4 ஜனவரி, 2012

04/01/2012


                                                               

1.  ஹோர்முஸ் நீரிணை வழியாக, ஓமன் வளைகுடாவுக்குச் சென்றுள்ள அமெரிக்காவின் போர்க் கப்பல், மீண்டும் பாரசீக வளைகுடா பக்கம் வரக் கூடாது என, ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.

2. மேற்குலக நாடுகள், தங்கள் பண்பாடு மற்றும் கொள்கைகளைப் பரப்புவதன் மூலம், சீனா மீது ஆதிக்கம் செலுத்த நினைக்கின்றன. அதை, சீனா அனுமதிக்காது' என, சீன அதிபர் ஹூ ஜிண்டாவோ கூறியுள்ளார். 

3. இந்தியா மற்றும் இலங்கை நாடுகளுக்கு இடையே, பாதுகாப்பு உள்ளிட்ட விவகாரங்களில் புதிய நடவடிக்கைகளை ஏற்படுத்தும் பொருட்டு, மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ். எம்.கிருஷ்ணா, இம்மாதம் 16ம் தேதி இலங்கை செல்ல இருப்பதாக மத்திய அரசு தகவல் தொடர்பு துறை தெரிவித்துள்ளது. 

4. முல்லைப் பெரியாறு அணையில், எந்தவித பாதிப்பும் இல்லை என தெரிவித்த ஐவர் குழு, அணையின் நீர்மட்டத்தை 120 அடிக்கு குறைத்திட வேண்டுமென்ற கேரளாவின் கோரிக்கையையும் நிராகரித்து விட்டது.

5. சிட்னி தொடர் மட்டைப் பந்துப்போட்டியில்இந்திய வீரர்கள் திணறலான பந்துவீச்சை வெளிப்படுத்தி வருகின்றனர். கிளார்க், பாண்டிங் இருவரும் சதம் அடித்து அசத்த ஆஸ்திரேலிய அணி வலுவான இலக்கை நோக்கி முன்னேறுகிறது. 

6. மகாராஷ்டிரா அணிக்கு எதிரான ரஞ்சிக் கோப்பை காலிறுதியில், தமிழக அணி வலுவான முன்னிலை நோக்கி முன்னேறுகிறது.



Free Code Script

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece