1. சிரியாவில், அரசுக்கு
எதிராக நடக்கும் கிளர்ச்சிக்கு, அல்கைதாவின் தலைவர்
அய்மன் அல் ஷவாரி தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.
2. இலங்கை
அதிபர் ராஜபக்ஷே, மூன்று நாட்கள் பாகி்ஸ்தானில்
சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
3. தென்னாப்பிரிக்காவின் புதிய கரன்சியில் 93 வயதான
முன்னாள் அதிபரான நெல்சன் மண்டேலா படம் இடம்பெறுகிறது.
4. போதிய
அளவில் ரயில் பெட்டிகள் இல்லாததால், கடந்த பட்ஜெட்டில்
அறிவிக்கப்பட்ட 99 புதிய ரயில்களில், 31 ரயில்களை இயக்க முடியாத சூழல் நிலவுகிறது.
5. தமிழும்,
வரலாறும் இணைந்தால் தமிழகத்தையும், தமிழ்
பண்பாட்டையும் மீட்டு உருவாக்கம் செய்ய முடியும், என,
தஞ்சைத் தமிழ் பல்கலைக்கழக முன்னாள்
துணைவேந்தார் சுந்தரமூர்த்தி கூறினார்.
6. ஓட்டுப்
போட லஞ்சம் கொடுப்பவர்களுக்குத் தண்டனை அளிக்க வகை
செய்யும், தேர்தல் கமிஷனின் ஆலோசனையை மத்திய அரசு ஏற்றுக்
கொண்டுள்ளது.
7. வீட்டுக்
கடன்களுக்கான வட்டி மீதான வரித் தள்ளுபடி வரம்பை தற்போதுள்ள 1.5 லட்சத்திலிருந்து 3 லட்சம் ரூபாயாக உயர்த்த,
மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
8. ஆனைமலை புலிகள் காப்பகத்தில், புலிகள் மற்றும் வன உயிரினங்களின் கணக்கெடுப்புத் துவங்கி மூன்று நாட்களாக நடந்து வருகிறது.
9. முதல்வரான
பின், தனது சொந்த தொகுதியான ஸ்ரீரங்கத்துக்கு இரண்டாவது
முறையாக இன்று நேரில் செல்லும் முதல்வர், பல்வேறு புதிய
திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.
10. முத்தரப்பு மட்டைப்பந்துத் தொடரின், பரபரப்பான லீக் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியவை
4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக