1. கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத
அளவிற்கு, தற்போது
சூரியனின் மேல்மட்டத்தில் எழுந்துள்ள சூரியப் புயல், இன்று
பூமியைத் தாக்கும். இதனால், செயற்கைக்கோள்கள் மற்றும்
சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம்.
2. கடந்த காலங்களில் பாகிஸ்தானுடன் சிக்கலான உறவே
இருந்துள்ளது. எனவே அதை சுமுகமானதாக மாற்றுவது சுலபமான காரியமல்ல என்று, அமெரிக்காவுக்கான இந்தியத் தூதர் நிருபமா ராவ் தெரிவித்தார்.
3. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள அரசு பொது
மருத்துவமனையில் இதய நோய் உள்ளவர்களுக்கு போலியான மருந்துகளை அளித்ததில் 67
பேர் உயிரிழந்தனர்.
4.முல்லைப் பெரியாறு அணை தொடர்பான, நீதிபதி ஆனந்த் குழுவின் இறுதி அறிக்கை,
பிப்ரவரி மூன்றாவது வாரத்தில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படுகிறது
5. தண்டனைக் காலம் முடிந்த பின்னரும், இந்திய சிறைகளில் உள்ள பாகிஸ்தானியர்களை விடுவிக்காத, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
6. கன்னியாகுமரி
திருவள்ளுர் சிலைக்கு இரசாயனக்
கலவை பூசுவதற்கு சுற்றுலா அதிகாரிகள் தொல்பொருள் தொல்பொருள் துறைக்கு கடிதம்
எழுதியுள்ளனர்.
7. கட்டுமானத் தொழிலாளர்களின் குடும்ப ஓய்வூதியத்தை ரூ.400 ஆக உயர்த்தி வழங்க,தமிழக முதல்வர் ஒப்புதல்
அளித்துள்ளார்.
8. திருப்பூர் பனியன் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வு பேச்சுவார்த்தையில்
இணக்கமான முடிவு ஏற்படாததையடுத்து, மீண்டும் 27ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
9. இந்தியாவுக்கு எதிரான 4ஆவது தொடர் மட்டைப்பந்துப்
போட்டியின் முதல்நாள் ஆட்டத்தில்,
ஆஸ்திரேலியா 3 விக்கெட் இழப்புக்கு 335 ஓட்டங்கள் எடுத்துள்ளது.
10. ஆஸ்திரேலியன் ஓபன் டென்னிஸ்
போட்டியில் நேற்று நடந்த மகளிர் இரட்டையர் காலிறுதிப்
போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா- ரஷ்யாவின் எலினா வெஸ்னினா இணை வெற்றி
பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளது.
-- பாரதிஜீவாFree Code Script