1. ஈரானிலிருந்து இறக்குமதி
செய்யப்படும் கச்சா எண்ணையின் அளவைக் குறைப்பதற்கான
நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.
2. நீதிமன்ற அவமதிப்பு
வழக்கில், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியின் மேல்முறையீட்டு மனுவை, பாகிஸ்தான்
உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
3. எதிரியின் ஏவுகணையை வழிமறித்துத் தாக்கும், ஒலியின்
வேகத்தைவிட விரைவாக செல்லக் கூடிய, நவீன ஏவுகணை,
ஒடிசாவில் நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
4. மும்பை இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில்,
3 பேர் மீது விசாரணை நீதிமன்றம் விதித்திருந்த தூக்குத் தண்டனையை, உயர் நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது.
5. உத்தரப் பிரதேச மாநிலத்தில் இரண்டாம் கட்ட
வாக்குப் பதிவு , 10 மாவட்டங்களில் உள்ள 59 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று நடைபெற
உள்ளது.
6. பள்ளி ஆசிரியர்களை நியமிக்கும் முன் அவர்களுக்குத் தகுதித் தேர்வு
நடத்த வேண்டும் என்ற தமிழக அரசின் ஆணைக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்து
விட்டது.
7. இலங்கை கடற்பகுதியில் சிறைப் பிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 4
பேரை, மன்னார் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை
விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
8. மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் பகுதியில்,விளைநிலங்களில் காட்டு யானைகள் புகுந்த்தால்,3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.
9. தொடர் மின்வெட்டைக்
கண்டித்து, கோவையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள்,வேலைநிறுத்தம்
செய்து வருகின்றன.
10. முத்தரப்பு மட்டைப்பந்துத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணி 5ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.