8 ஜூலை, 2026

உலக ஒவ்வாமை தினம் - ஜூலை 8

 

உலக ஒவ்வாமை தினம்: விழிப்புணர்வே சிறந்த பாதுகாப்பு

 ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 8 ஆம் தேதி உலக ஒவ்வாமை தினம் (World Allergy Day) கடைப்பிடிக்கப்படுகிறது. ஒவ்வாமை (Allergy) என்பது உடலின் நோய் எதிர்ப்பு மண்டலம் (Immune System), உண்மையில் தீங்கு விளைவிக்காத சில பொருட்களைத் தவறாக எதிரிகளாகக் கருதி அதிகப்படியான எதிர்வினை புரிவதால் ஏற்படும் ஒரு மருத்துவ நிலையாகும். இந்த ஒவ்வாமையைத் தூண்டும் பொருட்கள் "அலர்ஜென்கள்" (Allergens) என்று அழைக்கப்படுகின்றன.

உலக சுகாதார அமைப்பு (
WHO) மற்றும் உலக ஒவ்வாமை அமைப்பு (World Allergy Organization) வெளியிட்டுள்ள தகவல்களின்படி, உலக மக்கள் தொகையில் சுமார் 30 முதல் 40 சதவீதம் பேர் வாழ்நாளில் ஏதாவது ஒரு வகையான ஒவ்வாமையால் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக குழந்தைகள் மற்றும் நகர்ப்புற மக்களிடையே இதன் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 

ஒவ்வாமை ஏன் ஏற்படுகிறது? 

ஒவ்வாமை வருவதற்கு மரபணு, சுற்றுச்சூழல், காற்று மாசுபாடு, தொழிற்சாலைப் புகை, காலநிலை மாற்றம், புகைப்பிடித்தல், உணவுப் பழக்க மாற்றம், வீட்டில் தூசி அதிகமாக இருப்பது, பூஞ்சை வளர்ச்சி, செல்லப்பிராணிகளின் முடி, இரசாயனப் பொருட்களின் பயன்பாடு போன்ற பல காரணிகள் உள்ளன. 

சமீபத்திய ஆராய்ச்சிகள் குடலில் வாழும் நன்மை செய்யும் நுண்ணுயிரிகளின் (
Gut Microbiome) சமநிலை பாதிக்கப்படுவதும் ஒவ்வாமை உருவாவதில் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறுகின்றன.  


வீட்டில் ஏற்படும் ஒவ்வாமைகள் 

வீட்டில் அதிகம் காணப்படும் ஒவ்வாமைக்குக் காரணம் தூசியில் வாழும் மிகச் சிறிய "டஸ்ட் மைட்ஸ்" (Dust Mites) ஆகும். 


    
தலையணை, மெத்தை, போர்வை, திரைச்சீலை, கம்பளம் போன்றவற்றில் இவை அதிகமாகக் காணப்படுகின்றன. பூஞ்சை வளர்ச்சி, கொசு மற்றும் கரப்பான் பூச்சி எச்சங்கள், வாசனைத் திரவியங்கள், அறை வாசனை ஸ்பிரே, சுத்தம் செய்யப் பயன்படும் இரசாயனப் பொருட்கள், செல்லப்பிராணிகளின் முடி மற்றும் உதிர்ந்த தோல் துகள்களும் ஒவ்வாமையைத் தூண்டுகின்றன.

தடுக்கும் வழிமுறைகள் 

* வாரத்திற்கு ஒருமுறை வெந்நீரில் படுக்கை விரிப்புகள், தலையணை உறைகள் ஆகியவற்றைத் துவைக்க வேண்டும்.

* வீட்டைத் தூசி இல்லாமல் பராமரிக்க வேண்டும்.

* ஈரப்பதம் அதிகமாக இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

* பூஞ்சை வளர்ச்சியை உடனடியாக அகற்ற வேண்டும்.

* தேவையற்ற வாசனைத் திரவியங்கள் மற்றும் புகை உற்பத்தி செய்யும் பொருட்களைத் தவிர்க்க வேண்டும்.

