மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027
நம் விவரங்களை நாமே பதிவு செய்வோம்
(Self Enumeration)
இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு 2027-ன் முதற்கட்டமாக, குடிமக்கள் தங்கள் விவரங்களை ஆன்லைனில் நேரடியாகப் பதிவு செய்யும் "Self Enumeration" வசதி தமிழ்நாட்டில் ஜூலை 17 முதல் ஜூலை 31 வரை நடைபெறுகிறது.
எப்படிப் பயன்படுத்துவது?
கீழே உள்ள இணையதளத்தில் நுழைந்து, கேட்கப்படும் 33 கேள்விகளுக்கும் பதில் அளித்து, நம் விவரங்களைப் பதிவு செய்யலாம். பதிவு முடிந்தவுடன் கிடைக்கும் Self Enumeration ID-ஐ பத்திரமாக வைத்துக் கொள்ள வேண்டும். பின்னர் வீடு தேடி வரும் கணக்கெடுப்பு அதிகாரியிடம் இந்த ID-ஐ மட்டும் தெரிவித்தால் போதும் — 33 கேள்விகளுக்கான பதில்களும் அவருக்குக் கிடைத்துவிடும், மீண்டும் அனைத்தையும் சொல்ல வேண்டிய அவசியம் இருக்காது.
முழு விவரங்களையும் வீடியோ மூலம் தெரிந்து கொள்ளலாம்.
https://youtu.be/LQ640zAyroY?si=rU2_D40UtooE90CJ
🔗 பதிவு செய்ய: https://se.census.gov.in/
📅 தமிழ்நாட்டில் பதிவு செய்யவேண்டிய கடைசி நாள்: ஜூலை 31, 2026
