4 ஜூன், 2026

World Environment Day -உலக சுற்றுச்சூழல் தினம் 2026

 

உலக சுற்றுச்சூழல் தினம்  2026

"இயற்கையால் உத்வேகம் — காலநிலைக்காக, நம் எதிர்காலத்திற்காக"


ஏன் இந்தத் தினம் ?

ஒவ்வோர் ஆண்டும் ஜூன் 5-ஆம் தேதி உலகம் முழுவதும் உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இந்த நாள் மனித இனத்திற்கும் இயற்கைக்கும் இடையிலான உறவை மீண்டும் நினைவூட்டும் ஒரு புனிதமான நாளாகும். 1972-ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையால் இந்நாள் அறிவிக்கப்பட்டு, 1973-ஆம் ஆண்டு முதல் "ஒரே ஒரு பூமி" என்ற முழக்கத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. இது தனிமனிதர்கள், பள்ளிகள், அரசுகள், சமூகங்களை, சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான நடவடிக்கைகளில் ஈடுபடத்  தூண்டும் உலகின் மிகப் பெரிய தளமாக விளங்குகிறது.


2026-ஆம் ஆண்டிற்கான கருப்பொருள்

இந்த ஆண்டின் கருப்பொருள் — "Inspired by Nature. For Climate. For Our Future." (இயற்கையால் உத்வேகம் — காலநிலைக்காக, நம் எதிர்காலத்திற்காக) என்பதாகும். இதன் பிரச்சாரச் செய்தி #NowForClimate என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கருப்பொருள், இயற்கை என்பது விருப்பமான ஒன்றல்ல — அது காலநிலை நெகிழ்ச்சிக்கும் நம் எதிர்காலத்திற்கும் மையமானது என்பதை வலியுறுத்துகிறது.

காலநிலை நடவடிக்கை என்பது வெறும் கார்பன் உமிழ்வைக் குறைப்பது மட்டுமல்ல — நம் பொருளாதாரங்களை இயக்கும் அமைப்புகளை மறுசிந்தனை செய்வதும், காலநிலையுடனான நம் உறவைச் சீரமைப்பதும் என்பதை இந்த கருப்பொருள் வலியுறுத்துகிறது.


தொடர்ச்சியான மூன்று தூண்கள்

இந்தக் கருப்பொருள் மூன்று இணைந்த தூண்களில் செயல்படுகிறது: 
1.காடுகள் கார்பனை உறிஞ்சுகின்றன; 2.சதுப்பு நிலங்கள் கடலோரப் புயல்களைத் தடுக்கின்றன; 3.கண்டல் காடுகள்(Mangrove Forests) கரையோரங்களைப் பாதுகாக்கின்றன; மண்ணிலுள்ள நுண்ணுயிரிகள் கார்பன் சுழற்சியை ஒழுங்குபடுத்துகின்றன. இந்தக் கருப்பொருள் இயற்கையை ஒரு வளமாக அல்ல, ஒரு கூட்டாளியாக மறுவரையறை செய்கிறது.



விருந்தினர் நாடு — அஜர்பைஜான்

2026-ஆம் ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினத்தின் விருந்தினர் நாடு அஜர்பைஜான் குடியரசு; உலகளாவிய நினைவேந்தல் நிகழ்வு பாகு நகரில் நடைபெறும். வரலாற்று பட்டுப் பாதையின்  (SILK ROUTE) குறுக்குவெட்டில் அமைந்துள்ள அஜர்பைஜான், இரண்டு முக்கிய காலநிலை மண்டலங்களையும் — துணை வெப்பமண்டல வனங்கள் முதல் ஆல்பைன் சூழலியல் அமைப்புகள் வரை — 8 வேறுபட்ட காலநிலை வகைகளையும் கொண்ட இயற்கை வளமிக்க நாடாகும். அஜர்பைஜான் 1990 அளவுகளிருந்து 2035-ஆம் ஆண்டிற்குள் 40% உமிழ்வைக் குறைக்க உறுதிமொழி அளித்துள்ளது.



காலநிலை நெருக்கடியின் அவசரம்

இந்த பூமி வாதிடுவதில்லை; பேரம் பேசுவதில்லை. அது சமிக்ஞைகளை அனுப்புகிறது — உயரும் கடல்மட்டங்கள், வீரியமான காட்டுத்தீகள், வெப்ப அலைகள், உருகும் பனிப்பாறைகள் என்பனவற்றின் மூலம். 1.5°C என்பது எல்லை என்று நாம் கூறினோம் — அதை நாம் தாண்டி வருகிறோம்.