* செல்லப்பிராணிகளைப் படுக்கையறைக்குள் அனுமதிக்காமல் இருப்பது சிலருக்கு உதவியாக இருக்கும்.

 அலுவலகங்களில் ஏற்படும் ஒவ்வாமைகள் 

ஏர் கண்டிஷனர் (AC) முறையாகச் சுத்தம் செய்யப்படாதபோது அதில் பூஞ்சை மற்றும் தூசித் துகள்கள் சேர்ந்து ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். பழைய கோப்புகள், காகிதத் தூசி, அச்சுப்பொறி (Printer) டோனர் துகள்கள், இரசாயன வாசனை, தரை விரிப்புகளில் சேரும் தூசி, காற்றோட்டமில்லாத அறைகள் ஆகியவை அலுவலக ஒவ்வாமைக்குக் காரணமாகின்றன. 

தடுப்பு முறைகள் 

* காற்றோட்டத்தை மேம்படுத்த வேண்டும்.

* ஏர் கண்டிஷனர்களைக் காலந்தோறும் பராமரிக்க வேண்டும்.

* பணியிடங்களைச் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

* தூசி அதிகம் உருவாகும் பொருட்களை முறையாகப் பராமரிக்க வேண்டும்.

* அதிக வாசனை கொண்ட வாசனைத் திரவியங்களைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். 

பயணங்களின்போது ஏற்படும் ஒவ்வாமைகள் 

பேருந்து, இரயில், விமானம் போன்றவற்றில் தூசி, வாசனைத் திரவியங்கள், குளிரூட்டப்பட்ட காற்று, மகரந்தத் துகள்கள் மற்றும் மாசடைந்த காற்று ஒவ்வாமையை ஏற்படுத்தலாம். வெளிநாடுகளுக்குச் செல்லும்போது புதிய உணவுகள், கடல் உணவுகள், பருப்பு வகைகள், சில பழங்கள் போன்றவை உணவு ஒவ்வாமையை உண்டாக்கலாம். ஹோட்டல் அறைகளில் உள்ள தூசி மற்றும் பூஞ்சையும் சிலருக்கு பாதிப்பை ஏற்படுத்தும். 

பயணத்தின் போது கவனிக்க வேண்டியவை 

* மருத்துவர் பரிந்துரைத்த ஒவ்வாமை மருந்துகளை உடன் எடுத்துச் செல்ல வேண்டும்.

* உணவு ஒவ்வாமை இருப்பவர்கள் உணவுப் பொருட்கள் குறித்து முன்கூட்டியே தெரிந்து கொள்ள வேண்டும்.

* முகக்கவசம் பயன்படுத்துவது தூசி மற்றும் மகரந்தத் துகள்களிலிருந்து பாதுகாக்க உதவும்.

* அதிக தண்ணீர் குடித்து உடலை நீர்ச்சத்துடன் வைத்திருக்க வேண்டும்.

* உயிருக்கு ஆபத்தான ஒவ்வாமை வரலாறு உள்ளவர்கள் (மருத்துவரின் ஆலோசனை பெற்று) எபினெப்ரின் (Epinephrine) தானியங்கி ஊசியை எப்போதும் உடன் வைத்திருக்க வேண்டும். 

அறிகுறிகள் 

ஒவ்வாமையின் அறிகுறிகள் ஒருவருக்கு ஒருவர் மாறுபடும்.
1. தொடர்ந்து தும்மல்
,
2.
மூக்கில் நீர் வடிதல்,
3.
மூக்கு அடைப்பு,
4.
கண் சிவத்தல்,
5.
கண் அரிப்பு,
6.
தோலில் சிவப்பு தடிப்புகள், அரிப்பு,
7.
உதடு அல்லது முகம் வீங்குதல்,
8.
இருமல்,
9.
மூச்சுத்திணறல்,
10.
மார்பு இறுக்கம்
                                 போன்றவை பொதுவான அறிகுறிகள். சிலருக்கு ரத்த அழுத்தம் திடீரெனக் குறைந்து
, மயக்கம், சுவாசக் குறைபாடு உள்ளிட்ட "அனாபிலாக்சிஸ்" (Anaphylaxis) எனப்படும் உயிருக்கு ஆபத்தான நிலையும் ஏற்படலாம். இது உடனடி அவசர மருத்துவ சிகிச்சை தேவைப்படும் நிலையாகும். 

