தமிழ் - இரண்டாம் தாள்
காலம்:2 1/2மணி பிரிவு - Ⅰ மதிப்பெண்கள் : 100
காலம்:2 1/2மணி பிரிவு - Ⅰ மதிப்பெண்கள் : 100
(மதிப்பெண்கள் :20)
பகுதி – 1
அனைத்து வினாக்களுக்கும்
விடையளிக்க.
உரிய
விடையைத் தேர்ந்தெழுதுக. 5×1=5
(1) ஒருபொருட் பன்மொழிக்கு
எடுத்துக்காட்டு
(அ)பாம்பு பாம்பு (ஆ) மடமட (இ) மீமிசை ஞாயிறு (ஈ) சோறு உண்டான்.
(2)வினைத்தொகை பயின்று வந்துள்ள சொற்றொடரைத் தேர்ந்தெழுதுக.
(அ)அருவிலை (ஆ) மடக்கொடி (இ)உகுநீர் (ஈ) வெஞ்சினம்.
(3)உரிச் சொற்றொடரைத் தேர்ந்தெழுதுக.
(அ)உறுவேனில் (ஆ) நின்கேள் (இ) நீர்முகில் (ஈ) இரவுபகல்.
(4)பொதுமொழி அல்லாத சொல்லைத் தேர்ந்தெழுதுக.
(அ)எட்டு (ஆ)செம்போத்து (இ) வேங்கை (ஈ) பலகை.
(5)கீழ்க்கண்டவற்றுள் பண்புத்தொகையைத் தேர்ந்தெழுதுக.
(அ)ஈன்குழவி (ஆ) திண்டிறல் (இ) உற்றநோய் (ஈ) வாழ்க.
பகுதி – 2
கோடிட்ட
இடங்களை நிறைவு செய்க. 5×1=5
(6)ஒருபொருள் குறித்துவரும் சொற்களையே __________என்பர்.
(7)நன்னூல் கிடைக்குமா எனக் கடைக்காரரிடம் கேட்பது _________விடை.
(8)நண்பகல் என்பது ___________திணைக்குரிய சிறுபொழுது.
(9)மொழியமிழ்து – இவ்வுருவகத்துக்கான உவமை _________.
(10) மரவேர் என்பது ____________விகாரம் ஆகும்.
பகுதி – 3
சுருக்கமாக
விடையளிக்க 10×1 = 10
(11)புரிந்த – இச்சொல்லிலுள்ள விகுதியை எடுத்தெழுதுக.
(12)கீழ்க்காணும் தொடரிலுள்ள ஒருமை பன்மைப் பிழைகளை நீக்கி எழுதுக.
இயங்குருப்
படங்களைக் குழந்தைகள் விரும்பிப் பார்க்கின்றது.
(13)கீழ்க் காணும் தொடரிலுள்ள சந்திப்பிழைகளை நீக்கி எழுதுக.
ஆசிரியர்
பெயரை தம் பெயருடன் சேர்த்து பீமாராவ் அம்பேத்கராக மாறினார்.
(14)கீழ்க்காணும் தொடரில் அமைந்துள்ள பிறமொழிச் சொல்லுக்குரிய தமிழ்சொல் எழுதுக.
பஜாரில் கூட்டம் ஜாஸ்தி.
(15)கீழ்க்காணும் தொடரிலுள்ள வழூஉச் சொற்களை நீக்கி எழுதுக.
குமார் காத்துக்காக தாவாரத்தில்
படுத்து உறங்கினான்.
(16)கீழ்க்காணும் உரைப்பகுதிக்குப் பொருத்தமான நிறுத்தற்குறியிட்டு எழுதுக.
வருக வணக்கம் இருவரும் இணைந்து வந்துள்ளீர்கள்
என்ன செய்தி
(17)பொய்யா விளக்கு – இலக்கணக் குறிப்பு தருக.
(18)கீழ்க்காணும் மரபுத் தொடர் குறிக்கும் பொருள் யாது?
இளங்கோவின் குடும்பத்தினர் வாழையடி வாழையாக,
வேளாண்மைத் தொழில் செய்து வருகின்றனர்.
(19)நானிலம் – இத்தொகைச் சொல்லை விரித்தெழுதுக.
(20)இளமையில் கல் – இத்தொடரைச் செய்தித் தொடராக்குக.
பிரிவு - Ⅱ
(மதிப்பெண்கள் :10)
5வினாக்களுக்கு மட்டும் விடையளிக்க. 5×2=10
(21)அடுக்குத் தொடருக்கும்,இரட்டைக்கிளவிக்கும் உள்ள வேறுபாடு யாது?