உலக வளிமண்டல அமைப்பு (WMO) 2024-ஐ உலகின் மிக வெப்பமான ஆண்டாக உறுதிப்படுத்தியுள்ளது; உலகளாவிய சராசரி வெப்பநிலை பாரிஸ் ஒப்பந்தம் நிர்ணயித்த 1.5°C என்ற வரம்பைக் கடந்தது. இந்த நிலையில், 2026-ஆம் ஆண்டின் உலக சுற்றுச்சூழல் தினம் ஒரு உலகளாவிய விழிப்புணர்வு அழைப்பாக விளங்குகிறது.



நம்பிக்கையின் ஒளிர்வு

ஆனால் இந்த இரைச்சலுக்குக் கீழே, மற்றொரு சமிக்ஞை மேலெழுகிறது: கூரைகளின் மீது சூரிய மின்னிணைப்பு விரிகிறது; அடிவானில் காற்றாலைகள் நிரைநிரையாக நிற்கின்றன; நகரங்கள் மனிதர்களுக்காக மறுவடிவமைக்கப்படுகின்றன; காடுகள் மீண்டும் வளர்க்கப்படுகின்றன. இவை நம்பிக்கையின் அடையாளங்கள்.


நாம் செய்ய வேண்டியவை

இந்த உலக சுற்றுச்சூழல் தினம் வெறும் கொண்டாட்டமல்ல — அது ஒரு சத்தியப்பிரமாணம். நாம் ஒவ்வொருவரும்:

  • மரங்கள் நட வேண்டும்
  • பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைக்க வேண்டும்
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஆதரிக்க வேண்டும்
  • இளைஞர்களிடம் சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

இவற்றை அறிவோம்

இந்த
தினம் தனிமனிதர்களை நிலையான வாழ்க்கை முறையை கடைப்பிடிக்க ஊக்கப்படுத்துகிறது; சர்வதேச ஒத்துழைப்பை ஊக்குவிக்கிறது; புல்வெளி, குரல்களையும் முன்னணி சமூகங்களையும் வலுப்படுத்துகிறது. இயற்கை நம் ஆசிரியர், நம் கூட்டாளி, நம் அடைக்கலம். அதை நாம் காக்கும் போது, நாமும் காக்கப்படுவோம்.

#NowForClimate — இது நேரம். இது நம் பொறுப்பு. இது நம் எதிர்காலம்.

புதிய கல்வியாண்டு வாழ்த்துகள்


 புதிய கல்வியாண்டு (2026–2027) நல்வாழ்த்துகள்!

புதிய கல்வியாண்டை உற்சாகத்துடனும் நம்பிக்கையுடனும் வரவேற்போம். அறிவை வளர்க்கவும், திறமைகளை மேம்படுத்தவும், நல்ல பண்புகளைப் பெறவும் இந்த ஆண்டு சிறந்த வாய்ப்புகளை வழங்கட்டும். மாணவர்கள் அனைவரும் ஆர்வத்துடன் கற்று, உயர்ந்த இலக்குகளை அடைய முயற்சிக்க வாழ்த்துகள். ஆசிரியர்கள் அர்ப்பணிப்புடன் வழிகாட்டி, பெற்றோர்கள் ஊக்கமளித்து, மாணவர்களின் வெற்றிப் பயணத்தில் துணையாக இருக்கட்டும். புதிய நண்பர்கள், புதிய அனுபவங்கள், புதிய சாதனைகள் என இந்த கல்வியாண்டு (2026–2027) அனைவருக்கும் மகிழ்ச்சியும் முன்னேற்றமும் நிறைந்ததாக அமையட்டும்.

Best Wishes for the Academic Year (2026–2027)!

