27 டிசம்பர், 2011

13/12/2011


1.இந்தியப்பெருங்கடலில் உள்ள செஷல்ஸ் தீவில் சீனா இராணுவத்தளம் அமைக்க முடிவு செய்துள்ளதாக,சீன இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
2.நாடு முழுவதும்,வேலைவாய்ப்புக்காகக் காத்திருப்போர் எண்ணிக்கை 4 கோடிப் பேருக்கும் அதிகம் என மய்ய அரசு அறிவித்துள்ளது.
3.நாட்டில், வீடற்ற அனைவரும்,இரவு நேரத்தில் தங்க போதுமான அளவு, இரவுநேரத் தங்குமிடங்கள் அமைத்துதர, மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
4.முல்லைப்பெரியாறு அணை தொடர்பான,இரு மாநில அரசுகளின் மனுக்கள் மீது இன்று உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை நடைபெறுகிறது.
5.தமிழக அரசின்,புதிய இந்துசமய அறநிலையத் துறை அமைச்சராக ஆனந்தனும், சமூகநலத்துறை அமைச்சராக வளர்மதியும் பதவியேற்றனர்.
6.முதுமலையில் நடைபெறும் யானைகள் முகாமுக்கு,தமிழகத்தின் பல பகுதிகளில் இருந்தும்,யானைகள் கொண்டுசெல்லப்படுகின்றன.
7.Tamilnadu Government  announces educational assistance to the students belonging to the various communities.
8.All seven labourers,kidnapped from a village of Bihar have been released by the Maoists.
9.The industrial production of India registered a negative growth of 5.1 percent in October,reasons the fall of stock markets.
10. Tamilnadu  government gave Rs.1 crore to the Tamilnadu Tennis Association to conduct a tournament next year.                                          -பாரதிஜீவா

Free Code Script

12/12/2011


                                                      
1. உலக பருவநிலை மாற்றம் குறித்த, ஐ.நா., வின் சர்வதேச மாநாட்டில்,
வளர்ந்த நாடுகள் தாங்கள் வெளியிடும், கார்பன் அளவைக் குறைப்பதற்கான, சட்டப்பூர்வ ஒப்பந்தத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளன.
2. கேரள முதல்வர் உம்மன் சாண்டியும், எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தனும் முல்லைப் பெரியாறு அணை தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்துப் பேசத் தீர்மானித்துள்ளனர்.
3. எதிர்வரும் மார்ச்சு மாதத்திற்குள் மின்தடை முற்றிலும் தவிர்க்கப்படும்என,தமிழகமின்துறை அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறினார். 
4. மின்சாரத்தை சேமிக்கும் விதத்தில்,கோவை மாநகராட்சி சார்பில் தெருக்களில் மின் கம்பங்களில் எல்.இ.டி., விளக்குகள் பொருத்தப்பட்டன. 
5.  ஐந்தாவது ஒருநாள் மட்டைப்பந்துப் போட்டியில் இந்தியா 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகளை வென்றது.
6. Leaders of major Opposition parties on Sunday shared the dais with anti-corruption crusader Anna Hazare during his daylong fast.
7. The Pakistani Taliban is in peace talks with the Pakistani government, a senior commander in the militant group said on Saturday.
8. A special session of Tamil Nadu Assembly will be held on December 15, to express the solidarity of the people and all political parties.
9. The Mettupalayam Road four-lane work completion is likely to skip another deadline. 
10. The State Government has sanctioned Rs. 3.95-crore for the construction of a bridge across River South Pennar to Thorappall.
                                                                                                       -பாரதிஜீவா

