இதயக் குழாய்
அடைப்புகளைக் குறைத்து, இரத்த நாளங்களைப் பாதுகாக்க உதவும் 5 உணவுகள்
இந்தியாவில் இதய நோய் ஒரு முக்கியக் கொல்லியாக உள்ளது. உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, இந்தியாவில் ஏற்படும் மொத்த மரணங்களில் சுமார் 27% இதய நோய்களால் ஏற்படுகின்றன. நகர்ப்புறம் மற்றும் கிராமப்புறம் என இரு பகுதிகளிலும் அதிகரித்து வரும் உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு, கொழுப்பு அளவு ஆகியவை இந்த ஆபத்தை மேலும் அதிகரிக்கின்றன.
இரத்த நாளங்களின் ஆரோக்கியத்தைக் காக்கவும், மேலும் அடைப்பு ஏற்படுவதைத் தடுக்கவும் உதவக்கூடிய ஐந்து உணவுகள் இங்கே தரப்பட்டுள்ளன.
பீட்ரூட்
பீட்ரூட்டில் நைட்ரேட்டுகள் நிறைந்துள்ளன; இவற்றை
உடல் நைட்ரிக் ஆக்சைடாக மாற்றுகிறது என்கிறார் டாக்டர் வில்லியம் லீ. இது இரத்த
நாளங்களைத் தளர்த்தி, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தி, தமனிச் சுவர்களின் மீதான அழுத்தத்தைக் குறைக்கிறது. இது காலப்போக்கில்
இரத்த நாள உள்சுவருக்கு ஏற்படும் சிறு சேதங்களைக் குறைக்க உதவும் என சில ஆய்வுகள்
சொல்கின்றன.
சேர்க்கும் முறை: பச்சை பீட்ரூட்,
கீரை, எலுமிச்சை, இஞ்சி
சேர்த்து கலவை பானம் தயாரிக்கலாம்; அல்லது பீட்ரூட்டை
வறுத்து, சிறிதளவு ஆலிவ் எண்ணெய், மூலிகைகளுடன்
கீரைகளுடன் சேர்த்து உண்ணலாம்.
அக்ரூட் பருப்பு
இதில் தாவர ஒமேகா-3, ஆரோக்கியப் பாதுகாப்பு
சத்துகள் நிறைந்துள்ளன. இவை கெட்ட கொழுப்பு (LDL) ஆக்சிஜனேற்றமடைவதைக்
குறைக்க உதவும் — இது கொழுப்புப் படிவு உருவாவதற்கான முதல்
படி. அக்ரூட் பருப்பு உண்பது இரத்த நாள உள்சுவர் செயல்பாட்டை மேம்படுத்துவதாக
ஆய்வுகள் காட்டுகின்றன.
சேர்க்கும் முறை: காலை உணவுக்கு முன்
ஊறவைத்த இரண்டு-மூன்று அக்ரூட் பருப்புகள்; சாலட்களில்
நறுக்கிச் சேர்க்கலாம் அல்லது தயிருடன் கலக்கலாம்.
முட்டைக்கோஸ்
இனக் காய்கறிகளின் இளங்கீரை
முட்டைக்கோஸ், காலிஃபிளவர், முள்ளங்கி போன்ற காய்கறிகள் இளந்தளிராக இருக்கும்போது, அவற்றில் சல்ஃபோராஃபேன் போன்ற வலிமையான ஆரோக்கியச் சத்துகள் அதிக அளவில்
சேர்ந்திருக்கும். இவை இரத்த நாளச் சுவர்களின் வீக்கத்தைக் குறைக்க உதவுகின்றன.
சேர்க்கும் முறை: ஒரு சிறிய கைப்பிடி
அளவு இளங்கீரையை சாண்ட்விச், கலவை பானம் அல்லது சூப்/உணவுப்
பாத்திரங்களில் அலங்காரமாகச் சேர்க்கலாம்.
கொழுப்புச்
சத்து மீன்
மத்தி மீன் (Sardine), அயிலை மீன் (Indian Mackerel), சூரை மீன் (Tuna), சாலமன் மீன் (Salmon), கானாங்கெளுத்தி (Eel) ஆகியவற்றிலுள்ள, EPA, DHA ஆகியவை இரத்தக் கொழுப்பு அளவைக் குறைத்து, இரத்த நாள வீக்கத்தைக் குறைத்து, தமனிச் சுவரில் படிந்த கொழுப்புப் படிவு மேலும் உடையாமல் தடுக்க உதவலாம். மீன் அல்லது மீன் எண்ணெய் துணை உணவாக எடுத்துக்கொள்வது தமனி அடைப்பு நோயின் முன்னேற்றத்தை மிதமாக மெதுவாக்கக்கூடும் என ஆய்வுகள் காட்டுகின்றன.