Welcome the new academic year with enthusiasm and hope. May this year provide wonderful opportunities to gain knowledge, develop skills, and build strong values. Wishing all students success in learning and achieving their goals with confidence and determination. May teachers continue to inspire and guide, while parents encourage and support every step of the educational journey. Let the Academic Year (2026–2027) bring new friendships, meaningful experiences, and remarkable achievements. Wishing everyone a joyful, successful, and productive year ahead. 📚🎓✨

2 ஜூன், 2026

World Bicycle Day - உலக மிதிவண்டி தினம்

 

                       உலக மிதிவண்டி தினம் – ஜூன் 3
                                                        (WORLD BICYCLE DAY)






உருவாக்கம்:

                          2018 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் பொதுச் சபை ஜூன் 3-ஐ உலக மிதிவண்டி தினமாக அறிவித்தது. இந்த நாள், மிதிவண்டியின் எளிமை, மலிவு, நம்பகத்தன்மை, சுற்றுச்சூழலுக்கு உகந்த தன்மை ஆகியவற்றை வலியுறுத்துகிறது. 1817-இல் பரோன் கார்ல் வான் ட்ரெய்ஸ் ( Baron Karl Von Drais) கண்டுபிடித்த “ட்ரைசின்” கருவி, இன்று உலகம் முழுவதும் பயன்படுத்தப்படும் நவீன மிதிவண்டியாக வளர்ச்சி பெற்றுள்ளது.



      காரணங்கள்:                
                                    மிதிவண்டி- எரிபொருள் தேவையற்றதால் கார்பன் உமிழ்வைக் குறைத்து சுற்றுச்சூழலைப் பாதுகாக்கிறது.காற்று, ஒலி மாசுபாட்டைக் குறைக்கிறது. உடல் இயக்கத்தை அதிகரித்து, இதய , நீரிழிவு நோய்களைத் தடுக்கிறது. மலிவு விலையில் கிடைப்பதால் மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள் அனைவரும் எளிதில் அணுகக்கூடியது. சமூகச் சேர்க்கை, சமத்துவம், நிலைத்த வளர்ச்சி ஆகியவற்றை ஊக்குவிக்கும் கருவியாக மிதிவண்டி விளங்குகிறது.

பிரபலம்:

                       இந்தியாவில் ஹீரோ, அட்லஸ் போன்ற நிறுவனங்கள் பல தசாப்தங்களாக மிதிவண்டி உற்பத்தியில் முன்னிலை வகிக்கின்றன. 1984-இல் என்.டி.ராமராவ் தனது கட்சிக்கு மிதிவண்டியை, சின்னமாகத் தேர்ந்தெடுத்தது, பொதுமக்களின் உழைப்பையும் நம்பிக்கையையும் பிரதிபலிக்கிறது. தமிழ்நாட்டில் கருப்பையா மூப்பனார் அவர்களும் தனது கட்சியின் சின்னமாக மிதிவண்டியைத்தேர்ந்தெடுத்தார்.

உலக மிதிவண்டி தினம், சுகாதாரம், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூகச் சேர்க்கை ஆகியவற்றை வலியுறுத்தும் நாளாக, அனைவரும் மிதிவண்டிப் பயணத்தை வாழ்க்கையின் ஒரு பகுதியாகக் கொள்ள வேண்டும் என்பதை நினைவூட்டுகிறது.


          அதிக மிதிவண்டிப் பயன்பாடுள்ள நாடுகள்


1. நெதர்லாந்து (Netherlands)

உலகின் "சைக்கிள் தலைநகர்" என்று அழைக்கப்படும் இந்நாட்டில் சைக்கிள்களின் எண்ணிக்கை மக்கள்தொகையை விட அதிகம். ஆம்ஸ்டர்டாம் நகரில் சுமார் 68% பயணங்கள் மிதிவண்டியில்தான் நடக்கின்றன. சைக்கிள் பாதைகள் (fietspad) நாடு முழுவதும் 35,000 கி.மீ. வரை பரவியுள்ளன.

2. டென்மார்க் (Denmark)

கோபன்ஹேகன் நகரில் தினமும் 62% மக்கள் சைக்கிளில் அலுவலகம், பள்ளி சென்று வருகின்றனர். குளிரான வானிலையிலும்கூட சைக்கிள் பயன்பாடு குறையாது.

3. ஜெர்மனி (Germany)

பெர்லின், மியூனிக் போன்ற நகரங்களில் சைக்கிள் கலாச்சாரம் மிகவும் வலுவாக உள்ளது. நாடு முழுவதும் 96,000 கி.மீ. சைக்கிள் பாதைகள் உள்ளன.

4. சீனா (China)

மக்கள்தொகை அடிப்படையில் உலகில் அதிக சைக்கிள்கள் உள்ள நாடு. பெய்ஜிங்கில் மொபைக், ஹெல்லோ போன்ற ஷேரிங் சைக்கிள் சேவைகள் பிரபலம்.

