1. தெற்காசிய நாடுகளில், பத்தாண்டுகளில், இராணுவத்திற்கான
செலவு 50 விழுக்காடு அதிகரித்திருப்பதாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
2. பிரிட்டனில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதால், வேலைக்காக பூமியின் தென்கோடியில் உள்ள அண்டார்டிகாவுக்குக் கூட செல்ல, அந்நாட்டு
இளைஞர்கள் தயாராக உள்ளனர்.
3. பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி
நேர்மையற்றவர் என உச்சநீதிமன்றம் பகிரங்கமாகத் தாக்கியுள்ளதை
அடுத்து, இராணுவம் எச்சரிக்கை.
4. இந்தோனேசியாவின்
மேற்குப் பகுதியில், கடலில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, சுனாமி
எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
5. உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் வாக்காளர்களைக் கவர, அவர்களுக்கு வழங்க எடுத்துச்
செல்லப்பட்ட ` 28 கோடி சிக்கியுள்ளது.
6. 1.34 கோடி குடும்பங்கள் பயன்பெறும், ஏழைகளுக்கான ”முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை” தமிழக
முதல்வர் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
7. தானே புயலால் சேதமடைந்த பலா, முந்திரி மற்றும்
தென்னை போன்ற பயிர்களை மீண்டும் பயிரிட இலவச மரக்கன்றுகள் வழங்கப்படும் என்று
முதல்வர் அறிவித்துள்ளார்.
8. கூடங்குளம் அணுஉலை 3 மாதங்களில் இயங்கத்
தொடங்கும் என இந்திய அணு மின் கழகத்தின் இயக்குநர் எஸ்.ஏ. பரத்வாஜ் தெரிவித்தார்.
9. 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 111.03
அடியாக இருந்தது.
10. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நடந்தது போன்ற
சோகம் ஆஸ்திரேலிய தொடரில் ஏற்படாது. கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றி பெறுவோம்,'' என, இந்திய கிரிக்கெட் வீரர் டிராவிட் தெரிவித்துள்ளார்.
-பாரதிஜீவா
Free Code Script