1993 இல் நிறுவப்பட்ட சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் ( Union for International Cancer Control - UICC) கடந்த 2000 ஆம் ஆண்டில் உலக புற்றுநோய் தினத்தை உருவாக்கியது.
உலக அளவில் புற்றுநோய் குறித்த விழிப்புணர்வு மற்றும் கல்வியை புகட்டுவதும், அதுகுறித்த சீரான நடவடிக்கைகளை மேற்கொள்ள வைப்பதும் இந்த நாளின் நோக்கம் ஆகும். புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கான முக்கியத்துவத்தை உலக புற்றுநோய் தினம் குறிக்கிறது.
இந்த நாளில் மேற்கொள்ளப்படும் பிரச்சாரங்கள், நோய் குறித்த தவறான கருத்துக்கள், புற்றுநோயைச் சுற்றியுள்ள கட்டுக்கதைகள் மற்றும் அறிகுறிகளை அடையாளம் காணவும், சரியான சிகிச்சையைப் பெறவும் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையைக் குறைக்கவும் மக்களுக்குக் கற்பிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன.
Theme : Close the Care Gap
'க்ளோஸ் தி கேர் கேப்' பிரச்சாரத்தின் முதல் ஆண்டு, உலகம் முழுவதும் உள்ள புற்றுநோய் சிகிச்சையில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைப் புரிந்துகொள்வது மற்றும் அங்கீகரிப்பது பற்றியது. இது திறந்த மனதுடன், சவாலான அனுமானங்கள் மற்றும் கடினமான உண்மைகளைப் பார்ப்பது பற்றியது.
சமத்துவமின்மை, வருமானம், கல்வி, இருப்பிடம் மற்றும் இனம், பாலினம், பாலியல் நோக்குநிலை, வயது, இயலாமை மற்றும் வாழ்க்கை முறை ஆகியவற்றின் அடிப்படையிலான பாகுபாடு நீக்கப்படவேண்டும்.
நோய்க் கட்டுப்பாடு மற்றும் முன்னெச்சரிக்கை மையம் (Centers for Disease Control and Prevention - CDC) அளித்த தகவலின் படி உலகில் ஆண்களின் மரணத்திற்கு இரண்டாவது காரணமாக இருப்பது கேன்சர். கேன்சர் நோய் குறித்தும் அதன் அறிகுறிகள் குறித்து நாம் தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
இங்கு கொடுக்கப்பட்டுள்ள கேன்சர் அறிகுறிகள் குறித்த பட்டியல் உள்ள அறிகுறிகள் உங்களுக்கு இருந்தால் அது கட்டாயம் கேன்சராக தான் இருக்கும் என்பதில்லை. அதே நேரத்தில் ஒரு சில அறிகுறிகள் மட்டுமே இருப்பதால் உங்களுக்கு கேன்சருக்கான வாய்ப்பு இல்லை என்பதுமில்லை. இந்த அறிகுறிகள் இருந்தால் நீங்கள் உங்கள் வீட்டின் அருகில் இருக்கும் டாக்டரை அணுகுவது நல்லது.
நாம் வெளியில் செல்லும் போது நம் தோல்கள் அதிகமாக யூவி கதிர்கள் மற்றும் பலவிதமான கதிர்களை நேரடியாக எதிர்கொள்கிறது. அதில் ஆண்களுக்கு அதிகமாகத் தோல் கேன்சர் ஏற்படுவதாக CDC தெரிவித்துள்ளது. இந்த தோல் கேன்சர் இருப்பதற்கான அறிகுறிகள், குடும்பத்தில் முன்னோர்களுக்குத் தோல் கேன்சர் இருப்பது, அதிக எண்ணிக்கையிலான மச்சங்கள், வழக்கத்திற்கு மாறான மச்சங்கள், வெளிர் நிற தோல், தோல் நிறத்தில் மாற்றம் ஏற்படுதல் ஆகியன அறிகுறிகள் இவ்வாறான மாற்றம் எல்லாம் கேன்சர் எனச் சொல்லி விட முடியாது சில மாற்றங்கள் கேன்சராக இருக்கக்கூடும்.