அறிவியல் கண்டுபிடிப்புகள் 

கடந்த சில ஆண்டுகளில் ஒவ்வாமையைக் கண்டறியும் முறைகள் மிகவும் துல்லியமாக வளர்ச்சி பெற்றுள்ளன. 


தோல் குத்துப் பரிசோதனை (Skin Prick Test), குறிப்பிட்ட IgE இரத்தப் பரிசோதனை மற்றும் மூலக்கூறு அடிப்படையிலான (Component-resolved Diagnostics) பரிசோதனைகள் மூலம் எந்தப் பொருள் ஒவ்வாமையைத் தூண்டுகிறது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய முடிகிறது. உயிரியல் மருந்துகள் (Biologic Medicines) எனப்படும் புதிய தலைமுறை சிகிச்சை முறைகள் கடுமையான ஆஸ்துமா மற்றும் சில ஒவ்வாமை நோய்களுக்கு நல்ல பலனை அளித்து வருகின்றன. 

சிகிச்சை முறைகள் 

ஒவ்வாமைக்கான முதல் சிகிச்சை, ஒவ்வாமையைத் தூண்டும் காரணிகளைத் தவிர்ப்பதுதான். அதன் பிறகு மருத்துவரின் ஆலோசனையின்படி ஆண்டிஹிஸ்டமின் (Antihistamine) மாத்திரைகள், மூக்குத் தெளிப்பான் (Nasal Corticosteroid Spray), கண் சொட்டு மருந்துகள், ஆஸ்துமா இருப்பவர்களுக்கு இன்ஹேலர்கள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. 

சிலருக்கு "அலர்ஜன் இம்யூனோதெரபி" (Allergen Immuno therapy) எனப்படும் நோய் எதிர்ப்பு மாற்றுச் சிகிச்சை அளிக்கப்படுகிறது. இதில், ஒவ்வாமையை ஏற்படுத்தும் பொருளின் மிகச் சிறிய அளவை நீண்ட காலத்திற்கு மருத்துவரின் கண்காணிப்பில் உடலுக்குள் செலுத்துவதோ அல்லது நாக்குக்குக் கீழே வைப்பதோ மூலம், அந்தப் பொருளை உடல் படிப்படியாக ஏற்றுக்கொள்ளும் திறன் பெறுகிறது. இதனால் ஒவ்வாமையின் தீவிரம் குறையலாம். 

ஒவ்வாமை குறித்து நிலவும் தவறான நம்பிக்கைகள் 

"ஒவ்வாமை தானாகவே குணமாகிவிடும்", "அனைத்து ஒவ்வாமைக்கும் ஒரே மாத்திரை போதும்", "வீட்டில் செய்யும் வைத்தியங்களால் முழுமையாக குணப்படுத்தலாம்" போன்ற நம்பிக்கைகளுக்கு அறிவியல் ஆதாரம் இல்லை. தானாக மருந்துகளை உட்கொள்வது அல்லது மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் ஸ்டீராய்டு மருந்துகளைப் பயன்படுத்துவது ஆபத்தானது. 

நாம் என்ன செய்ய வேண்டும்? 

ஒவ்வாமை ஒரு சாதாரண தும்மல் அல்லது அரிப்பு மட்டுமல்ல; சில நேரங்களில் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய மருத்துவ நிலையாகவும் மாறலாம். ஆனால் சரியான விழிப்புணர்வு, காரணிகளை முன்கூட்டியே கண்டறிதல், சுத்தமான சுற்றுச்சூழல், ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் மருத்துவரின் ஆலோசனையின்படி சிகிச்சை பெறுதல் ஆகியவற்றின் மூலம் பெரும்பாலான ஒவ்வாமைகளை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்த முடியும். உலக ஒவ்வாமை தினம் நமக்கு நினைவூட்டுவது ஒன்றே...

பிரபலமான இடுகைகள்