கருப்பு கோகோ
கருப்பு கோகோவில் இயற்கையான தாவர வேதிச்சத்துகள் நிறைந்துள்ளன —
இவை நைட்ரிக் ஆக்சைடு உற்பத்தியை அதிகரித்து, இரத்தத்தில்
பிளேட்லெட்டுகள் ஒட்டிக்கொள்வதைக் குறைத்து, இரத்த நாள
உள்சுவர் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. கோகோ உண்பதால் இரத்த நாள விரிவாக்கம்
மேம்படுவதாக சில, சிறு, மனித ஆய்வுகள் காட்டுகின்றன.
சேர்க்கும் முறை: தினமும் 10–15
கிராம் அளவு 70% கருப்பு சாக்லேட், அல்லது காரமான சட்னி/சாஸ் வகைகளில் சிறிதளவு கலந்துகொள்ளலாம்.
- ஆக்ஸிஜனேற்ற அழுத்தம் & வீக்கத்தைக் குறைத்தல்:
பீட்ரூட், அக்ரூட் பருப்பு, இளங்கீரை, கோகோ — இவை அனைத்தும் ஆரோக்கியச் சத்துகளை வழங்குகின்றன. - இரத்த நாள ஆரோக்கியம் & இரத்த ஓட்டத்தை மேம்படுத்துதல்: பீட்ரூட்டின் நைட்ரேட்டுகள் + மீனின் EPA/DHA + கோகோவின் சத்துகள் நைட்ரிக்
ஆக்சைடு உற்பத்தியை ஊக்குவிக்கின்றன.
- கெட்ட கொழுப்பு ஆக்சிஜனேற்றத்தையும் பிளேட்லெட்
ஒட்டுதலையும் குறைத்தல்:
அக்ரூட் பருப்பு மற்றும் கருப்பு கோகோ இதற்கு உதவுகின்றன. - மாற்றாக அல்ல, துணையாக:
இரத்த அழுத்தக் கட்டுப்பாடு, கொலஸ்ட்ரால்-குறைப்பு மருந்துகள், உடற்பயிற்சி, புகைப்பிடித்தலை நிறுத்துதல் ஆகியவற்றுடன் சேர்த்துக்கொள்ளும் போதே இந்த உணவுகள் சிறப்பாகச் செயல்படும்.
👉நடைமுறைக் குறிப்புகள் மற்றும் எச்சரிக்கைகள்
- சிறிதாக ஆரம்பியுங்கள்: உடலுக்குப் பொருந்துகிறதா என்று பார்க்க, சில நாட்களுக்கு ஒரு புதிய உணவை
மட்டும் அறிமுகப்படுத்துங்கள்.
- மருந்து இடைவினைகளைக் கவனியுங்கள்: இரத்தத்தை மெலிக்கும் மருந்து (வார்ஃபரின் போன்றவை)
எடுத்துக்கொள்பவர்கள், கீரை வகைகளில் உள்ள வைட்டமின் K அளவைக்
கண்காணிக்க வேண்டியிருக்கலாம்.
- சர்க்கரை மற்றும் உப்பைக் கவனத்தில் கொள்ளுங்கள்: அதிகப்படியான சர்க்கரை, உப்பு அல்லது பதப்படுத்தப்பட்ட கொழுப்புகளால் நன்மை
இல்லாமல் போகக்கூடும்.
- எதார்த்தமான எதிர்பார்ப்புகள்: இந்த உணவுகள் இரத்த நாள ஆரோக்கியத்திற்கு உதவுமே தவிர, பெரிய அடைப்புகளை நீக்கவோ நோயைக்
குணப்படுத்தவோ முடியாது.
- மருத்துவப் பரிசோதனைகள்: வழக்கமான பரிசோதனைகள் (கொழுப்பு அளவு பரிசோதனை, இரத்த அழுத்தம், பரிந்துரைக்கப்பட்டால் ஸ்கேன்) தவிர்க்க முடியாதவை.
மறுப்புரை: இந்தக் கட்டுரை தகவல் நோக்கத்திற்காக மட்டுமே
வழங்கப்பட்டுள்ளது; இது மருத்துவ ஆலோசனை,
நோயறிதல் அல்லது சிகிச்சைக்கு மாற்றாக அல்ல. உணவு அல்லது சிகிச்சை
முறையில் மாற்றங்கள் செய்யும் முன், குறிப்பாக ஏற்கனவே இதய
நோய் அல்லது மருந்துகள் எடுத்துக்கொள்பவர்கள், தகுதி வாய்ந்த
இதய மருத்துவரை எப்போதும் அணுகவும்.
Courtesy: The
Times Of India







கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக