1. இலங்கை இறுதிக்கட்டப்
போரில் மனித உரிமை மீறல் மற்றும் போர்க்குற்றம் தொடர்பான தீர்மானத்தின் மீதான
விவாதத்தில், இலங்கைக்கு எதிராக 8 நாடுகள்
விவாதம் செய்தன.
2. ஜிம்பாப்வேயில் நிலவிவரும்
நிதிப்பற்றாக்குறையால், இங்கு
விரைவில் தேர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை என்று ஜிம்பாப்வே நிதியமைச்சர்
டெண்டாய் பிட்டி கூறியுள்ளார்.
3.மும்பைத் தாக்குதல் தொடர்பாக விவகாரத்தில், விசாரணை நடத்தி அறிக்கை பதிவு செய்ய,
பாகிஸ்தான் நாட்டின் நீதித்துறை கமிஷனைச் சேர்ந்த 8
பேர் கொண்ட குழு மும்பை வந்தது.
4. உத்தரப்பிரதேச
மாநிலத்தில், சட்டம் ஒழுங்கு,
நிர்வாகத்திற்கு முன்னுரிமை வழங்கப்படும் என்று அம்மாநில முதல்வர் அகிலேஷ் யாதவ் தெரிவித்தார்.
5. தமிழக மக்களவை உறுப்பினர்கள் பற்றி விமர்சனம் செய்ததற்காக
டெல்லியில் உள்ள இலங்கை தூதர் கரியவாசம் மன்னிப்பு
கேட்டார்
6.இந்தியாவின் வரவு
செலவுத் திட்டம், இன்று நாடாளுமன்றத்தில் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியால், முன் வைக்கப்படுகிறது.
7. உத்தரப்பிரதேசத்தில், நடுநிலைப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு சிறிய வகைக் கணினி வழங்கப்படும் என அம்மாநில முதன்மை செயலாளர் அறிவித்துள்ளார்.
8. அன்னா ஹசாரே குழுவின் அடுத்தகட்ட போராட்டம்
குறித்து, குழு உறுப்பினர்களுடன் ஹசாரே இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
9. ஆசியக் கோப்பை மட்டைப்பந்துப் போட்டியில் இலங்கைக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
10. இந்தியன் வேல்ஸ் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின்
காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் பயஸ் - செக் குடியரசின் ராடேக் ஸ்டெபனெக் இணை
தோல்வி அடைந்து வெளியேறியது.