்தொடர்வண்டியின்,ஒரு பெட்டியில் கேட்பாரற்றுக் கிடந்த ,ரூபாய்
23 லட்சத்தைக் கண்டெடுத்த பெண்
துப்புரவு தொழிலாளி, அதை நேர்மையுடன் காவல்துறையிடம் ஒப்படைத்தார்.
7. லோக்ஆயுக்தா நீதிபதி
நியமன விவகாரத்தில் உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை
எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் குஜராத் அரசு, மனு தாக்கல் செய்துள்ளது
8. சமையல்
எரிவாயு சரக்குந்து உரிமையாளர்களின் கோரிக்கைகள் ஏற்கப்பட்டதால், வேலை நிறுத்தம் திரும்பப்
பெறப்பட்டது. எனினும், எரிவாயு கொண்டு
வரப்பட்டு,உருளைகளில் நிரப்பித் தர ஒரு வாரம் ஆகலாம்.
9. கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியில், பொதுமக்களை பயமுறுத்தி
வரும் குரங்குகளைப் பிடிக்க, வனத்துறை சார்பில் கூண்டு
வைக்கப்பட்டுள்ளது.
10. அஜர்பைஜானுக்கு எதிரான ஹாக்கி டெஸ்ட் தொடரில் 4 ஆட்டங்களிலும் இந்திய
மகளிர்அணி வென்று, கோப்பையைக் கைப்பற்றியுள்ளது.
-பாரதிஜீவா
Free Code Script