(22)வினா எத்தனை வகைப்படும்? அவை யாவை?
(23)சிற்றோடை – பிரித்தெழுதிப் புணர்ச்சிவிதி தருக.
(24)சிறுபொழுதுஎத்தனை வகைப்படும்? அவை யாவை?
(25)ஆசிரியப்பாவின் பொது இலக்கணம் யாது?
(26)சொற்பின்வருநிலையணியை எடுத்துக்காட்டுடன் விளக்குக.
(27)செம்மொழி – பிரித்துப் புணர்ச்சி விதி தருக.
பிரிவு - Ⅲ
(மதிப்பெண்கள் : 50)
பகுதி – 1
கீழ்க்காணும்
வினாக்களுள் இரண்டனுக்கு விடையளிக்க 2×5=10
(28)கீழே உள்ள பாடலில் பயின்றுவரும் பாவகையைக் குறிப்பிட்டு,அதன் இலக்கணம் எழுதுக.
அறிந்தானை ஏத்தி அறிவாங் கறிந்து
சிறந்தார்க்குச் செவ்வ னுரைப்ப – சிறந்தார்
சிறந்தமை ஆராய்ந்து கொண்டு.
(29)வஞ்சப்புகழ்ச்சி அணி அல்லது உவமை அணியைச் சான்று தந்து விளக்குக.
(30)கீழ்க்காணும் குறட்பாவிற்கு அலகிட்டு வாய்பாடு தருக.
இடும்பைக்கு இடும்பை படுப்பர் இடும்பைக்கு
இடும்பை படா அதவர்.
பகுதி
– 2
எவையேனும்
இரண்டனுக்கு ஒவ்வொன்றும் அரைப்பக்க அளவில் விடையளிக்க.2×5 =10
(31)எம்.ஜி. இராமச்சந்திரனின் பிறப்பு மற்றும் நடிப்புத் துறையில் அவருக்குக் கிடைத்த வாய்ப்புப்
பற்றி எழுதுக.
(32) அண்ணா எழுதிய கடிதத்தில் இடம்பெறும் கருத்துகள்
நான்கினை எழுதுக.
(33)புகை – உங்களுக்குப் பகை. பேஷ்! இதை நீயே படிச்சுக் காட்டு.
கமலநாதன் புன்னகை மறையத் துவங்கியது.
(அ)கமலநாதன் முகத்தில் புன்னகை மறைய கோகிலா கூறியதையும், அதற்கு அவர் கூறிய மறுமொழியும்
யாவை?
பகுதி – 3
(34)
(அ) கீழ்க்காணும் பத்தியில் அமைந்துள்ள ஆங்கிலச் சொற்களைத் தமிழாக்கம்செய்க.3+2=5
ஆஸ்பத்திரியில்
அவுட்பேசண்ட் வார்டில் டாக்டரைப் பார்த்தேன்.டாக்டர் பேசண்டுகளுக்கு மெடிசன் கொடுத்துக்
கொண்டிருந்தார்.
(ஆ)கீழுள்ள அரபு எண்களைத் தமிழெண்களாக மாற்றுக.
87,
321, 405, 69.
(35)
(அ) கீழ்க்காணும் ஆங்கில உரைப்பத்தியைத் தமிழாக்கம் செய்க. 3+2=5
Schools
do not stop with teaching the children, the lessons alone do more .It is in the
schools.That
the boys and girls form some regular habits. They learn to behave in an orderly
way. They are corrected whenever they go wrong.
(ஆ)கீழ்க் காணும் ஆங்கிலப் பழமொழிகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகளை எழுதுக.
1.
Birds of the same feather flock together.
2.
Prevention is better than cure.
பகுதி – 4
கீழ்க்காணும்
வினாக்களுள் ஒன்றனுக்கு விடையளிக்க. 5
(36)(அ) கீழே கொடுக்கப்பட்டுள்ள கதையை நிறைவு செய்து பொருத்தமான தலைப்பை இடுக.
கீழ்வானம்
சிவக்கத் தொடங்கியிருந்தது. பறவைகள் ஒலியெழுப்பியவாறே தத்தம் கூடுகளை விட்டுப் பறக்கத்தொடங்கின.
அந்த விடியற்காலை நேரத்தில் திடீரென்று வானில் ஓர் ஒளி தோன்றியது.அப்போது_________________________________
(அல்லது)
கீழ்க்
காணும் தலைப்பில் 8 வரிகளில் கவிதை ஒன்று எழுதுக.
பள்ளி
அல்லது எழுதுகோல்.
