1. பாகிஸ்தான் அதிபர் ஆசிபர் அலி ஜர்தாரிக்கு
எதிரான ஊழல் வழக்கை திரும்பத் தொடங்க, சுவிட்சர்லாந்துக்கு
கடிதம் எழுதும்படி பிரதமர் யூசுப் ரசா கிலானிக்கு உச்ச
நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2. அமெரிக்காவில் 26ஆண்டுகளுக்குப் பின் அந்நாட்டில் புதிய அணுமின் நிலையங்கள் துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
3.
இலஞ்சப் புகாரை அடுத்து, 74 வயதான,தென்கொரியா நாடாளுமன்றத் தலைவர் பார்க் ஹீ-டி, பதவி விலகினார்.
4. குடியரசுத் தலைவர் மாளிகையின்“மொகல் கார்டன்” பொதுமக்கள் பார்ப்பதற்காக
பிப்ரவரி 10 முதல் மார்ச் 15 ஆம்
தேதி வரை திறக்கப்பட்டிருக்கும்.
5. குளிர்பதனக் கிடங்குகள் மேம்பாட்டிற்கான தேசிய மையம் அமைக்க,
மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான தொகுப்பு நிதியாக ` 25 கோடி ரூபாயையும்
வழங்கியுள்ளது.
6. பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் வைக்கப்பட்டுள்ள
பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி, வரும் 20ஆம் தேதி துவங்குகிறது.
7. பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான சார்க் அமைப்பு நாடுகளின் உச்சி
மாநாட்டில் பாகிஸ்தானும், வங்கதேசமும் பங்கேற்காமல்
புறக்கணிப்பு செய்துள்ளன.
8. முல்லைப் பெரியாறு அணையில்,
நீரின் அழுத்தத்தை அளவிடும் கருவியைப் பொருத்தும் கேரளத்தின் முயற்சியை, தடுத்து நிறுத்த வேண்டும் என்று, பிரதமருக்குத்
தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
9.
கல்வி கற்பதில்
மந்தமாக உள்ள, குழந்தைகளை
கண்டறிவது எப்படி என்பது தொடர்பான, இரண்டு நாள் பயிற்சி
முகாம், கவுண்டம்பாளையத்தில் நடந்தது.
10. ரோகித் சர்மாவிற்கு,வாய்ப்பு அளித்தால்,
முன் வரிசையில் இருக்கும் சேவக், சச்சின்
அல்லது காம்பிரை நீக்க வேண்டிய இக்கட்டான நிலை உருவாகியுள்ளது. இதன்படி
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த போட்டியில் சச்சினுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனத்
தெரிகிறது.