கேன்சர் தொடர்பான மரணங்களில் 8வது முக்கியமான காரணம் சிறுநீரக கேன்சர். சிறுநீரக புற்றுநோய்க்கான முதல் அறிகுறி சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல், இது ஏற்படும் போது வலியோ, எரிச்சலோ எதுவும் இருக்காது. ஆனால் சிறுநீரில் ரத்தம் கலந்து செல்லுதலைக் கட்டாயம் முக்கிய பிரச்சனையாக எடுத்து சோதனை செய்து கொள்வது நல்லது. சிறுநீரில் ரத்தம் கலந்து செல்லும் போது சிறுநீர், ஆரஞ்சு, பிங்க், மற்றும் சிவப்பு நிறத்தில் வெளியேறும். அதே நேரத்தில் சிறுநீரில் ரத்தம் கலந்து வெளியேறுதல் கேன்சருக்கான அறிகுறி மட்டுமல்ல சிறுநீரக கிருமித் தொற்று, சிறுநீரக கல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கும் இந்த அறிகுறிகள் ஏற்படும்.
நம் உடலில் லிம்படிக் எனப்படும் ஒரு அமைப்பு இருக்கிறது. நம் உடலில் உள்ள தேவையில்லாத விஷயங்களை சேகரித்து அதை உடலில் ஒரே இடத்தில் வைத்துக் கட்டியாக மாற்றி வெடிக்க வைத்து வெளியேற்றி விடும். இது பெரும்பாலும், அடிவயிறு, கழுத்து, மற்றும் அக்குள் பகுதியில் ஏற்படும். உங்கள் உடலில் இது போன்ற கட்டிகள் ஏற்பட்டு 2 முதல் 4 வாரங்களுக்குள் தானாகச் சரியாகவில்லை என்றால் உடனடியாக நீங்கள் டாக்டரை அணுகுவது நல்லது. இப்படியான கட்டிகள் கேன்சர் கட்டிகளான மாற வாய்ப்புள்ளது. இவ்வாறான கட்டிகளை லிம்போனா கட்டிகள் என மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது.
ஆண்களுக்கு விரைப்பிடையில் ஏற்படும் கட்டி டிஸ்டிகுலர் கேன்சராக இருக்கக்கூடும் என டாக்டர்கள் எச்சரித்துள்ளனர். விரைப்பையில் கட்டி எற்படுதல் அல்லது வழக்கத்திற்கு மாறாகக் கனமாக இருத்தல், ஆகியவை இந்த கேன்சருக்கான அறிகுறிகள். இந்த பிரச்சனை இருந்தால் உடனடியாக டாக்டரை அணுகுவது நல்லது. இந்த கேன்சர் ஒரே நாளில் உங்கள் வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்திவிடும் அதனால் இதில் கவனமாக இருக்க வேண்டும்.
வாய் அல்லது உதடு பகுதியில் திடீரென புண் ஏற்பட்டு நீண்ட நாட்களாக ஆறாமல் இருப்பது, அந்த புன்னை சுற்றி வெள்ளை அல்லது சிவப்பு நிறத்தில் வருவது வாய் கேன்சருக்கான அறிகுறிகளாகும். இவ்வாறான அறிகுறிகள் இருந்தால் பொதுவான டாக்டர்கள் அல்லது பல் மருத்துவர்களைத் தொடர்பு கொள்வது நல்லது. இந்த கேன்சர் வருவதற்கான முக்கியமான காரணம் அதிகமாகப் புகையிலை அல்லது மதுப்பழக்கம் இருப்பது காரணமாக இருக்கும்.
