13 பிப்ரவரி, 2012

13/02/2012


1. சிரியாவில், அரசுக்கு எதிராக நடக்கும் கிளர்ச்சிக்கு, அல்கைதாவின் தலைவர் அய்மன் அல் ஷவாரி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
2. இலங்கை அதிபர் ராஜபக்ஷே, மூன்று நாட்கள் பாகி்ஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். 
3. தென்னாப்பிரிக்காவின் புதிய கரன்சியில் 93 வயதான முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலா படம் இடம்பெறுகிறது.
4. போதிய அளவில் ரயில் பெட்டிகள் இல்லாததால், கடந்த பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட 99 புதிய ரயில்களில், 31 ரயில்களை இயக்க முடியாத சூழல் நிலவுகிறது.
5. தமிழும், வரலாறும் இணைந்தால் தமிழகத்தையும், தமிழ் பண்பாட்டையும் மீட்டு உருவாக்கம் செய்ய முடியும், என, தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தார் சுந்தரமூர்த்தி கூறினார்.
6. ஓட்டுப் போட லஞ்சம் கொடுப்பவர்களுக்குத் தண்டனை அளிக்க வகை செய்யும், தேர்தல் கமிஷனின் ஆலோசனையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.
7. வீட்டுக் கடன்களுக்கான வட்டி மீதான வரித் தள்ளுபடி வரம்பை தற்போதுள்ள 1.5 லட்சத்திலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்த, மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. 
8. ஆனைமலை புலிகள் காப்பகத்தில், புலிகள் மற்றும் வன உயிரினங்களின் கணக்கெடுப்புத் துவங்கி மூன்று நாட்களாக நடந்து வருகிறது.
9. முதல்வரான பின், தனது சொந்த தொகுதியான ஸ்ரீரங்கத்துக்கு இரண்டாவது முறையாக இன்று நேரில் செல்லும் முதல்வர், பல்வேறு புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
10. முத்தரப்பு மட்டைப்பந்துத் தொடரின், பரபரப்பான லீக் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியவை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

11 பிப்ரவரி, 2012

11/02/2012


1. ஈரானிலிருந்து இறக்குமதி செய்யப்படும் கச்சா எண்ணையின் அளவைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை இந்தியா எடுத்து வருகிறது.
2. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில், பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானியின் மேல்முறையீட்டு மனுவை, பாகிஸ்தான் உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.
3. எதிரியின் ஏவுகணையை வழிமறித்துத் தாக்கும், ஒலியின் வேகத்தைவிட விரைவாக செல்லக் கூடிய, நவீன ஏவுகணை, ஒடிசாவில் நேற்று வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது.
4. மும்பை இரட்டை குண்டு வெடிப்பு வழக்கில், 3 பேர் மீது விசாரணை நீதிமன்றம் விதித்திருந்த தூக்குத் தண்டனையை, உயர் நீதிமன்றம் நேற்று உறுதி செய்தது.
5.  உத்தரப் பிரதேச மாநிலத்தில் இரண்டாம் கட்ட வாக்குப் பதிவு , 10 மாவட்டங்களில் உள்ள 59 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு இன்று நடைபெற உள்ளது.
6.  பள்ளி ஆசிரியர்களை நியமிக்கும் முன் அவர்களுக்குத் தகுதித் தேர்வு நடத்த வேண்டும் என்ற தமிழக அரசின் ஆணைக்குத் தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
7.  இலங்கை கடற்பகுதியில் சிறைப் பிடிக்கப்பட்ட ராமேசுவரம் மீனவர்கள் 4 பேரை, மன்னார் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.
8.  மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோயில் பகுதியில்,விளைநிலங்களில் காட்டு யானைகள் புகுந்த்தால்,3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழைகள் சேதமடைந்தன.
9. தொடர் மின்வெட்டைக் கண்டித்து, கோவையில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழில் நிறுவனங்கள்,வேலைநிறுத்தம் செய்து வருகின்றன.
10. முத்தரப்பு மட்டைப்பந்துத் தொடரில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் ஆட்டத்தில் இலங்கை அணி 5ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வி கண்டது.

10 பிப்ரவரி, 2012

10/02/2012




1. பாகிஸ்தான் அதிபர் ஆசிபர் அலி ஜர்தாரிக்கு எதிரான ஊழல் வழக்கை திரும்பத் தொடங்க, சுவிட்சர்லாந்துக்கு கடிதம் எழுதும்படி பிரதமர் யூசுப் ரசா கிலானிக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2. அமெரிக்காவில் 26ஆண்டுகளுக்குப் பின் அந்நாட்டில் புதிய  அணுமின் நிலையங்கள் துவங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
3.  இலஞ்சப் புகாரை அடுத்து, 74 வயதான,தென்கொரியா நாடாளுமன்றத் தலைவர் பார்க் ஹீ-டி, பதவி விலகினார்.
4. குடியரசுத் தலைவர் மாளிகையின்“மொகல் கார்டன்” பொதுமக்கள் பார்ப்பதற்காக பிப்ரவரி 10 முதல் மார்ச் 15 ஆம் தேதி வரை திறக்கப்பட்டிருக்கும்.
5.  குளிர்பதனக் கிடங்குகள் மேம்பாட்டிற்கான தேசிய மையம் அமைக்க, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான தொகுப்பு நிதியாக ` 25 கோடி ரூபாயையும் வழங்கியுள்ளது. 
 6. பத்மநாபசுவாமி கோவில் பாதாள அறைகளில் வைக்கப்பட்டுள்ள பொக்கிஷங்களை மதிப்பீடு செய்யும் பணி, வரும் 20ஆம் தேதி துவங்குகிறது.
7.  பயங்கரவாத எதிர்ப்பு தொடர்பான சார்க் அமைப்பு நாடுகளின் உச்சி மாநாட்டில் பாகிஸ்தானும், வங்கதேசமும் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்துள்ளன. 
8. முல்லைப் பெரியாறு அணையில், நீரின் அழுத்தத்தை அளவிடும் கருவியைப் பொருத்தும் கேரளத்தின் முயற்சியை, தடுத்து நிறுத்த வேண்டும் என்று, பிரதமருக்குத் தமிழக முதல்வர் கடிதம் எழுதியுள்ளார்.
9.  கல்வி கற்பதில் மந்தமாக உள்ள, குழந்தைகளை கண்டறிவது எப்படி என்பது தொடர்பான, இரண்டு நாள் பயிற்சி முகாம், கவுண்டம்பாளையத்தில் நடந்தது.
10.  ரோகித் சர்மாவிற்கு,வாய்ப்பு அளித்தால், முன் வரிசையில் இருக்கும் சேவக், சச்சின் அல்லது காம்பிரை நீக்க வேண்டிய இக்கட்டான நிலை உருவாகியுள்ளது. இதன்படி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அடுத்த போட்டியில் சச்சினுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் எனத் தெரிகிறது.

9 பிப்ரவரி, 2012

09/02/2012


1. கிளர்ச்சியைக் கைவிட்டு தேச ஒற்றுமையைக் காப்பாற்றுமாறு,மாலத்தீவின் புதிய அதிபர் முகமது வாஹீத் ஹசன், அந்த நாட்டு மக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
2. திபெத் பிரச்னை சீனாவின் உள்நாட்டு பிரச்னை.எனினும் இப்பிரச்னையில் சீனாவுக்கு உதவ இந்தியா தயாராக இருப்பதாகவும் வெளியுறவுத்துறை அமைச்சர் கிருஷ்ணா கூறினார்.
3. குறைந்தபட்சம் 42 ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட, உலகின் பழமைவாய்ந்த ஓவியம் ஒன்று ஸ்பெயின் நாட்டில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
4. கோத்ரா ரயில் எரிப்பைத் தொடர்ந்து ஏற்பட்ட, குஜராத் கலவரத்தைக் குறித்து அமைக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழு, தனது இறுதி அறிக்கையை நேற்று தாக்கல் செய்தது.
5. ஹரியானா மாநிலம், குருசேத்ராவில் அமைக்கப்பட்டுள்ள 207 அடி உயரமுள்ள கொடிக் கம்பத்தில், 90 அடி நீளம், 60 அடி அகலமுள்ள தேசியக் கொடியை, குடியரசுத் தலைவர் ஏற்றி வைத்தார்.
6. ஆளில்லாமல் பறந்து தாக்கும் திறன் கொண்ட லக்ஷியா-1 விமானம் சந்திபூரில் உள்ள ஒருங்கிணைந்த ஏவுதளத்தில் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டது.
7. கோவையில் கள்ளநோட்டு வைத்திருந்ததாக, மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த இருவரை சிபிசிஐடி போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர்.
8. தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகங்களை ஒருங்கிணைக்கும் பணி குறித்து, தனிக் குழுவினர் ஆராய்ந்து வருவதாக, சென்னை அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் பி. மன்னர் ஜவகர் தெரிவித்தார்.
9. தமிழகம் முழுவதும் ஆக்கிரமிப்பில் உள்ள 4.85 லட்சம் ஏக்கர் கோவில் நிலங்கள் படிப்படியாக மீட்கப்படும் என, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ஆனந்தன் கூறினார்.
10. முத்தரப்பு ஒருநாள் மட்டைப்பந்துப்போட்டித்  தொடரில், இந்திய அணி முதல் வெற்றியை பெற்றது. நேற்று நடந்த லீக் போட்டியில், அஸ்வின், விராத் கோலி ஆகியோரின் சிறப்பானஆட்டத்தால் இலங்கை அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

பிரபலமான இடுகைகள்