பகுதி – 5
(37)
கீழ்க்காணும் பாடலின் திரண்ட கருத்தை எழுதி,அப்பாடலில் அமைந்துள்ள ஏதேனும் ஐந்து
நயங்களை எடுத்தெழுதுக. 5
தமிழன்
என்றோர் இனமுண்டு
தனியே
அவர்க்கொரு குணமுண்டு
அமிழ்தம்
அவனுடை மொழியாகும்
அன்பே
அவனுடை வழியாகும்
மானம்
பெரிதென உயிர்விடுவான்
மற்றவர்க்காகத்
துயர்படுவான்
தானம்
வாங்கக் கூசிடுவான்
தருவது
மேல் எனப் பேசிடுவான்.
-
நாமக்கல்
கவிஞர் இராமலிங்கம் பிள்ளை
பகுதி – 6
(38)படிவம் நிரப்புதல் 5
பகுதி
– 7
(39)
(அ) கீழ்க்காணும் வாழ்வியல் சூழலைப்படித்து விடையளிக்க 3+2=5
எழிலனும்
தமிழரசனும் நெருங்கிய நண்பர்கள்.ஆனால் எழிலனுக்கு தமிழரசன் மட்டுமெ நண்பன். தமிழரசனுக்கோ
வகுப்பில் மட்டுமின்றி பள்ளியிலும் அனைவரும் நன்பர்களே.பார்க்கும் யாவரிடத்திலும் அன்பாகவும்
நட்பாகவும் பழகுவான்.பெரியவர்களிடமும் மரியாதையுடன் நடந்துகொள்வான்.தன்னால் முடிந்த
உதவிகளும் செய்வான். எழிலனும் நல்ல மாணவன் தான். ஆனால் தானாகச் சென்று பழகமாட்டான்.வினாவுக்கு மட்டுமே விடை சொல்வான்.தமிழரசனிடம் எல்லோரும் நெருங்கிப் பழகுவது எழிலனுக்கு
வேதனையைத் தந்தது.
Ⅰ.இவர்களுள் யாரைப்போல் இருப்பது நல்லது?
Ⅱ.தன்னிடம் அனைவரும் நெருங்கி பழகுவதற்கு எழிலன் என்ன செய்ய வேண்டுமென்று நீ நினைக்கிறாய்?
Ⅲ.உனக்கு நண்பர்கள் உண்டா? எத்தனை பேர்?
(ஆ)கீழ்க்காணும் சூழலைப்படித்து வினாக்களுக்கு நும் கருத்தை எழுதுக.
விழிமாற்றுத் திறனாளி ஒருவர் சாலையைக்
கடப்பதற்காக நெடுநேரமாக்க் காத்துக் கொண்டிருக்கிறார்.அந்த வழியாகப் பலரும் கடந்து
செல்கின்றனர். ஆனால் அவருக்கு உதவ ஒருவரும் முன்வரவில்லை.
(ⅰ)இதுபோன்றதொரு சூழலில் நீ எவ்வாறு செயல்படுவாய்?
(ⅱ)பிறருக்கு உதவுவதால் வெளிப்படும் பண்பு யாது?
பிரிவு - Ⅳ
(மதிப்பெண்கள்
:20)
பகுதி – 1
கீழ்க்காணும்
வினாக்களுள் ஒன்றனுக்கு விடையளிக்க. 10
(40)(அ)நும் ஊரில் குடிநீர் வசதி வேண்டி ஊராட்சி ஒன்றிய ஆணையாளருக்கு கூட்டு விண்ணப்பம்
வரைக.
(அல்லது)
(ஆ)நும் பள்ளி இலக்கிய மன்ற ஆண்டுவிழாவிற்கு வருகை தரும் புலவர் ஒருவருக்கு வரவேற்பு மடல்
வரைக.
பகுதி – 2
கீழுள்ள
வினாக்களுள் ஏதேனும் ஒன்றனுக்குக் குறிப்புகளைக் கொண்டு ஒருபக்க அளவில் கட்டுரை எழுதுக.தலைப்பு ஒன்று தருக. 10
(41)(அ) கணினி – தோற்றம் – வளர்ச்சி –இணையம் –இணையதள வசதி- கணினி வழிக்கல்வி- கணினியின்
வியத்தகு சாதனைகள் – பயன்படும் துறைகள் – உலகம் உள்ளங்கையில்.
(அல்லது)
(ஆ)பாரதியார் – பிறப்பும் இளமையும் – விடுதலை வேட்கை – தேசியக் கவிஞர் – முன்னறி புலவர்-சமுதாயத்
தொண்டு- இறப்பு.
--------------------------------