1. சோமாலியா நாட்டின் தலைநகர் மொகாதீசுவில், புதிய தூதரை நியமிப்பது என்றும், அதற்கான
புதிய தூதரகம் அமைப்பது என்றும் இங்கிலாந்து அறிவித்தது.புதிய
தூதரகம் அமைக்கப்படும் வரை, தற்காலிகமாக,கென்யா நாட்டின் தலைநகர் நைரோபியில், இத்தூதரகம்
செயல்படும்.
2. தடை செய்யப்பட்ட இயக்கங்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி
பாகிஸ்தான் உள்துறை அமைச்சருக்கு பிரதமர் யூசுப் ரசா கிலானி உத்தரவிட்டுள்ளார்.
3. உள்நாட்டுப் போரின் போது நடந்த
அத்துமீறல்கள் பற்றிய அறிக்கையை, ஐக்கிய நாடுகள் அவைக்கு அனுப்பப் போவதில்லை என இலங்கை அரசு கூறியுள்ளது.
4. இஸ்ரேலைத்
தாக்கும் நோக்கில், 2 இலட்சம்
ராக்கெட்டுகள், ஏவுகணைகள் உள்பட சுமார் 100 கிலோ எடை கொண்ட, யுரேனியம் செறிவூட்டப்பட்ட 4
அணு குண்டுகளை, ஈரான் தயாரித்துள்ளதாக, இஸ்ரேல் குற்றம்சாட்டியுள்ளது.
5. 2008-ம்
ஆண்டு வழங்கப்பட்ட 122, 2ஜி அலைக்கற்றை உரிமங்களை
உச்ச நீதிமன்றம்
வியாழக்கிழமை நீக்கம்
செய்தது. 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வெளிப்படையாக
இருக்கவேண்டும் என்ற, பிரதமரின் அறிவுரை புறக்கணிக்கப்
பட்டுள்ளது என்றும், சட்டத்துக்கு முரணான
முறையில் அந்த உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன என்றும் கடுமையாகச் சாடியுள்ளது.
6. ஊரக வேலை வாய்ப்பு
உறுதித் திட்டத்தில் பணியாற்றுவோருக்கு 15 நாள்களுக்குள் சம்பளம் கொடுக்க வேண்டும் என, பிரதமர் கூறியுள்ளார்.
7. தங்களுக்குச் செலுத்த வேண்டிய பாக்கியை செலுத்தாததால், இந்தியன்
ஆயில் உட்பட மூன்று எண்ணெய் நிறுவனங்கள், ஏர் இந்தியாவுக்கு
நேற்று எரிபொருள் தருவதை நிறுத்தின. இந்தப் பிரச்னையால், ஏர் இந்தியா
விமானங்கள் இயக்கத்தில் பாதிப்பு ஏற்பட்டது.
8. புவி வெப்பமடைவதைத் தடுக்க வேண்டும் என்பதில்
வளர்ச்சியடைந்த நாடுகளிடையே போதிய அக்கறையில்லை என்று பிரதமர் மன்மோகன் சிங்
குற்றம் சாட்டினார்.
9. பாரதியார் பல்கலைக்கழகத்தில் ` 60 கோடியில் 5 மெகாவாட் திறன் கொண்ட சூரிய ஒளி
மின்னுற்பத்தி நிலையம் தொடங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக, துணைவேந்தர் சி.சுவாமிநாதன் தெரிவித்துள்ளார்.
10. இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதும் இரண்டாவது
20 ஓவர்கள் கொண்ட, மட்டைப்பந்துப் போட்டி இன்று மெல்போர்னில்
நடக்கிறது. தொடர்ந்து வீழ்ச்சியை சந்தித்து வரும் இந்திய அணி, இம்முறை, முதல் வெற்றியைத் தேடி களமிறங்குகிறது.