1. இந்தியாவுக்கு
அளிக்கப்படும் நிதியுதவி தொடர, இங்கிலாந்துப் பிரதமர்
டேவிட் கேமரூன் தலைமையிலான அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
2. கடந்த ஒரு வாரமாக
நடந்துவரும் மக்கள் போராட்டத்தைத் தொடர்ந்து, மாலத்தீவு அதிபர் முகமது
நஷீத் நேற்று பதவி விலகினார்.
3. சிரியாவில், ஏராளமான மக்கள் இராணுவத்தினரால் கொல்லப்படுவதைக் கண்டித்து,
அங்குள்ள தூதரகத்தை அமெரிக்கா மூடிவிட்டது. இங்கிலாந்து, தனது தூதரைத் திரும்பப் பெற்றுள்ளது.
4. இராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடுங்குளிர் நிலவுகிறது. பிகானீர்,பிலானி ஆகிய
இடங்களில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 3.5 டிகிரி செல்சியஸ்
பதிவானது.
5. இந்தியா முழுவதும், 50 சி.பி.எஸ்.இ. பள்ளிகளில், சர்வதேசத் தரத்திலான படிப்புகள் அறிமுகம் செய்யப்படும் என மத்திய மனித ஆற்றல்
மேம்பாட்டுத் துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்தார்.
6. மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, மத்திய
நிதிநிலை அறிக்கையை, மார்ச்16 தேதி பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வார் என்றும், இரயில்வே பட்ஜெட்,
14ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என்றும், மத்திய அரசு அறிவித்துள்ளது.
7. தமிழகத்தில், மின்பற்றாக்குறை அதிகரிப்பால், மாநிலம் முழுவதும்,
அறிவிக்கப்பட்ட மின்வெட்டு, 8 மணி
நேரமாக, இன்று முதல் உயர்த்தப்பட உள்ளது.
8. செயற்கைக்கோள் உதவியுடன், கட்டடங்களைக் கண்காணித்து, சொத்து வரியைத் துல்லியமாக மதிப்பிடும் புதிய
நடைமுறையைக் கொண்டு வர, சென்னை
மாநகராட்சி திட்டமிட்டுள்ளது..
9. 2012-2013-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தயாரிப்பு
குறித்த ஆய்வுக் கூட்டம் தமிழக முதல்வர் தலைமையில்,தலைமைச் செயலகத்தில்
நேற்று நடைபெற்றது.
10. கடந்த ஆண்டு ஏப்ரலில்,
உலகக் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் விளையாடிய பின், முத்தரப்பு ஒரு நாள்
மட்டைப்பந்துத் தொடரின் 2-ஆவது
ஆட்டத்தில் இந்தியாவும், இலங்கையும், பெர்த்தில் இன்று விளையாடுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக