காலம்-3மணி தமிழ் முதற்றாள்
செய்யுளும்,இலக்கணமும் மதிப்பெண்கள்-100
அ.பின்வரும் வினாக்களுள் எவையேனும் நான்கனுக்குமட்டும்
ஒவ்வொன்றிற்கும் ஐந்து வரிகள் வீதம் விடை எழுதுக. 4x2=8
1.கம்பரின் பெருமையைச்சுட்டும் தொடர்களைக் கூறுக.
2.பயனில்மூப்பில் பல்சான்றோரிடம் நரிவெரூஉத் தலையார் வேண்டுவன யாவை?
3.பாஞ்சாலி சபதம் பற்றிச்சிறுகுறிப்பு வரைக.
4.அந்தாதி- விளக்குக.
5.எச்.ஏ.கிருஷ்ணப்பிள்ளை இயற்றிய நூல்கள் யாவை?
6.துன்பம் எவ்வாறு சிதறிப்போகுமென்று சுரதா தெரிவிக்கிறார்?
ஆ.பின்வரும்வினாக்களுள்எவையேனும்மூன்றனுக்கு மட்டும்
ஒவ்வொன்றிற்கும் பத்து வரிகள் வீதம் விடை எழுதுக. 3x4=12
7.அறிவுடையாரின் இலக்கணங்களாக வள்ளுவர் கூறுவனவற்றை எழுதுக.
7.அறிவுடையாரின் இலக்கணங்களாக வள்ளுவர் கூறுவனவற்றை எழுதுக.
8.தலைவியைச் சந்தித்துச் செல்லும் தலைவனிடம் தோழி வரைவு கடாயவாற்றை விளக்குக.
9.வரத நஞ்சயப்பப் பிள்ளை எக்காரணங்களால் தமிழன்னையை வாழ்த்துவம் என்று கூறுகிறார்?
10.’உண்டுகொல்’-என்னும் முறையில் கண்ணகி வெகுண்டு உரைத்தவை
யாவை?
11.கோலியாத்து தாவீதனைக்கண்டு வெகுண்டு உரைத்தவை யாவை?
இ. பின்வரும்வினாக்களுள்எவையேனும்மூன்றனுக்கு மட்டும்
ஒவ்வொன்றிற்கும் பத்து வரிகள் வீதம் விடை எழுதுக. 3x4=12
12.இராஜராஜ சோழனின் வில்,வாள்,முரசு,கொடி,குடை குறித்துக் கூறப்பட்டன யாவை?
13.தென்கரை நாட்டின் வளம் குறித்து முக்கூடற்பள்ளு உரைப்பனவற்றை
எழுதுக.
14.உவமைக் கவிஞர் சுரதா எவ்வெவெற்றைச் சிக்கனம் எனப் பட்டியலிடுகிறார்?
15.குலசேகர ஆழ்வார் வேண்டுவதும்,வேண்டாததும் யாவை?
16.நயினார் பதத் துணையை நாவில் வைத்துப் போற்றுபவர் ஆஇயத் தக்கனவாய் உமறுப்புலவர் கூறுவன யாவை?
ஈ பின்வரும்வினாக்களுள் ஏதேனும் ஒன்றனுக்கு மட்டும் ஒன்றனுக்கு மட்டும்,இருபது வரிகளில் விடை எழுதுக. 1x8=8
17.பொறையுடைமை என்னும் அதிகாரம் வெளிப்படுத்தும் கருத்துக்களைத்
தொகுத்தெழுதுக.
18.சீதையை அனுமன் கண்டுவந்து கூறிய செய்திகளை இருபது வரிகளுக்கு மிகாது எழுதுக.
19. ‘காடு’ என்ற தலைப்பின் கீழ் கவிஞரேறு வாணிதாசன் உரைப்பனவற்றை எழுதுக.
20. ‘செம்பொற் சிலம்பொன்று கையேந்தி நம்பொருட்டால் வம்பப்
பெருந்தெய்வம் வந்தது இதுவென்கொல்’
அ) இவ்வடிகள் யார் கூற்று?
ஆ)வம்பப் பெருந்தெய்வம் யார்?
இ) வந்தது எங்கு?
ஈ)இப்பாடலை இயற்றிய ஆசிரியர் யார்?
அல்லது
21. “ நெடுந்தேர் ஊர்மதி வலவ முடிந்தன்று
அம்மநாம் முன்னிய வினையே ”
அ) இக்கூற்று யாரிடம் கூறப்பட்டது?
ஆ) இக்கூற்று யார் கூறியது?
இ) இச்செய்யுள் எந்த நூலில் இடம்பெற்றுள்ளது?
ஈ) ‘வலவ’ –என்பதன் பொருள் யாது?
உ. 22. “ஒன்றேயென்னின்...” எனத்தொடங்கும் பாடலை எழுதி,அஃது எவ்வகைப் பா என்பதையும் குறிப்பிடுக. 4+2=6
23. “கொன்றன்ன” எனத் தொடங்கும் குறளையும், “நோய்” என முடியும் குறளையும் அடிபிறழாமல் எழுதுக. 2+2=4
ஊ. 24 எவையேனும் இரண்டு சொற்களுக்கு உறுப்பிலக்கணம் தருக.
