1. நைஜீரியாவில் நடந்த தொடர் வெடிகுண்டு தாக்குதலுக்கு ஐ.நா பொதுச் செயலர்
பான் கீ-மூன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
2. மக்களின் பேராதரவுடன், தான், நாடு திரும்பப் போவதாக, பாகிஸ்தான் முன்னாள்
அதிபர் பர்வேஸ் முஷாரப்,தெரிவித்துள்ளார்.
3. இலக்கிய விழாவில் நான் கலந்து கொள்வதை தடுக்கவே, என் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக, ராஜஸ்தான்
போலீசார் பொய் கூறியுள்ளனர் என, சர்ச்சைக்குரிய
எழுத்தாளர் சல்மான் ருஷ்டி தெரிவித்துள்ளார்.
4. பத்மநாப சுவாமி கோவிலின் பாதாள அறைகளில் பாதுகாக்கப்பட்டுள்ள
பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி, பிப்ரவரி 17ஆம் தேதி துவங்கும் என, உச்சநீதிமன்றம்
நியமித்த மதிப்பீட்டுக் குழுவின் தலைவர் வேலாயுதன் நாயர் தெரிவித்துள்ளார்.
5. தன்னைக் கேலிசெய்த மூன்று இளைஞர்களை காவல்நிலையத்துக்குக் கொண்டு சென்றுள்ளார் தில்லி முதல்வர் ஷீலா
தீட்சித்தின் மகள் லத்திகா. அவர்கள் மன்னிப்பு கேட்டுக் கொண்டதால் அவர்கள் மீது
புகார் பதிவு செய்யப்படாமல் விடுவிக்கப்பட்டனர்.
6. இந்தியாவில் நடக்கும், இந்திய-அமெரிக்க இராணுவ வீரர்களுக்கான "யூத் அபியாஸ்' எனும்
கூட்டுப் பயிற்சியில், முதல்முறையாக, அமெரிக்க டாங்குகள் பங்கேற்க உள்ளதாக இராணுவ
அதிகாரிகள் தெரிவித்தனர்.
7. தரம் உயர்த்தப்பட்ட
நடுநிலைப் பள்ளிகளுக்காக, இந்தக் கல்வி ஆண்டிலேயே 1,267
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை கூடுதலாக தோற்றுவிக்க முதலமைச்சர்
உத்தரவு.
8. திருக்குறளை, இந்தியாவின் தேசிய நூலாக அறிவிக்க வேண்டும் என்று, சென்னை "தலைநகர் தமிழ்ச் சங்கம்' கோரிக்கை
விடுத்துள்ளது.
9. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஹாக்கி தொடரை, இந்திய அணி 3-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.
10. 5ஆவது ஒருநாள் போட்டியில் இலங்கை அணிக்கு 313 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது தென் ஆப்பிரிக்கா. -பாரதிஜீவா
Free Code Script