சிலருக்கு திடீரென எடைக்குறைவு ஏற்படலாம். அதாவது அவர்கள் அதற்காக எந்த விதமான முயற்சியும் எடுக்காமல் தானாக உடல் எடை குறைந்தால் அது கட்டாயம் கவனிக்கப்பட வேண்டிய விஷயம். மருத்துவர்கள் ஒரு சராரி மனிதனின் எடையிலிருந்து 6-12 மாதங்களில் 5சதவீதமான எடை குறைந்தால் எந்த வித திட்டமிடலும் இல்லாமல் அவர்களுக்கு ஏதேனும் பிரச்சனை இருப்பதாக அர்த்தம் எனத் தெரிவித்துள்ளார். பல்வேறு விதமான கேன்சர்களுக்கு உடல் எடை குறைவே ஒரு விதமான அறிகுறியாகும். இதைத் தவிர வேறு எந்த அறிகுறிகளும் இல்லாமல் கேன்சர் உள்ளேயே இருந்து உடல் எடையை மட்டும் பாதித்து வரலாம் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
மார்பு பகுதியில் மாற்றம் ஏற்படுவது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் கேன்சருக்கான அறிகுறிதான். பெரும்பாலும் முன்னோர்கள் வழி மூலமாக இந்த கேன்சர் வருவதற்கான வாய்ப்புகள் உள்ளது. இது பெரும்பாலும் 60 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்குத் தான் ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. மார்பு பகுதியில் ஏற்படும் கட்டி இந்த கேன்சருக்கான அறிகுறியாக இருக்கலாம். இவ்வாறான அறிகுறிகள் வந்தால் கட்டாயம் டாக்டரை அணுகுங்கள்.
மலத்தில் ரத்தம் கலந்து வெளியேறுவது ஒரு வகையான கேன்சரின் அறிகுறிதான். இவ்வாறு மலத்தில் ரத்தம் வெளியேறுவது இரண்டு காரணங்களுக்காக இருக்கலாம் ஒன்று கேன்சர் மற்றொன்று மல குழாயில் ஏற்பட்ட புண்ணிலிருந்து வெளியேறும் ரத்தம். இதை இரண்டையும் குழப்பிக்கொள்ள வேண்டாம். சில நேரம் மலத்துடரன் ரத்தம் கலந்து மலர் பளீர் சிவப்பு நிறத்திலோ, லேசான பிங்க் நிறத்திலோ, கருப்பு கலந்த பிளவுன் நிறத்திலோ அல்லது அடர் கருப்பு நிறத்திலோ வெளியேறினால் அதுவும் ரத்தம் கலந்து வெளியேறும் மலமாகவே கருத வேண்டும்.
ஆண்களுக்கு விரைப்பையில் வீக்கம் ஏற்பட்டால் அவர்கள் தயங்காமல் டாக்டரை அணுகுவது முக்கியம்.விரைவீக்கம் இருந்தால் உடனடியாக டாக்டரை தொடர்பு கொள்ள வேண்டும். பீனைல் கேன்சர் என்பது மிக அரிதான நோய் 95 சதவீத மக்களுக்கு இந்த நோய் ஏற்படுவதில்லை. அரிதான வியாதி என்பதால் அசால்டாக இருந்து விடாதீர்கள் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவம் செய்வது சிறந்தது.
முதலாவதாகப் பரம்பரை. அதாவது மரபு வழி. (Genes – The DNA type) உங்கள் குடும்பத்தில் தாய், தந்தை வழி இந்த நோய் இருந்தால் நிச்சயம் அலட்சியப்படுத்தாமல் சோதனை செய்துகொள்வது மிக அவசியம்.
இதன் வீரியத்தை குறைக்கும் சக்தி ஆன்டி-ஆக்ஸிடென்ட்டுக்கு உண்டு. அதற்குத்தான் சத்துள்ள இயற்கையான காய்கறிகள், பழவகைகளையும் உண்ணச் சொல்கிறார்கள்.