Free Code Script

09/12/2011


1. ஐ.நா., பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியாவுக்கு நிரந்தர இடம் கிடைக்க, ஆஸ்திரேலியா ஆதரவு அளிக்கும் என, ஆஸ்திரேலியா அறிவித்துள்ளது.
2.  அமெரிக்காவிடம் இருந்து, ஆயுத தளவாடங்களை அதிக அளவில் வாங்கும் நாடுகள் பட்டியலில், இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது என, அந்நாட்டின் ராணுவத் தலைமையகமான பெண்டகன் தெரிவித்துள்ளது.
3. அணுமின் நிலையங்கள், சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பானதாக இருப்பதுடன், மிக குறைந்த செலவில் மின்சாரம் தயாரிப்பதற்கும் உதவியாக உள்ளன என, மத்திய அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
4. கைகள் தவிர, உடலின் எந்தப் பகுதியிலும் பச்சை குத்தியிருக்கும் இளைஞர்களை, ராணுவத்தில் சேர்த்துக் கொள்வதில்லை என, இந்திய ராணுவம் தெரிவித்துள்ளது. 
5.  தமிழகத்தில் மூளை பாதிப்பு-நிமோனியா காய்ச்சல், தொண்டை அடைப்பான், ஹெபடைடிஸ் பி உள்ளிட்ட 5 நோய்களிலிருந்து குழந்தைகளைக் காக்கும் ஒரே தடுப்பூசி முறை ("பென்டாவேலன்ட்) வரும் 17-ம் தேதி அறிமுகப்படுத்தப்படுகிறது.
6. மேற்கிந்தியத் தீவுகள் அணியின் பந்துவீச்சை வெளுத்து வாங்கிய வீரேந்திர சேவக்,    219 ஓட்டங்கள் குவித்து உலக சாதனை படைத்தார். இவரது அதிரடி ஆட்டம் கைகொடுக்க, 153 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி, நான்கிற்கு ஒன்று என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது.
7. The Tamil Nadu government has decided not to attend the proposed talks on the Mullaperiyar dam dispute issue to be held in New Delhi on December 16.
8. The Kerala government moved the Supreme Court on Thursday for a direction to the Tamil Nadu government to reduce the water level in the Mullaperiyar dam from 136 ft. to 120 ft. so as to avoid any immediate calamity.
9. Traffic police personnel are the first respondent to road accidents and if well-trained they can save many lives on roads, City Police Commissioner Amaresh Pujari said.
10. The United States moves to strengthen its military alliances in Asia are not aimed at containing China, a top U.S. defence official said on Thursday.

Free Code Script

08/12/2011



1. ரஷ்யாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில், மோசடிகள், முறைகேடுகள் நிகழ்த்தப்பட்டதால் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என, சோவியத் ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மிக்கெயில் கோர்பச்சேவ் கோரியுள்ளார்.
2.  இலங்கையில், அரசு மற்றும் தமிழர்களுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுவார்த்தையில் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து நிலவி வருகின்றன. இதனால், அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 14ம் தேதி நடக்க உள்ளது.
3. குழந்தைத் திருமணத்திற்கு எதிராகப் போராடி, அவற்றை தடுத்து நிறுத்திய, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகளுக்கு, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், நேற்று தலா 10,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கினார். 
4. தமிழகத்துக்கு கூடுதலாக, ரூ25ஆயிரம் கோடி நிதியுதவி, கூடுதல் மின்சாரம், மண்ணெண்ணெய் வழங்கும்படி, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,தமிழக முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.
5. இந்திய-மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் மட்டைப்பந்துப் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

