இந்திய இராணுவத்தின் மிகப்பெரிய போர்ப் படையான காலாட்படையின் பங்களிப்பைப் போற்றும் வகையில் அக்டோபர் 27-ஆம் தேதி காலாட்படை தினம் கொண்டாடப்படுகிறது.
1947 ஆம் ஆண்டு இதே நாளில், சீக்கியப் படைப்பிரிவின் 1ஆவது பட்டாலியன் ஸ்ரீநகர் விமானப்படைத் தளத்தில் தரையிறங்கி, விடாமுயற்சியையும், அசாதாரணமான துணிச்சலையும் வெளிப்படுத்தி, பழங்குடியினரின் உதவியுடன் காஷ்மீரைத் தாக்கிய பாகிஸ்தான் இராணுவத்தின் தீய எண்ணங்களை முறியடிக்கும் 'சுவராக' மாறியது. இதனால், ஜம்மு காஷ்மீர் மாநிலம் காப்பாற்றப்பட்டது.
நாட்டுக்காக பல்வேறு போர்களில் உயிர் நீத்த காலாட்படை வீரர்களை வணங்கும் வகையில் தேசியப் போர் நினைவுச் சின்னத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தும் நிகழ்வும் காலாட்படை தினத்தை முன்னிட்டு இன்று நடைபெறுகிறது.