1. ஜப்பானில், 16 ஆயிரம் பேரை பலிவாங்கிய
நிலநடுக்கம் மற்றும் சுனாமியின் முதலாண்டு நினைவு நாள், நேற்று
நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது.
2. பாகிஸ்தானின் சிந்து
மாகாணத்தில் இந்துக்களை வலுக்கட்டாயமாக முஸ்லிம்களாக மதமாற்றம்
செய்வது அதிகரித்துள்ளதாக,பாகிஸ்தானுக்கான மனித உரிமை
ஆணையம் தெரிவித்துள்ளது.
3. சீனாவின் விண்வெளி நிறுவனம், 2015 ஆம்
ஆண்டுக்குள் 100ஏவுகணைகள், செயற்கைக் கோள்களை ஏவத்
திட்டமிட்டுள்ளது.
4. குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீல் உரையுடன்
நாடாளுமன்ற வரவு செலவுத் திட்டக் கூட்டத் தொடர் இன்று
தொடங்குகிறது.
5. பருத்தி ஏற்றுமதிக்கான தடையை நீக்கி மத்திய அரசு
உத்தரவிட்டுள்ளது.
6. நடுக்கடலில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ராமேசுவரம் மீனவர்கள் மீது
இலங்கை கடற்படையினர் தாக்கியதில் மீனவர் ஒருவர் படுகாயமடைந்தார்.
7. இந்தியாவில் அரசு சாரா தொண்டு நிறுவனங்கள் என்ற
பெயரில் செயல்படும் அமைப்புகள் பல்வேறு வெளிநாடுகளில் இருந்து ஆண்டுக்கு ` 10
ஆயிரம் கோடிக்கு மேல் பெறுகின்றன.
8. உத்தரப் பிரதேச முதல்வராகப் பொறுப்பேற்க உள்ள
அகிலேஷ் யாதவுக்கு தமிழக முதல்வர் தொலைபேசி மூலம் வாழ்த்துத்
தெரிவித்துள்ளார்.
9. நிலநடுக்கம், சுனாமி, அணுமின் நிலைய விபத்து ஆகிய மூன்று பேரழிவுகளிலிருந்தும் மீண்டு, ஜப்பான் ஓராண்டுக்குள் இயல்பு நிலைக்குத் திரும்பிவிட்டதாக, சென்னையிலுள்ள ஜப்பான் துணைத் தூதர் தெரிவித்தார்.
10. ஆசிய கோப்பை மட்டைப்பந்துப்போட்டியின் முதல்
ஆட்டத்தில் 21 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை
வீழ்த்தியது பாகிஸ்தான்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக