1. ஈரான் அரசு ஹோர்முஸ் நீரிணையை மூடினால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயரும் என்று சர்வதேச செலாவணி
நிதியம் (IMF) எச்சரித்துள்ளது.
2. இராக்கிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதற்கு முக்கியக் காரணமே, அந்நாட்டின்
பொருளாதார நிலைதான் என்று அல்-காய்தா தெரிவித்துள்ளது.
3. தோட்டக்கலைத் துறையில் அதிக விளைச்சல் தரும், உயர் ரக கனகாம்பரம், சவுக்கு மரக்கன்றுகளை கண்டு பிடித்து, சாதனை
படைத்த புதுச்சேரி கூடப்பாக்கம் விவசாயி வெங்கடபதிக்கு, பத்மஸ்ரீ
விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
4. தேர்தலில் மக்கள்
வாக்களிப்பதை கட்டாயமாக்க பாஜக மூத்த தலைவர் அத்வானி ஆதரவு தெரிவித்துள்ளார்.
5. மணிப்பூர் மாநிலத்தில் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான பரப்புரை வியாழக்கிழமை மாலை முடிவடைந்தது. அங்கு சனிக்கிழமை தேர்தல்
நடைபெறுகிறது.
6. ஒலிம்பிக் மற்றும் சர்வதேச அளவிலான
போட்டிகளில், பதக்கம் பெறும் அளவுக்கு சிறந்த விளையாட்டு
வீரர், வீராங்கனைகளை உருவாக்கும் வகையில் ஒரு திட்டத்தை
ரூ.1.25 கோடி நிதியில் தொடங்க
தமிழக முதல்வர் உத்தரவு.
7. தமிழகப் பள்ளிக்
கல்வி, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக என்.ஆர்.சிவபதி நியமனம்
செய்யப்பட்டுள்ளார்.
8. நகரங்களில் புறவழிச் சாலைகள் அமைக்கும் திட்டத்துக்காக நிலங்களைக்
கையகப்படுத்துதல் போன்ற பணிகளுக்காக ரூ.152.78 கோடியை
ஒதுக்கி முதல்வர் உத்தரவு.
9. நேற்று வ.உ.சி., பூங்கா மைதானத்தில் நடந்த, குடியரசு தின விழாவில், பயனாளிகள் 136 பேருக்கு ரூ.82 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான,அரசு நலத் திட்ட உதவிகள்
வழங்கப்பட்டன.
10. அடிலெய்டு டெஸ்டில், துணிச்சலாகப் போராடிய இளம் விராத் கோஹ்லி
மட்டும், சதம் அடித்து ஆறுதல் தந்தார். தற்போது, இந்திய அணி இக்கட்டான நிலையில் உள்ளது. -பாரதிஜீவா
Free Code Script