1. உலகில் எந்த
பகுதியையும், ஒரு மணி
நேரத்திற்குள் சென்று தாக்கவல்ல, ஒலியை விட ஏழு மடங்கு
வேகமாக செல்லக்கூடிய, நவீன பிரமோஸ் ஏவுகணை, 2017இல் தயாராகும் என, விஞ்ஞானி சிவதாணு பிள்ளை
தெரிவித்துள்ளார்.
2. ஈக்வடார் நாட்டின் தூதரகத்தில்
தஞ்சம் புகுந்துள்ள, விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன்
அசாஞ்சை சரணடையும்படி, காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
3. பாகிஸ்தானில், இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, 31 ஆண்டு கால சிறைவாசத்திற்குப் பின் விடுவிக்கப்பட்ட சுர்ஜித் சிங்,
நேற்று, வாகா எல்லைப் பகுதி வழியாக,
இந்தியா வந்தடைந்தார்.
4. பொதுமக்கள் தரப்பில் இருந்து வந்த பலத்த
கோரிக்கையை அடுத்து, மதுபான
விற்பனை இல்லாத நகரமாக திருப்பதியை மாற்ற, ஆந்திர மாநில
அரசு பரிசீலித்து வருகிறது.
5. பெட்ரோல் விலை லிட்டருக்கு,ரூ.2.46 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு,
நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
6. தமிழ்நாடு அரசு கேபிள்
டிவி நிறுவனத்தின் மூலம் ரூ. 100 கோடி லாபம் கிடைத்துள்ளது
என அந்நிறுவனத் தலைவர் அறிவிப்பு.
7. சென்னைப் பல்கலைக்கழகத்தில் அனைத்து பி.எச்டி. மற்றும் எம்.பில்.
ஆராய்ச்சி மாணவர்களுக்கும் உதவித் தொகை வழங்கப்படும் என்று அந்தப் பல்கலைக்கழகத்
துணைவேந்தர் ஜி.திருவாசகம் அறிவித்துள்ளார்.
8. தலைமைச் செயலகத்தில் அரசுத் துறைகளில் மின்கசிவு
போன்ற காரணங்களால் தீ விபத்துகள் ஏற்படாமல் தடுக்க துறைதோறும் கண்காணிப்பு
அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
9. கோவை, திருப்பூர் மாவட்டங்களில், இடைநின்ற மாணவர்களுக்காக, விடுதி வசதியுடன்
கூடிய மூன்று சிறப்பு பள்ளிகள் துவங்கப்படவுள்ளதாக, மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.ஏ.,) பிரபாகரன்
தெரிவித்தார்.
10. யூரோ கோப்பை கால்பந்து
தொடரின் பைனலுக்கு, நான்காவது முறையாக முன்னேறியது நடப்பு
சாம்பியன்' ஸ்பெயின் அணி. நேற்று நடந்த அரையிறுதியில்
போர்ச்சுகல் அணியை, பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2
என்ற கோல் கணக்கில் வென்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக