13 ஜனவரி, 2012

13.01.2012

1. பிரதமர் யூசுப் ராஸா கிலானிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம், பாதுகாப்புச் செயலர் நீக்கம் போன்ற காரணங்களால் அரசியல் பரபரப்பு அதிகரித்திருக்கும் நிலையில், அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி வியாழக்கிழமை துபைக்குச் சென்றுவிட்டார்.
2. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் இரண்டு நாள் இஸ்ரேலியப் பயணத்தின்போது,  மிக நெருங்கிய நட்பு நாடுகளுக்கு அளிக்கப்படும் விருந்து உபசரிப்பு அளிக்கப்பட்டது.
3.  சோமாலிய கடற்பகுதியில் அடிக்கடி நிகழும் கடற்கொள்ளையைத் தடுக்க அனைத்து நாடுகளிடையே ஒருங்கிணைந்த உத்தியுடன் கூடிய செயல்பாடு மிக அவசியம் என்று இந்தியா ஐ.நா அவையில் வலியுறுத்தியுள்ளது.
4. மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தலைமையில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12 இல், சூரிய நமஸ்காரம் செய்யும் நிகழ்ச்சியில் 50 லட்சம் மாணவர்கள் நேற்று ஈடுபட்டனர்.
5. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
6. இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி நவம்பர் மாதத்தில் 5.9 சதவீதமாக உயர்ந்தது.
7. பொங்கல் பண்டிகையை ஒட்டி, சிறப்புப் பேருந்துகளை, 17-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை இயக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
8.  புயலில் பல நூறு ஏக்கர் கரும்பு பயிர்கள் சேதமடைந்துள்ளதால், கடந்த ஆண்டை விட இரு மடங்கு கூடுதல் விலைக்கு கரும்பு விற்கப்படுகிறது.
9.எரிவாயு எடுத்துச் செல்லும், சரக்குந்து உரிமையாளர்களின் கால வரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது.
10. 2015- ஆம் ஆண்டுடைபெறவுள்ளஉலக கோப்பைத் தொடரில் பங்கேற்க வேண்டுமென்றால், ஏதாவது ஒரு வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் எனக் கூறியதன் மூலம், தொடர் போட்டியில் இருந்து ஓய்வு பெற இருப்பதை சூசகமாக தெரிவித்தார் தோனி.
                                                                                                                        -பாரதிஜீவா

Free Code Script

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece