1. எகிப்தில், ஹோஸ்னி முபாரக்கின்
வெளியேற்றத்திற்குப் பின் நேற்று, தேர்தலில்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பங்கேற்ற பாராளுமன்றத்தின் முதல் கூட்டம் நடந்தது.
2. நாடு திரும்ப உள்ள பாகிஸ்தான் முன்னாள்
அதிபர் முஷாரப்பை கைது செய்ய, அந்நாட்டு பாராளுமன்றத்தில் தீர்மானம்
நிறைவேற்றப்பட்டுள்ளது.
3. தேசிய மனித உரிமை ஆணையத்தில், இன்னும் 15 ஆயிரத்து 400
புகார்கள் இன்னும் தீர்க்கப்படாமல் நிலுவையில் உள்ளன.
4. நடைபாதைகளிலும்,
திறந்தவெளிகளிலும், கடும் பனிப்பொழிவில்
படுத்துத் தூங்கும் மக்களுக்கு, இரவு நேர தற்காலிகத் தங்கும் வசதிகளை, மாநில அரசுகள் அமைத்துத் தர
வேண்டும் என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
5. சூரிய
ஒளி மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தை, குறைந்த விலைக்கு
கொடுக்க, மத்திய அரசு அனைத்து முயற்சிகளையும் எடுத்து வருவதாக
மைய மின் துறை அமைச்சர் சுசீல்குமார் சிண்டே அறிவிப்பு.
6. இந்திய கடற்படைக்கு அணுசக்தியில் இயங்கும் நீர்மூழ்கிக்
கப்பலை 10 ஆண்டு குத்தகை அடிப்படையில்,
ரஷ்யா அளித்துள்ளது இதற்கு 90 கோடி
அமெரிக்க டாலரை இந்தியா அளிக்கும்.
7. சென்னை வெளிவட்டச் சாலைத் திட்டப் பணியின் இரண்டாம் கட்டமாக, நெமிலிச்சேரி முதல் மீஞ்சூர் வரை சாலை அமைக்க ரூ. 1,075 கோடியை ஒதுக்கீடு செய்து,தமிழகமுதல்வர் உத்தரவு.
8. மக்கள் நலப் பணியாளர்களை
பணி நீக்கம் செய்த தமிழக அரசின் உத்தரவு செல்லாது என்று சென்னை உயர் நீதிமன்றம்
தீர்ப்பளித்துள்ளது.
9. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின், கலப்பு
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் மகேஷ் பூபதி - சானியா ஜோடி,
காலிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
10. இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 4ஆவது,
கடைசித் தொடர் மட்டைப்பந்துப்போட்டி அடிலெய்ட்
நகரில்,இன்று தொடங்குகிறது.
-பாரதிஜீவா.
Free Code Script