07/12/2011


1.பாகிஸ்தானுடனான அமெரிக்க உறவை மறு பரிசீலனை செய்ய வேண்டிய நேரம் வந்து விட்டதாக அமெரிக்க செனட் உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
2,இந்திய எல்லையைத் தாண்டிச் சென்ற குரங்கு ஒன்று, பாகிஸ்தான் வனத்துறையிடம் சிக்கியது. அது உளவு பார்க்க அனுப்பப் பட்டதா என அதிகாரிகள் சோதித்து வருகின்றனர்.
3.லோக்பால் மசோதாவின் வரைவு அறிக்கை, பார்லிமென்ட்டில் தாக்கல் செய்யப்படுவதற்கு, மேலும் கால தாமதம் ஆகும் என்ற தகவலை மத்திய அரசு மறுத்துள்ளது.
4. அற்ப நோக்கம் கொண்ட அரசியல்வாதிகளின் சூழ்ச்சிக்கு, அறிவுசார்ந்த கேரள மக்கள் இரையாகி விடக் கூடாது' என, தமிழக முதல்வர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
5. கூடங்குளம் அணு மின் நிலையத்தில், இரண்டு அணு உலைகள் செயல்படுவதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளதால், அரசுக்கு கூடுதலாக, 2,653 கோடி ரூபாய் செலவாகும் என, தகவல் வெளியாகியுள்ளது.
6.  இந்தியாவில் 33 விழுக்காடு வனங்கள் இருக்க வேண்டிய இடத்தில், 24 விழுக்காடுதான் உள்ள. எனவே, விவசாயிகள் மரங்களை வளர்க்க முன்வர வேண்டும் என்று, வேளாண் பல்கலை துணைவேந்தர் கருத்து தெரிவித்துள்ளார்.
7. China has, for the first time, laid direct blame at the doorsteps of Dharamshala for the at least 11 self-immolation protests.
8. Tamil Nadu Chief Minister on Tuesday ordered release of water from Veeranam, Vaniyar, Chinnar and Barur water bodies in the state.
9. Being physically fit is more important than losing weight, when it comes to reducing death risks, a new study has suggested.
10. Viswanathan Anand wriggled out of an inferior position against David Howell in the third round of the London Chess Classic at the Olympia Media Centre in London on Monday                             -பாரதிஜீவா                                                                                                     

05/12/2011


1. நேட்டோ தாக்குதல் விவகாரத்தால் அமெரிக்கா, பாகிஸ்தான் உறவு சீர்குலைவதை அனுமதிக்க முடியாது என, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் தெரிவித்துள்ளார். 
2. இந்தியாவுக்கு யுரேனியம் வழங்குவதற்கு, ஆஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான, தொழிலாளர் கட்சி அனுமதி அளித்துள்ளது. இதை, அந்நாட்டு யுரேனிய விற்பனை நிறுவனங்கள் வரவேற்றுள்ளன. 
3. அடுத்த ஐந்தாண்டுகளில், இந்திய கடற்படையில் 49 புதிய கப்பல்கள் சேர்க்கப்படும்' என, கடற்படை அதிகாரி அனில் சோப்ரா தெரிவித்துள்ளார்.
4. கூடங்குளம் மின் உற்பத்தியை துவக்க வலியுறுத்தி, தொழில் அமைப்புகள் அனைத்தும் மாநிலம் தழுவிய உண்ணாவிரத போராட்டத்தை கோவையில் வரும் 20ம் தேதி நடத்த தீர்மானித்துள்ளன.
5.திருநெல்வேலியில் சாலைகளில் பிச்சை எடுத்து திரிந்ததாக பிடிபட்ட 25 பெண்களை கைக்குழந்தைகளுடன் போலீசார் திருச்சி சிறையில் அடைத்தனர்.
6. இந்தியா, மேற்கிந்தியத்தீவுகள்,அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள்மட்டைப்பந்துப் போட்டி ஆமதாபாத்தில் இன்று நடக்கிறது. 
7.In Haryana, the Congress won the Ratia (SC) seat, while the Haryana Janhit Congress retained Adampur. 
8. Rashtriya Janata Dal has said the UPA government will either have to roll back the decision on Foreign Direct Investment  plan or face an adjournment motion in Parliament.
9. Chief Minister of Tamilnadu on Sunday demanded immediate deployment of the Central Industrial Security Force (CISF) at the Mullaperiyar dam site.
10. Tamilnadu government will implement the three per cent reservation for differently abled persons in government jobs.
                                                                                                        -பாரதிஜீவா

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...