28 ஜூன், 2026

ஜூலை 1 முதல்....

                 ஜூலை 1, 2026 முதல்...... 

1. ஆதார் மின்னஞ்சல் புதுப்பிப்பு இலவசமாகிறது 

ஜூலை 1 முதல் டிசம்பர் 31, 2026 வரை , ஆதார் அட்டையில் மின்னஞ்சல் முகவரியை இணைக்கவோ திருத்தவோ ₹75 கட்டணம் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தச் சலுகை புதிய ஆதார் மொபைல் ஆப் மூலம் மட்டுமே பெற இயலும். Aadhaar Centre அல்லது myAadhaar portal வழியாக புதுப்பித்தால் வழக்கமான கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். 

பழைய
mAadhaar ஆப் விரைவில் நிறுத்தப்படவுள்ளதால், Google Play Store அல்லது Apple App Store மூலம் புதிய Aadhaar ஆப்பை பதிவிறக்கிக் கொள்வது அவசியம்.
_____________________________________________________________________________________________

2. இந்திய ரயில்வே புதிய அபராத விதிகள் 

Jan Vishwas (Amendment of Provisions) Act, 2026-ன் கீழ் Railways Act 1989-ன் Sections 137, 138 மற்றும் 162 திருத்தப்பட்டு, ஜூலை 1 முதல் பல்வேறு அபராதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. 

டிக்கெட் இல்லாப் பயணம்: சரியான டிக்கெட் இல்லாமல் பயணித்தால் குறைந்தபட்ச அபராதம் ₹250-ல் இருந்து ₹500 ஆக இரட்டிப்பாகிறது. காலாவதியான அல்லது பிறருக்கு மாற்றப்பட்ட டிக்கெட்டில் பயணித்தாலும் இதே அபராதம் பொருந்தும். 

பெண்கள் / மாற்றுத்திறனாளிகள் பெட்டி: இவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் அனுமதியின்றி பயணித்தால் ₹2,500 அபராதம் விதிக்கப்படும். Railway Protection Force தொடர்ந்து சோதனை நடத்தும்; மீண்டும் மீண்டும் விதிமீறல் செய்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். 

புகைப்பிடித்தல் / ரயிலில் வணிகம்: இவற்றிற்கு ₹2,000 அபராதம் விதிக்கப்படும்.

ஆபத்தான பொருட்கள்: தடைசெய்யப்பட்ட அல்லது அபாயகரமான பொருட்கள் கொண்டு செல்வதற்கு குறைந்தபட்சம் ₹10,000 அபராதம்.
-------------------------------------------------------------------------------------------------------

3. எல்பிஜி சிலிண்டர் முக்கியமான விதி மாற்றம் 

மாதாந்திர விலைத் திருத்தம்: சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கேற்ப ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதி வீட்டு உபயோக மற்றும் வணிக சிலிண்டர் விலைகள் மறுஆய்வு செய்யப்படும். 

ஒரு வீடு ஒரே இணைப்பு:  May 25, 2026 அன்று திருத்தப்பட்ட LPG Amendment Order 2026-ன்படி, PNG (குழாய் எரிவாயு) இணைப்பு பெற்றுள்ள வீடுகள் , 30 நாட்களுக்குள் தங்கள் எல்பிஜி சிலிண்டர் இணைப்பை ஒப்படைக்க வேண்டும். Indane, HP Gas, Bharat Gas — மூன்றுக்கும் இது பொருந்தும். நிறுவனங்கள் ஏற்கனவே இரட்டை இணைப்பு வைத்துள்ள வீடுகளை கண்டறிந்து SMS அனுப்பி வருகின்றன.

                                      தவறான வதந்தி _ எச்சரிக்கை:                

"ஜூன் 30-க்கு பிறகு அனைவரின் சிலிண்டர் இணைப்பும் துண்டிக்கப்படும்" என்று சமூக ஊடகங்களில் பரவும் தகவல் முற்றிலும் தவறானது. PNG வசதி இல்லாத இடங்களில் வாழ்வோருக்கு LPG தொடர்ந்து கிடைக்கும்.
----------------------------------------------------------------------------------------------

4. வங்கி மற்றும் கிரெடிட் கார்டு மாற்றங்கள்: 

HDFC Regalia Gold கார்டு: முந்தைய காலாண்டில் குறைந்தது ₹60,000 செலவிட்டிருந்தால் மட்டுமே அடுத்த காலாண்டில் இலவச உள்நாட்டு விமான நிலைய லவுஞ்ச் அணுகல் (3 முறை) கிடைக்கும். சர்வதேச லவுஞ்ச் அணுகல் (Priority Pass மூலம் 6 முறை) மாறாது நீடிக்கும். 

YES Bank கிரெடிட் கார்டு: காலாண்டுக்கு ₹35,000 செலவு வரம்பு நிறைவேற்றப்பட்டால் மட்டுமே இலவச உள்நாட்டு லவுஞ்ச் அணுகல் கிடைக்கும். 

Citi கார்டு Axis Bank மாற்றம்: ஜூலை 15-க்குள் Citi வங்கி கிரெடிட் கார்டுகள் முழுமையாக Axis Bank-க்கு மாற்றப்படும். கார்டு எண், PIN, CVV, billing cycle எல்லாம் மாறாது; வெகுமதிப் புள்ளிகள் Axis Bank தளத்தில் ஒருங்கிணைக்கப்படும். வட்டி விகிதங்கள் மட்டும் Axis Bank விதிகளுக்கு ஏற்ப மாறும்.
-------------------------------------------------------------------------------------------------------

 5. வருமான வரி (ITR) — ஜூலை 31 கடைசித் தேதி 

நேரடியாக ஜூலை 1 முதல் அமலாகும் விதி அல்ல என்றாலும்ஜூலை மாதத்தில் கவனிக்க வேண்டிய மிக முக்கியமான நிதிக் கடமை இது. 

FY 2025–26 (AY 2026–27)-க்கான வருமான வரி தாக்கல் கடைசி தேதிகள்:

1. சம்பளதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் (ITR-1, ITR-2) — ஜூலை 31
2. தணிக்கை தேவையில்லாத தொழில் வருமானம் (ITR-3, ITR-4) — ஆகஸ்ட் 31
3. தணிக்கை தேவைப்படும் வணிக நிறுவனங்கள் அக்டோபர் 31

  • காலதாமதமான தாக்கல்களுக்கு ₹5,000 வரை தாமத அபராதம் (₹5 லட்சத்திற்கும் குறைந்த வருமானத்தினருக்கு ₹1,000) விதிக்கப்படும். 
  • ஏப்ரல்ஜூன் காலாண்டிற்கான TDS / TCS தாக்கல்களும் ஜூலை 31 தேதியுடன் இணைந்துள்ளன.


-------------------------------------------------------------------------------------------------------