1. அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் சீனாவை
விட இந்தியா பின் தங்கியிருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
2. உலக நாடுகளிலேயே கத்தார் நாடுதான் பணக்கார நாடு எனச்
செய்தி வெளியிட்டுள்ளது அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் பத்திரிகை.
3. எதிர்காலத்தில்
எண்ணெய் விலை அதிகரிப்பிற்கு, இந்தியா, சீனா, பிரேசில்
போன்ற நாடுகளில் வளர்ந்து வரும் தேவைதான் முக்கிய காரணமாக இருக்கும் என அமெரிக்க
அதிபர் ஒபாமா கருத்துத் தெரிவித்துள்ளார்.
4. பயங்கரவாதத் தாக்குதல்
உள்ளிட்ட செய்திகளை ஒலிபரப்புவதில், தொலைக் காட்சிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென்று செய்தி ஒலிபரப்பு தர ஆணையத்திடம்,
தில்லி காவல்துறை புகார் அளித்துள்ளது.
5. உத்தரப்பிரதேசத்தில் ஆறாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது. 13 மாவட்டங்களிலுள்ள 68 தொகுதிகளுக்கு,
நாளை தேர்தல்.
6. தீவிரவாதிகளைக் கைது செய்ய சிறப்பு அதிகாரம்
வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தேசிய பாதுகாப்புப்படை தலைமை
இயக்குநர் கடிதம் எழுதியுள்ளார்.
7. இத்தாலியக் கப்பலின் பாதுகாவலர்கள் மீதான விசாரணை, சரியான திசையிலேயே செல்கிறது -மத்திய
பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி
8. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், மின்வெட்டால் பாதிக்கப் படாமல் இருக்க, மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு மின்னாக்கிகள் மூலம் மின்சாரம் வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
8. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், மின்வெட்டால் பாதிக்கப் படாமல் இருக்க, மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு மின்னாக்கிகள் மூலம் மின்சாரம் வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
9. சென்னையில் இன்று முதல் மின்வெட்டு 2 மணிநேரமாவதால், 300மெகா வாட் மின்சாரம் மிச்சமாகும். தமிழகத்தின் பிற நகரங்கள்
மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு மின் வெட்டு 4 மணி நேரமாகக்
குறைக்கப்படுகிறது.
10. தில்லியில் நேற்றிரவு
நடைபெற்ற தகுதிச்சுற்றின் இறுதி ஆட்டத்தில், இந்திய ஆடவர்
ஹாக்கி அணி, எட்டிற்கு ஒன்று என்ற
கணக்கில் பிரான்சை வீழ்த்தியதன் மூலம், இலண்டன் ஒலிம்பிக் போட்டியின் பிரதான சுற்றில் விளையாடத் தகுதிபெற்றது. -பாரதிஜீவா