1. சிரியாவில்,எந்தவொரு வெளிநாட்டு இராணுவத் தலையீடும், நிலைமையை மேலும் மோசமாக்கும்
என்று, சிரியாவுக்கான தூதுவரான கோபி அனான் எச்சரிக்கை
விடுத்துள்ளார்.
2. ஈரான்
தனது அணுசோதனை குறித்து வல்லரசு நாடுகளுடன் பேச்சுவார்த்தைக்குச் சம்மதம் தெரிவித்திருப்பதற்கு, இஸ்ரேல்
வரவேற்புத் தெரிவித்துள்ளது.
3. ஈரான் மீது தாக்குதல் நடத்தப்பட்டால், அது பிராந்தியச் சீர்குலைவுக்கு வழிவகுக்கும் என்று இந்தியா கருத்து
தெரிவித்துள்ளது.
4. ஐ. நா.வின் மனித உரிமைகள் பேரவையில், இலங்கை
குறித்த ஒரு தீர்மானம் அமெரிக்காவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
5. ஐ.நா மனித உரிமைக் கவுன்சிலில்,அமெரிக்கா
கொண்டுவந்திருக்கும் தீர்மானத்தின் மீது, இந்தியா, தமிழர்களின் நலனை மனதில் கொண்டு, ஒரு
நிலைப்பாட்டை எடுக்கும் என,மைய அமைச்சர் நாராயணசாமி அறிவிப்பு.
6. அரசியலில் பங்கேற்கும்
மகளிர் அதிகம் கொண்ட நாடுகள் எது என்ற பட்டியலில், உலக
அளவில் இந்தியாவுக்கு 105 ஆவது இடம் கிடைத்திருக்கிறது.
7. நாட்டின் எல்லைப்பாதுகாப்பு படையைத் தரம் உயர்த்த, `11 கோடி
செலவில் நவீன வகை போர்விமானங்கள், உலங்கு வானூர்திகளை
வாங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
8. அரசு அலுவலர்கள் 100 விழுக்காடு தமிழில் தான் கையெழுத்திட வேண்டும் என, விழுப்புரம்
மாவட்ட ஆட்சியர் சம்பத் தெரிவித்துள்ளார்.
9. இக்கட்டான போட்டிகளில் நிலையான ஆட்டத்தை
வெளிப்படுத்தி,அணியைக் காக்கும் டிராவிட்டின் ஓய்வு,
இந்திய அணிக்கு மிகப்பெரிய இழப்பாகும் என நட்சத்திர வீரர்
சச்சின் தெண்டுல்கர் கூறியுள்ளார்.
10. ஆஸ்திரேலியாவில நடைபெற்ற, காமன்வெல்த் வங்கி முத்தரப்பு மட்டைப்பந்துத் தொடரின் இறுதிப் போட்டியில், இலங்கையை வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி கோப்பையை கைப்பற்றியுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக