1. ஆப்கானிஸ்தானில் உள்ள, நேட்டோ படைகளின் வசதிக்காக, மூடப்பட்டுள்ள
பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் சாலையை மீண்டும் திறக்க, பாகிஸ்தான்
முடிவு செய்துள்ளது.
2. அணுஉலைகளின் ஆயுட்காலத்தை, 40 ஆண்டுகளிலிருந்து, 60 ஆண்டுகளாக உயர்த்த,
ஜப்பான் அரசு திட்டமிட்டுள்ளது. இதனால், மீண்டும் அணுசக்தியை அதிகரிக்கும் நாடாக, ஜப்பான்
மாறுகிறது.
3. கோத்ரா
ரயில் எரிப்பு சம்பவத்தின் 10ஆம் ஆண்டு நினைவு தினம்
விரைவில் அனுசரிக்கப்பட உள்ளநிலையில், குஜராத் முதல்வர்
நேற்று, நல்லிணக்க உண்ணாநிலை
மேற்கொண்டார்.
4. சர்ச்சைக்குரிய ஆங்கில நாவலாசிரியர் சல்மான் ருஷ்டியின்
இந்திய பயணம், பாதுகாப்புக் காரணங்களுக்காக இரத்து செய்யப்பட்டுள்ளது.
5. நாகப்பட்டினத்தில் உள்ள துறைமுகத்தினை பொது-தனியார்
கூட்டாண்மை அடிப்படையில் ரூ.380 கோடியில் மேம்படுத்த தமிழக முதல்வர்உத்தரவு.
6. தமிழ்நாடு அரசுப் பணியாளர்
தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) தலைவராக ஓய்வு பெற்ற டி.ஜி.பி.யான ஆர்.நடராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
7. புதிய தலைமைச் செயலகக்
கட்டடத்தை மருத்துவமனையாக மாற்ற கட்டடத்தின் வடிவமைப்பில் எவ்வித மாற்றத்தையும்
செய்யக் கூடாது என்று சென்னை உயர் நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது.
8. புதுமையாகவும், மாறுபட்டும் சிந்திக்கும் திறனை மாணவர்கள் வளர்த்துக் கொள்ள
வேண்டுமென, இஸ்ரோ முதன்மை ஆலோசகர் ஒய்.எஸ். ராஜன் பேசினார்.
9. ரோகித் சர்மாவுக்கு டெஸ்ட் அணியில் வாய்ப்புத்
தர இது தான் சரியான நேரம். அடிலெய்டு டெஸ்டில் இவரை களமிறக்க வேண்டும், என, இந்திய அணியின் முன்னாள் வீரர்கள்
வெங்சர்க்கார், கிரண் மோரே ஆகியோர் வேண்டுகோள்.
10. ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரின் ஒற்றையர் பிரிவு நான்காவது
சுற்றுக்கு, ஸ்பெயின் வீரர் நடால், சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் முன்னேறினர். -பாரதிஜீவா
Free Code Script