1. சிரியாவில் நிலவி வரும் அரசியல் பிரச்னைக்கு பேச்சுவார்த்தை மூலமே
தீர்வு காணப்பட வேண்டும் என்றும், இராணுவத் தீர்வு பலன்
தராது என்றும், ஐக்கிய நாடுகள் அவையின் பாதுகாப்புக் குழுவில் இந்தியா
வலியுறுத்தியுள்ளது.
2. சவுதி அரேபியாவில், ஆப்கானிஸ்தான் அரசுடன் பேச்சு
நடத்தப் போவதாக, வெளியான தகவல்களை, தலிபான் அமைப்பு மறுத்துள்ளது.
3. இதுவரை,
தென் சீனக் கடலில், தனது ஆதிக்கத்தை
நிலைநாட்டுவதில் தீவிரம் காட்டி வந்த சீனா, தற்போது,
கிழக்கு சீனக் கடலிலும், தனது தலையீட்டைத்
துவக்கியுள்ளதற்கு ஜப்பான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
4. தனியார் கூரியர் நிறுவனங்கள் மத்திய
அரசுடன் தங்களைப் பதிவு செய்து கொள்வது கட்டாயமாக்கப்படும் என்று தொலைத் தொடர்புத்
துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
5. ஈராஸ் என்ற 34 கிலோ மீட்டர் அகலமான, இரண்டாவது பெரிய விண்கல்,
செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணியளவில்
பூமியைக் கடந்து சென்றது.
6. குஜராத் கலவரம் தொடர்பாக, முதல்வர் மோடிக்கு,
அழைப்பாணை அனுப்பி விசாரிக்கும்படி, நானாவதி
கமிஷனுக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்த மனுவை, அம்மாநில
உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது.
7. மேற்கு
வங்கத்தில், காவல்துறை சங்கங்களுக்கு வழங்கப்பட்ட
அங்கீகாரத்தை, அரசு நேற்று நீக்கியது.
8. கன்னியாகுமரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் புதன்கிழமை வீசிய சூறைக்காற்றின் காரணமாக,கடல் சீற்றத்துடன் காணப்பட்டதால், திருவள்ளுவர்
சிலைக்கு நாள் முழுவதும் படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
9. கோவை மாநகராட்சியில்
புதிதாக 3,443 பணியிடங்களைத் தோற்றுவிக்க, ஒப்புதல் அளிக்கக் கோரி,தமிழக அரசுக்கு
மாநகராட்சி மன்றம் பரிந்துரை செய்துள்ளது.
10. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான
முதல் இருபது ஓவர் மட்டைப்பந்து ஆட்டத்தில் 31 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது இந்தியா.