5. ஜப்பான் (Japan)

ரயில் நிலையங்களை அடைய சைக்கிள் முதன்மை வழிமுறை. நகரங்களிலும், கிராமங்களிலும் சைக்கிள் நிறுத்துமிடங்கள் ஏராளமாக உள்ளன.

6. பெல்ஜியம் & பின்லாந்து

இந்நாடுகளும் சைக்கிள் உள்கட்டமைப்பில் முன்னணியில் உள்ளன.

 சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு அளிக்கப்படும் முக்கியத்துவம்

உள்கட்டமைப்பு (Infrastructure)

  • தனி சைக்கிள் பாதைகள் — வாகன சாலையிலிருந்து தனியாகப் பிரிக்கப்பட்டவை
  • சாலை சந்திப்புகளில் சைக்கிளுக்கே முன்னுரிமை தரும் சிக்னல்கள்
  • மழை, குளிரிலும் பயன்படுத்த மூடிய சைக்கிள் பாதை சுரங்கங்கள்
  • ரயில் நிலையங்களில் ஆயிரக்கணக்கான சைக்கிள் நிறுத்துமிடங்கள்


சட்டரீதியான பாதுகாப்பு

நெதர்லாந்தில் "விபத்தில் கார் எப்போதும் தவறானது" என்ற கொள்கை உள்ளது — கார் ஓட்டுநர் கவனக்குறைவால் சைக்கிள் ஓட்டுநருக்கு ஆபத்து நேர்ந்தால் சட்டப் பொறுப்பு கார் ஓட்டுநருக்கே.

நிதிச் சலுகைகள்

  • பெல்ஜியம்: அலுவலகம் சைக்கிளில் வரும் ஊழியர்களுக்கு கிலோமீட்டருக்குக்கணக்கிட்டு, பணம் வழங்கும் திட்டம்
  • நெதர்லாந்து, ஜெர்மனி: சைக்கிள் வாங்க வரிச் சலுகைகள்
  • பிரான்ஸ்: சைக்கிள் பழுது பார்க்க அரசு மானியம்

சுகாதாரக் கண்ணோட்டம்

சைக்கிள் தினமும் பயன்படுத்துவோருக்கு இதய நோய் பாதிப்பு குறைவு, உடல் பருமன் குறைவு ஆகியன நிரூபிக்கப்பட்டுள்ளன. டென்மார்க், ஜெர்மனியில் சைக்கிள் ஓட்டுவதை ஊக்குவிக்கும் மருத்துவத் திட்டங்கள் உள்ளன.

சுற்றுச்சூழல் நோக்கம்

கார்பன் வெளியீட்டைக் குறைக்க சைக்கிளை ஊக்குவிப்பது "வானிலை இலக்கு" (Climate Goals) அடைவதற்கான முதன்மை வழியாக ஐரோப்பிய நாடுகள் கருதுகின்றன.

இந்தியாவில் நிலை
                                         பெங்களூர், புனே, சண்டிகர் போன்ற சில நகரங்களில் சைக்கிள் பாதை முயற்சிகள் தொடங்கியுள்ளன. ஆனால் ஒழுங்கற்ற போக்குவரத்து, நிதிப் பற்றாக்குறை, விழிப்புணர்வு இன்மை காரணமாக முழு வெற்றி காணவில்லை. "சைக்கிள் -  ஏழைகளின் வாகனம்" என்ற மனோபாவம் மாற வேண்டும் என்பதே நிபுணர்களின் கோரிக்கை


சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால் — சைக்கிளை ஒரு போக்குவரத்து உரிமையாக அங்கீகரித்த நாடுகளில் மட்டுமே அதற்கான உண்மையான முக்கியத்துவம் வழங்கப்படுகிறது.


சைக்கிள் பயன்பாடு அதிகரிக்கும்போது  உடல்நலன் மேம்படும் என்பது மறுக்கமுடியாத உண்மை.

1 ஜூன், 2026

உலக பால் தினம் ஜூன் 1

📥 PDF Download செய்யுங்கள்

12 இயல்1 இளந்தமிழே வினாடி- வினா

WORLD NO-TOBACCO DAY MAY 31

புகையிலையின் பொய்முகம் — உண்மையை அறிவோம்! | உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2026
உலக புகையிலை எதிர்ப்பு தினம் 2026
📅 மே 31, 2026 · உலக புகையிலை எதிர்ப்பு தினம்

புகையிலையின் பொய்முகம் — உண்மையை அறிவோம்!

