ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் 2 ம் தேதி உலக கணினி எழுத்தறிவு தினம் கொண்டாடப்படுகிறது. நம் அன்றாட வாழ்வில் கணினி ஓர் அத்தியாவசியப்பொருளாகி விட்டது. நாம் நேரடியாகவோ, அல்லது மறைமுகமாகவோ கணினியைச் சார்ந்து வாழவேண்டியுள்ளது. சிறு வணிகத்தலங்கள் முதல் செயற்கைக் கோள் ஈறாகக் கணினியின் பயன்பாடு இன்றியமையாதது.
அத்தகைய காலகட்டத்தில், ஒவ்வொருவரும், அடிப்படைக் கணினி அறிவையாவது பெற்றிருக்கவேண்டியது அவசியமாகிறது.கற்றதோடு மட்டுமல்லாமல், அவ்வறிவை அன்றாட வாழ்வில் செயல்படுத்தும் திறமையுள்ளவர்களே மிளிர முடியும்.
தகவல், தொழில் நுட்பத்துறையினர் மட்டுமன்றி, ஆசிரியர்கள், மருத்துவர்கள், அறிவியல் அறிஞர்கள்,ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள், நீதித்துறையினர், போக்குவரத்துத் துறையினர் எனப் பல்வேறு பிரிவினரும் தங்களை இத்துறையில் UPDATE செய்துகொள்வது அவசியம்.
“அனுபவமே சிறந்த ஆசான்” எனும் வாக்கு இத்துறைக்கு மிகவும் பொருத்தமானதாகும். நாம் ஏட்டில் கற்றுக்கொண்டதை விட, அனுபவத்தில் கற்றுக்கொள்வதே நிலைத்து நிற்கும்.
உலகில் தகவல் தொழில்நுட்பத்துறையை ஆள்பவர்கள் இந்தியர்களே. அதிலும் குறிப்பாகத் தமிழகத்தைச் சேர்ந்தவர்களே.இதற்குக் காரணம் தாய்மொழிக்கல்வி வாயிலாக அறிவு பெறுவதும், ஐயம் தீரக் கற்பதும் ஆகும்.
இத்தகு பெருமை மிகு நாளில், நாமும், நம்மைச் சார்ந்தோரையும் கணினி அறிவு பெற்றவர்களாக மாற்றுவோம். கணினி மற்றும் அதன் தொடர்புடைய தொழில்நுட்பம் பற்றி விரிவாக அறியச் சிறந்த வாய்ப்பாக இந்த நாளை எடுத்துக்கொள்வோம்.
இன்றைய சூழலில், கணினியை இயக்குபவர்கள் மட்டுமல்ல, நன்றாகக் கையாளத் தெரிந்தவர்களே, அதிகம் வேண்டப் படுபவர்களாக இருக்கிறார்கள். தாய்மொழியைக் கணினியில் கையாளுங்கள். உலகம், இன்னும் உங்களை அதிகம் மதிக்கும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக