1. இலங்கை இனப்பிரச்னைக்கு, வெளிநாடுகள் கூறும்
யோசனைகளை ஏற்கமாட்டோம் என்று, அந்நாட்டு அதிபர் மகிந்த
ராஜபட்ச தெரிவித்தார்.
2. அமெரிக்கப் பொருளாதாரம், உறுதியாகவும்,
வேகமாகவும் மீண்டெழுவதாக அதிபர் பராக் ஒபாமா தெரிவித்துள்ளார்.
3. ஈரான் மீது, அமெரிக்கா உள்ளிட்ட எதிரி நாடுகள்
தாக்குதல் நடத்துவதற்கு, எந்த நாடாவது இடம் கொடுத்தால்,
அந்நாட்டின் மீது ஈரான் தாக்குதல் நடத்தும் என இராணுவம் எச்சரித்துள்ளது.
4. இதர பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில்
உட்பிரிவுகளை ஏற்படுத்த வேண்டும் என்று மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித்
தெரிவித்துள்ளார்.
5. புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை, எளியோருக்கு
தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் உதவ வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங்கின்
மனைவி குருசரண் கௌர் வலியுறுத்தினார்.
6. நமது நாட்டில் மகளிரை,துர்கா, காளி, லட்சுமி போன்ற தெய்வங்களுடன் ஒப்பிட்டு
கவுரவிக்கிறார்களே தவிர, அவர்களுக்கு சுதந்திரம் அளிப்பதில்லை
என, மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை
இணையமைச்சர் புரந்தேஸ்வரி, வேதனையுடன் தெரிவித்தார்.
7. தைப்பூசத் திருவிழாவை முன்னிட்டு, பழனியில் இன்று
திருக்கல்யாண வைபவமும், வெள்ளித்
தேரோட்டமும் நடைபெறுகின்றன. இதைத் தொடர்ந்து, நாளை தைப்பூசத்
தேரோட்டம் நடைபெறுகிறது.
8.மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், இலவசமாக மனு எழுதுவதன் மூலம்,
மக்கள் அன்றாடம் சந்திக்கும் பிரச்னைகளை அறிந்து கொள்ள,பாரதியார் பல்கலைக்கு உட்பட்ட கல்லூரிகளின், நாட்டுநலப் பணித் திட்ட
மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
9.நம் நாட்டு
மக்களுக்கு, அடுத்த 10 ஆண்டுகளில்,
50 கோடி வீடுகள் தேவையென, இந்தியத் தொழிற்சாலை
மற்றும் வர்த்தகக் கழக கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
10. மழை காரணமாக டக்வொர்த் லூயிஸ் விதிப்படி 32
ஓவர்களாகக் குறைக்கப்பட்ட, முத்தரப்பு மட்டைப்பந்துத் தொடரின்
முதல் ஆட்டத்தில், இந்தியாவை 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா.