15 மே, 2026
How to calculate cut-off marks?
சர்வதேச குடும்ப தினம் - 2026
பன்னாட்டுக் குடும்ப நாள் அல்லது உலகக் குடும்ப நாள் (International Day of Families) என்பது ஆண்டுதோறும் மே 15 ஆம் நாள் கொண்டாடப்படும் நிகழ்வாகும். 1993 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை இதற்கான தீர்மானத்தை (A/RES/47/237) நிறைவேற்றி,1994 ஆம் ஆண்டில் பன்னாட்டுக் குடும்பதினத்தை அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. உலகெங்கிலும் உள்ள குடும்பங்களின் சிறந்த
வாழ்க்கைத் தரத்தையும், சமூக முன்னேற்றத்தையும் ஊக்குவிக்கும் அமைப்பின் உறுதியை வெளிப்படுத்தும்
முகமாக நிறைவேற்றியது. ஒரு குடும்பம் பிணைப்போடு இருக்க சகிப்புத்தன்மை அவசியம். ஒருவரின் பிழைகளை
ஒருவர் சகித்து, அதைச் சுட்டிக் காட்டி அல்லது தவற்றை உணர்த்தும்போது தான்
அந்தத் தவறு மாறுகிறது. குடும்ப அமைப்பு இப்படித் தான் இயங்குகிறது.
இன்றைய
காலக்கட்டத்தில் ஒருவரை ஒருவர் பொறுத்து கொள்வது குறைந்து வருகிறது.
இந்நிலையில், குடும்பங்கள் தொடர்பான பிரச்சினைகள் குறித்த
விழிப்புணர்வ அதிகரிக்கவும், குடும்பங்களைப் பாதிக்கும் சமூக, பொருளாதார
மற்றும் புள்ளிவிவரச் செயல்முறைகள் குறித்த அறிவை அதிகரிக்கவும்,குடும்பங்களின் முக்கியத்துவம், சமூகத்தில் அவற்றின் பங்கு
பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், மே 15ஆம் தேதி அன்று சர்வதேச குடும்ப தினம்
கொண்டாடப்படுகிறது.
முக்கியத்துவம்
வறுமை, சமத்துவமின்மை போன்ற குடும்பங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளை நிவர்த்தி செய்யும் அதே வேளையில் நமது சமூகத்தில் குடும்பங்களின் பங்கை அங்கீகரிப்பதில் சர்வதேச குடும்ப தினம் முக்கிய பங்கு வகிக்கிறது.
குடும்ப அமைப்பு தனிமனிதர்களின் தனிமையையும், வெறுமையையும் போக்கும். ஆனால் அதற்கு குடும்ப அமைப்பில் வெளிப்படைத்தன்மையும், ஒருவர் மற்றவர்களின் உணர்வை மதிக்கும் பண்பும் தேவை. கௌரவம், சமூகத்தின் மீதான அச்சம் காரணமாக உங்கள் குழந்தைகளின் ஆசைகளை விருப்பங்களை நசுக்கினால் அவர்கள் குடும்பத்தை வெறுக்க நேரிடும். பகுத்தறிவுடனும் அன்புடனும் குடும்பத்தை பராமரிப்போம். இனிய குடும்பதின வாழ்த்துகள்.
கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்
கல்லூரிகளுக்கு விண்ணப்பிக்கக் கடைசி நாள்
1. TNGASA – BA, Bsc, Bcom, BBA
கடைசிநாள்: 29.05.2026
மொத்த இடங்கள்:125000
website: tngasa.in
2.
TNDALU - BA., LLB,
கடைசிநாள்: 05.06.2026
மொத்த இடங்கள்: 1500
website: tndalu.ac.in
3.
TNDALU SOEL- BA.LLB (HONS.), BBA LLB (HONS), BCA LLB (HONS), BCOM LLB (HONS)
கடைசிநாள்: 05.06.2026
மொத்த இடங்கள்: 600
website: tndalu.ac.in
4.
TNEA - BE
கடைசிநாள்: 02.06.2026
மொத்த இடங்கள்: 170000
website: tneaonline.org
5.
TNAU - AGRI Degree and Diploma Agri - Tamil Medium
கடைசிநாள்: 08.06.2026
மொத்த இடங்கள்: 5000
website: tnau.ucanapply.com
5.
TNEA- B. Arch
கடைசிநாள்: 20.06.2026
மொத்த இடங்கள்: 120
website: tneaonline.org
6.
TANUVAS - BVSC and B.Tech
கடைசிநாள்: 25.05.2026
மொத்த இடங்கள்: 580
website: tanuvas.ac.in
7.
TNJFU - BFSc and B.Tech
மொத்த இடங்கள்: 600
website: tnjfu.ac.in
8.
BNYS
மொத்த இடங்கள்: 120
9. website: tnmedicalselection.net
Para
Medical Degree Diploma and Certificate courses, B.Pharm, BSc Nursing, BPT, BOT
Diploma Nursing D.Pharm
மொத்த இடங்கள்: 19000
10. MBBS, BDS, BSMS, BHMS, BUMS, BAMS with NEET Marks
மொத்த இடங்கள்: 11000
11.
Government polytechnic colleges’
மொத்த இடங்கள்: 19000
website: tnpoly.in
12. Government ITI Tamil Medium PSTM QUOTA மூலம் தமிழ் மீடியத்தில் படித்தவர்கள் எளிதில் அரசுப்பணிக்கு
செல்ல
முடியும். ஒரு
வருட
Fees Rs. 250 மட்டுமே. மாதம் ரூ 1750 உதவித்தொகை பெற்றுக் கொண்டே
படிக்கலாம்.
அருகில் உள்ள அரசு ITI க்கு நேரில் செல்லவும்
மேலும் தகவல்கள் அறிந்து கொள்ள கீழ்க்காணும் அரசு உதவி எண்களை அழைக்கவும்
📲 14417 & 14416
பிரபலமான இடுகைகள்
-
மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027 நம் விவரங்களை நாமே பதிவு செய்வோம் ( Self Enumeration) இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027...
-
ஹைட்ரஜன் ரயில் உலகில் இந்தியா நுழைந்தது சுத்தமான பயணத்தின் புதிய அத்தியாயம் இந்திய ரயில்வேயின் வரலாற்றில் ஒரு முக்கியமான மை...
-
காமராஜர் மறக்க முடியாத மனிதநேய வரலாறு ஜூலை 15 என்றதும் தமிழகம் முழுவதும் ஒரு பெயர் தான் நினைவுக்கு...
-
அப்துல் கலாம் நினைவு நாள் ஒரு எளிய மனிதரின் உன்னத வாழ்க்கைப் பயணம் ராமேஸ்வரத்தில் ஒரு எளிய தொடக்கம் 1931 ஆம் ஆண்டு அக்டோபர் 15 ஆம்...
-
ஜூலை 1, 2026 முதல் ...... 1. ஆதார் மின்னஞ்சல் புதுப்பிப்பு — இலவசமாகிறது ஜூலை 1 முதல் டிசம்பர் 31, 2026 வரை , ஆத...































