1. பிரதமர் கிலானி, பதவி தகுதி நீக்கம் செய்யப்பட்டதாக
தெரிவித்ததைத் தொடர்ந்து புதிய பிரதமராக மக்தூம்
சகாபுதீன் பெயரை, பாகிஸ்தான் மக்கள் கட்சி பரிந்துரை
செய்துள்ளது.
2. விக்கி லீக்ஸ் நிறுவனர்
ஜூலியன் அசாஞ்ச், இலண்டனில் கைது செய்யப்பட உள்ளதால்,
ஈக்வடார் நாட்டின் தூதரகத்தில் தஞ்சம் புகுந்துள்ளார்.
3. மியான்மர் ஜனநாயக தலைவர்,
ஆங் சாங் சூகிக்கு, ஆக்ஸ்போர்ட் பல்கலைக் கழகம் நேற்று, கவுரவ டாக்டர் பட்டத்தை
வழங்கியது.
4. தகவல் அறியும் உரிமை
சட்டத்தின் கீழ், மத்திய, மாநில
அரசுகள் பெறும் விண்ணப்பங்களுக்கு, முகமை அதிகாரிகள்
எப்படி பதில் அளிக்கவேண்டும் என்பது குறித்து, பயிற்சி
அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
5. குருவாயூர் கோவிலுக்கு சொந்தமான, 64 யானைகளின்
வருடாந்திர சிகிச்சைக்காக, எட்டு லட்சத்து 40 ஆயிரம் ரூபாயை ஒதுக்க, தேவஸ்தான நிர்வாகக்குழு
ஒப்புதல் அளித்துள்ளது.
6. இசைத்துறையில் சாதனை
படைத்தவர்களை பாரட்டும் விதத்தில் ஜூன் 21ஆம் தேதி உலக இசை தினம் இந்தியா, ஆஸ்திரேலியா,
இங்கிலாந்து, சீனா உள்ளிட்ட 110க்கும்
மேற்பட்ட நாடுகளில் கொண்டாடப்படுகிறது.
7. தமிழக அரசின் உத்தரவைப் பின்பற்றி, பொது இடங்களில் விளம்பரத் தட்டிகள்
வைக்க கட்டுப்பாடு விதிக்க, உள்ளாட்சி
அமைப்புகளில் தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளது.
8. மேற்கு தொடர்ச்சி
மலைப்பகுதிகளில், பருவ மழை தீவிரமடைந்துள்ளதால், ஆழியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிக்கத்
துவங்கியுள்ளது.
9. புதிய தலைமைச் செயலகக் கட்டடத்தை, மருத்துவமனையாக மாற்றுவது
தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கில் தலையிட முடியாது என, உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
10. யூரோ கோப்பை கால்பந்து
தொடரில் இன்று நடக்கவுள்ள முதலாவது காலிறுதியில், போர்ச்சுகல்
– செக் குடியரசு அணிகள் மோதுகின்றன. இதில் அபார ஆட்டத்தை
வெளிப்படுத்தி அரையிறுதிக்கு முன்னேற, ரொனால்டோ
தலைமையிலான போர்ச்சுகல் அணி காத்திருக்கிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக