1. ஆதார் மின்னஞ்சல் புதுப்பிப்பு — இலவசமாகிறது
ஜூலை 1 முதல் டிசம்பர் 31, 2026 வரை , ஆதார் அட்டையில் மின்னஞ்சல்
முகவரியை இணைக்கவோ திருத்தவோ ₹75 கட்டணம் தள்ளுபடி
செய்யப்பட்டுள்ளது. இந்தச்
சலுகை புதிய ஆதார் மொபைல் ஆப் மூலம் மட்டுமே பெற இயலும். Aadhaar Centre அல்லது myAadhaar portal வழியாக புதுப்பித்தால் வழக்கமான
கட்டணம் தொடர்ந்து வசூலிக்கப்படும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.
_____________________________________________________________________________________________
2. இந்திய ரயில்வே — புதிய அபராத விதிகள்
Jan Vishwas (Amendment of Provisions) Act, 2026-ன் கீழ் Railways Act 1989-ன் Sections 137, 138 மற்றும் 162 திருத்தப்பட்டு, ஜூலை 1 முதல் பல்வேறு அபராதங்கள் உயர்த்தப்பட்டுள்ளன.
டிக்கெட் இல்லாப் பயணம்: சரியான டிக்கெட் இல்லாமல் பயணித்தால் குறைந்தபட்ச அபராதம் ₹250-ல் இருந்து ₹500 ஆக இரட்டிப்பாகிறது. காலாவதியான அல்லது பிறருக்கு மாற்றப்பட்ட டிக்கெட்டில் பயணித்தாலும் இதே அபராதம் பொருந்தும்.
பெண்கள் / மாற்றுத்திறனாளிகள் பெட்டி: இவர்களுக்கென ஒதுக்கப்பட்ட பெட்டிகளில் அனுமதியின்றி பயணித்தால் ₹2,500 அபராதம் விதிக்கப்படும். Railway Protection Force தொடர்ந்து சோதனை நடத்தும்; மீண்டும் மீண்டும் விதிமீறல் செய்வோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
புகைப்பிடித்தல் /
ரயிலில் வணிகம்: இவற்றிற்கு ₹2,000 அபராதம் விதிக்கப்படும்.
ஆபத்தான பொருட்கள்: தடைசெய்யப்பட்ட அல்லது அபாயகரமான பொருட்கள் கொண்டு செல்வதற்கு குறைந்தபட்சம் ₹10,000 அபராதம்.
-------------------------------------------------------------------------------------------------------
3. எல்பிஜி சிலிண்டர் — முக்கியமான விதி மாற்றம்
மாதாந்திர விலைத் திருத்தம்: சர்வதேச கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கேற்ப ஒவ்வொரு மாதமும் 1-ஆம் தேதி வீட்டு உபயோக மற்றும் வணிக சிலிண்டர் விலைகள் மறுஆய்வு செய்யப்படும்.
ஒரு வீடு — ஒரே இணைப்பு: May 25, 2026 அன்று திருத்தப்பட்ட LPG Amendment Order 2026-ன்படி, PNG (குழாய் எரிவாயு) இணைப்பு பெற்றுள்ள வீடுகள் , 30 நாட்களுக்குள் தங்கள் எல்பிஜி சிலிண்டர் இணைப்பை ஒப்படைக்க வேண்டும். Indane, HP Gas, Bharat Gas — மூன்றுக்கும் இது பொருந்தும். நிறுவனங்கள் ஏற்கனவே இரட்டை இணைப்பு வைத்துள்ள வீடுகளை கண்டறிந்து SMS அனுப்பி வருகின்றன.
தவறான வதந்தி _ எச்சரிக்கை:
"ஜூன் 30-க்கு பிறகு அனைவரின்
சிலிண்டர் இணைப்பும் துண்டிக்கப்படும்" என்று சமூக ஊடகங்களில் பரவும் தகவல்
முற்றிலும் தவறானது. PNG வசதி இல்லாத இடங்களில் வாழ்வோருக்கு LPG தொடர்ந்து
கிடைக்கும்.
----------------------------------------------------------------------------------------------
4. வங்கி
மற்றும் கிரெடிட் கார்டு மாற்றங்கள்:
HDFC Regalia Gold கார்டு: முந்தைய காலாண்டில் குறைந்தது ₹60,000 செலவிட்டிருந்தால் மட்டுமே அடுத்த காலாண்டில் இலவச உள்நாட்டு விமான நிலைய லவுஞ்ச் அணுகல் (3 முறை) கிடைக்கும். சர்வதேச லவுஞ்ச் அணுகல் (Priority Pass மூலம் 6 முறை) மாறாது நீடிக்கும்.
YES Bank கிரெடிட் கார்டு: காலாண்டுக்கு ₹35,000 செலவு வரம்பு நிறைவேற்றப்பட்டால் மட்டுமே இலவச உள்நாட்டு லவுஞ்ச் அணுகல் கிடைக்கும்.
Citi கார்டு → Axis Bank மாற்றம்: ஜூலை 15-க்குள் Citi வங்கி
கிரெடிட் கார்டுகள் முழுமையாக Axis Bank-க்கு மாற்றப்படும்.
கார்டு எண், PIN, CVV, billing cycle எல்லாம் மாறாது; வெகுமதிப் புள்ளிகள் Axis Bank தளத்தில் ஒருங்கிணைக்கப்படும். வட்டி விகிதங்கள் மட்டும் Axis Bank விதிகளுக்கு ஏற்ப மாறும்.
-------------------------------------------------------------------------------------------------------
5. வருமான வரி (ITR) — ஜூலை 31 கடைசித் தேதி
FY 2025–26 (AY 2026–27)-க்கான வருமான வரி தாக்கல் கடைசி தேதிகள்:
1. சம்பளதாரர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் (ITR-1,
ITR-2) — ஜூலை 31
2. தணிக்கை தேவையில்லாத தொழில் வருமானம் (ITR-3,ITR-4)- ஆகஸ்ட் 31
3. தணிக்கை தேவைப்படும் வணிக நிறுவனங்கள் — அக்டோபர் 31
- காலதாமதமான தாக்கல்களுக்கு ₹5,000 வரை தாமத அபராதம் (₹5 லட்சத்திற்கும் குறைந்த வருமானத்தினருக்கு ₹1,000) விதிக்கப்படும்.
- ஏப்ரல்–ஜூன் காலாண்டிற்கான TDS / TCS தாக்கல்களும் ஜூலை 31 தேதியுடன் இணைந்துள்ளன.
-------------------------------------------------------------------------------------------------------






கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக