27 டிசம்பர், 2011

08/12/2011



1. ரஷ்யாவில் சமீபத்தில் நடந்த தேர்தலில், மோசடிகள், முறைகேடுகள் நிகழ்த்தப்பட்டதால் மறு தேர்தல் நடத்தப்பட வேண்டும் என, சோவியத் ரஷ்யாவின் முன்னாள் அதிபர் மிக்கெயில் கோர்பச்சேவ் கோரியுள்ளார்.
2.  இலங்கையில், அரசு மற்றும் தமிழர்களுக்கு இடையிலான அதிகாரப் பகிர்வு குறித்த பேச்சுவார்த்தையில் கருத்து வேறுபாடுகள் தொடர்ந்து நிலவி வருகின்றன. இதனால், அடுத்தக் கட்ட பேச்சுவார்த்தை எதிர்வரும் 14ம் தேதி நடக்க உள்ளது.
3. குழந்தைத் திருமணத்திற்கு எதிராகப் போராடி, அவற்றை தடுத்து நிறுத்திய, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மூன்று சிறுமிகளுக்கு, ஜனாதிபதி பிரதிபா பாட்டீல், நேற்று தலா 10,000 ரூபாய் ரொக்கப் பரிசு வழங்கினார். 
4. தமிழகத்துக்கு கூடுதலாக, ரூ25ஆயிரம் கோடி நிதியுதவி, கூடுதல் மின்சாரம், மண்ணெண்ணெய் வழங்கும்படி, பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில்,தமிழக முதல்வர் வலியுறுத்தி உள்ளார்.
5. இந்திய-மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 4-வது ஒருநாள் மட்டைப்பந்துப் போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் வியாழக்கிழமை நடைபெறுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...