2x2=4
அ).வாழ்த்துவம் ஆ)தருகுவென் இ)வாழாள்
ஈ)உள்ளுவர் உ) கொன்றார் ஊ) சொல்லுமின்.
25.கீழ்க்கோடிட்ட தொடர்களுள் ஏதேனும் மூன்றனுக்கு இலக்கணக் குறிப்பு எழுதுக. 3x2=6
அ) ஓங்கியுயர் ஆ) என்றடி வாழ்த்துவம் இ)நல்லாற்றுப் படூஉம்
ஈ) வையகமும்,வானகமும் உ) நெடுந்தேர் ஊ) தழீஇ
26.எவையேனும் இரண்டு தொடர்களுக்குப் புணர்ச்சி விதி தருக. 2x2=4
அ) கருத்தோடிசைத்த ஆ) பெருங்களிறு இ) கடுந்திறல்
ஈ) பகலுறை உ) நின்னருள் ஊ) தமிழன்னை.
27. பின்வருவனவற்றிற்குச் சான்று தந்து விளக்குக. 1x4=4
முல்லைத்திணை அல்லது பொருண்மொழிக் காஞ்சி
28. “வாங்கிய ஆழிதன்னை வஞ்சர்ஊர் வந்த தாமென் 1x4=4
றாங்குயர் மழைக்கண் ணீரால் ஆயிரம் கலச மாட்டி”
இவ்வடிகளில் அமைந்த அணியைச் சுட்டி விளக்குக.
அல்லது
உவமை அணி அல்லது சொற்பொருள் பின்வருநிலை அணியை விளக்குக.
எ. பொருத்துக 4x1=4
புலவர்கள் இயற்றிய நூல்கள்
29. சீத்தலைச் சாத்தனார் சிலப்பதிகாரம்
30.திருத்தக்கத்தேவர் வளையாபதி
31.இளங்கோவடிகள் மணிமேகலை
32.நாதகுத்தனார் சீவகசிந்தாமணி
ஏ. உரிய விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக : 16x1=16
33. தமிழரின் வாழ்வியல் சிந்தனைகளைக் கருவூலமாக்க் கொண்டு
விளங்கும் நூல்
அ) அகநானூறு
ஆ) ஐங்குறுநூறு
இ) புறநானூறு.
34. நற்றிணைப் பாக்களின் அடிவரையறை
அ) 4 அடி முதல் 8 அடி வரை
ஆ) 9 அடி முதல் 12 அடி வரை
இ) 13 அடி முதல் 31 அடி வரை.
35. சிலப்பதிகாரத்தின் உட்பிரிவு
அ) படலம்
ஆ) இயல்
இ) காதை.
36.கம்பர் காலத்தில் வாழ்ந்த புலவர்களுள் ஒருவர்
அ) நக்கீரர்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) இளங்கோவடிகள்.
37.தமிழரசிக் குறவஞ்சியின் பாட்டுடைத் தலைவன்
அ) சிவன்
ஆ) திருமால்
இ) முருகன்.
38.சுந்தரர் தேவாரம்
அ) முதலாந்திருமுறை
ஆ) ஏழாந்திருமுறை
இ) பன்னிரண்டாந்திருமுறை.
39. “நமக்குத்தொழில் கவிதை நாட்டிற்குழைத்தல்” என்று பாடியவர்
அ) பாரதிதாசன்
ஆ) வாணிதாசன்
இ) பாரதியார்.
40. “திவ்வியகவி” என்ற பெயரால் அழைக்கப்படுபவர்
அ) பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
ஆ) ஒட்டக்கூத்தர்
இ) குமரகுருபரர்.
41.சிறியதிருவடி என்று அழைக்கப்படுபவர்
அ) கருடன்
ஆ) அனுமன்
இ) வீடணன்.
42. புலன் என்னும் இலக்கியவகை
அ) கலம்பகம்
ஆ) பள்ளு
இ) உலா.
43.சாகித்திய அகாதமி பரிசுபெற்ற நூல்
அ) பிசிராந்தையார்
ஆ) பாண்டியன் பரிசு
இ) குடும்ப விளக்கு.
44.தேம்பாவணி நூலின் பாட்டுடைத் தலைவன்
அ) சூசைமாமுனிவர்
ஆ) இயேசு பெருமான்
இ) தாவீதன்.
45.சிலப்பதிகாரத்திலுள்ள காண்டங்கள்
அ) மூன்று
ஆ) ஆறு
இ) முப்பது.
46.உத்தரவேதம் எனப் பெயர்பெற்றது
அ) புறநானூறு
ஆ) கம்பராமாயணம்
இ) திருக்குறள்.
47.பாரதிதாசன் வெளியிட்ட இதழ்
அ) குயில்
ஆ) மயில்
இ) சிட்டு.
48. வீரமாமுனிவர் தொகுத்த அகராதி
அ) சதுரகராதி
ஆ) பேரகராதி
இ) அரும்பத அகராதி.
ஐ. கோடிட்ட இடங்களை ஏற்ற சொற்களால் நிரப்புக. 2+2=4
49. அறிவற்றங்காக்கும்.................... செறுவார்க்கும்
உள்ளழிக்க லாகா .................... .
50. எண்பொருள வாகச் செலச் சொல்லித் ....................
நுண் பொருள் ...................... தறிவு.
===========================
Free Code Script