மருத்துவக் கட்டுரைகள், ஆராய்ச்சிகள் மற்றும் WHO தரவுகளின் அடிப்படையில்

WHO கருப்பொருள் 2026: "Unmasking the Appeal — Countering Nicotine and Tobacco Addiction"
80 லட்சம்+
உலக அளவில் ஆண்டுதோறும் மரணங்கள்
10 லட்சம்
இந்தியாவில் ஆண்டுதோறும் மரணங்கள்
13%
இந்திய மொத்த இறப்புகளில் புகையிலையின் பங்கு
4 கோடி
இளைஞர்கள் (13–15 வயது) புகையிலையைப் பயன்படுத்துகின்றனர்

ஒவ்வோர் ஆண்டும் மே 31 அன்று உலக சுகாதார அமைப்பு (WHO) தலைமையில் உலக புகையிலை எதிர்ப்பு தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள் — "புகையிலை மற்றும் நிக்கோடினின் போலி ஆகர்ஷணத்தை அம்பலப்படுத்துவோம்" என்பதாகும். புகையிலைத் தொழிற்சாலைகள் இன்று நவீனத் தொழில்நுட்பத்தின் மூலம் இளையோரை வலைவீசிப் பிடிக்கின்றன. இந்தப் பின்னணியில், புகையிலை நம் உடலுக்கும் சமூகத்துக்கும் செய்யும் கேட்டை ஆழமாகப் புரிந்துகொள்வது மிகவும் அவசியம்.

▶ உலகளாவிய அழிவு — புள்ளிவிவரங்கள் சொல்வது என்ன?

உலக சுகாதார அமைப்பின் அறிக்கையின்படி, புகையிலைப் பயன்பாட்டால் ஆண்டுதோறும் 80 லட்சத்திற்கும் மேற்பட்ட உயிர்கள் பலியாகின்றன. இதில் சுமார் 13 லட்சம் பேர் புகைப்பிடிக்காதவர்கள் — இரண்டாம் நிலைப் புகை (Passive Smoking) காரணமாக உயிரிழக்கின்றனர். இது தினந்தோறும் சுமார் 22,000 தடுக்கக்கூடிய மரணங்களாகும்.

இந்தியாவில் மட்டும் ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 10 லட்சம் பேர் புகையிலை தொடர்பான நோய்களால் மரணமடைகின்றனர். இது நாட்டின் மொத்த இறப்புகளில் 13 சதவீதம் ஆகும். தமிழ்நாட்டில் பீடி, சுருட்டு, பான் மசாலா உள்ளிட்ட வாய்ப் புகையிலைப் பயன்பாடும் பரவலாக இருக்கிறது.

▶ உடலுக்கு புகையிலை செய்யும் சேதங்கள்

புகையிலையில் உள்ள நிக்கோடின், தார், கார்பன் மோனாக்சைடு உள்ளிட்ட 7,000-க்கும் மேற்பட்ட இரசாயனங்கள் உடல் உறுப்புகளைச் சீரழிக்கின்றன. அவற்றில் குறைந்தது 70 வகையான இரசாயனங்கள் புற்றுநோயை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை:

  • நுரையீரல் புற்றுநோய்: புகைப்பிடிப்பவர்களில் 85 சதவீதம் பேருக்கு நுரையீரல் புற்றுநோய் ஏற்படுவதற்கு புகையிலையே முக்கியக் காரணம் என மருத்துவ ஆராய்ச்சிகள் நிரூபித்துள்ளன.
  • இதய நோய்: இரத்தக் குழாய்கள் சுருங்கி, மாரடைப்பு மற்றும் பக்கவாதம் ஏற்படும் அபாயம் 2 முதல் 4 மடங்கு அதிகரிக்கிறது.
  • வாய்ப் புற்றுநோய்: வாய்ப் புகையிலை பயன்படுத்துவோருக்கு வாய் மற்றும் தொண்டைப் புற்றுநோய் அபாயம் மிக அதிகம்.
  • நீரிழிவு, சிறுநீரக நோய், ஆண்மைக் குறைவு, தோல் நோய்கள், கருவளர்ச்சி பாதிப்பு என புகையிலை பல்வேறு தரப்பிலும் தாக்கம் செலுத்துகிறது.

▶ சில புகையிலைத் தொழிற்சாலைகளின் புதிய சூழ்ச்சிகள்

புகையிலைத் தொழிற்சாலைகள் இப்போது மரபான சிகரெட்டுகளை மட்டுமல்ல — இளையோரை கவரும் புதிய தயாரிப்புகளை அறிமுகப்படுத்தி "தீங்கற்றது", "நவீன", "ஆரோக்கியமான மாற்று" என்று சித்தரிக்கின்றன:

இ-சிகரெட் (E-cigarettes) வேப் (Vape) நிக்கோடின் பவுச் ஹீட்-நாட்-பர்ன் தயாரிப்புகள்

WHO ஆய்வின்படி, தற்போது கிடைக்கும் தரவுகளுள்ள நாடுகளில் 13 முதல் 15 வயது வரையிலான இளைஞர்கள் பெரியவர்களை விட சராசரியாக 9 மடங்கு அதிகமாக வேப் பயன்படுத்துகின்றனர். சமூக ஊடகங்கள், கேமிங் தளங்கள் வழியாக இளையோரைக் குறிவைத்து சந்தைப்படுத்துகின்றனர்.

▶ புகையிலையை விடுவது எப்படி? — மருத்துவ அணுகுமுறைகள்

புகையிலை அடிமையாக்கும் தன்மை கொண்டது; ஆனால் அதை விடுவது சாத்தியம். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் வழிகள்:

  • நிக்கோடின் மாற்று சிகிச்சை (NRT): நிக்கோடின் பேட்ச் (Patch), மெல்லும் கம், லோசன்ஜ் போன்றவை நேரடி நிறுத்தலுக்கு உதவுகின்றன.
  • மருந்துகள்: Varenicline, Bupropion போன்ற மருந்துகள் மருத்துவர் பரிந்துரையில் மிகவும் பயனுள்ளதாக இருக்கின்றன.
  • நடத்தைச் சிகிச்சை (Behavioral Therapy): மனநல நிபுணரின் உதவியுடன் புகைப்பழக்கத்தின் உளவியல் காரணங்களைக் களைவது.
  • குடும்பத்தினர் மற்றும் நண்பர்களின் ஊக்கம் மற்றும் ஆதரவு மிகவும் முக்கியம்.
☎
இந்தியாவில் புகையை விட தேசிய உதவி எண் (iCall Tobacco Quit Line)
1800-11-2356 — இலவசம்

▶ அரசாங்கம் மற்றும் சமூகம் செய்ய வேண்டியவை

WHO பரிந்துரைக்கும் MPOWER கொள்கைகள் (Monitor, Protect, Offer, Warn, Enforce, Raise) பலவிடங்களிலும் செயல்படுத்தப்படுகின்றன. இந்தியாவில் COTPA (Cigarettes and Other Tobacco Products Act) சட்டம் பொது இடங்களில் புகைப்பிடிப்பதைத் தடை செய்கிறது. சிகரெட் பொட்டலங்களின் 85 சதவீதம் பகுதியில் எச்சரிக்கைப் படங்கள் இடம் பெற வேண்டும் என்ற விதியும் நடைமுறையில் உள்ளது.

இளைஞர்களைக் குறிவைக்கும் இ-சிகரெட் சந்தைப்படுத்தல், நிக்கோடின் பவுச் விற்பனை போன்றவற்றைக் கட்டுப்படுத்த இன்னும் கூடுதலாகக் கடுமையான சட்டங்கள் தேவை எனச் சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

"புகையிலைப் பயன்பாட்டை நிறுத்துவது உயிரைக் காப்பாற்றும் ஒர் அற்புத வழி — இது ஒரு தனிநபரின் தேர்வு மட்டுமல்ல, ஒரு குடும்பத்தையும், ஒரு சமூகத்தையும் காக்கும் தீவிரமான செயல்."

புகையிலையின் "போலி ஆகர்ஷணம்" ஒரு திட்டமிட்ட வணிக வலை. அதை அறிவோம்; அதில் சிக்கிக்கொள்ள மறுப்போம். புகையிலை இல்லாத தமிழகம் — புகையிலை இல்லாத இந்தியா என்ற கனவை நனவாக்குவோம்!

பிரபலமான இடுகைகள்