21 ஜனவரி, 2013
2 ஜூலை, 2012
02/07/2012
1..மெக்சிகோ அதிபர்
பெலிபி கால்ட்ரனின் பதவி காலம் முடிவடைவதால், நேற்று
அதிபர் தேர்தல் நடந்தது.
2. ஜப்பான் ஃபுகுஷிமாவில்
அணுஉலை விபத்து ஏற்பட்ட பகுதிகளில் உள்ள சிறுவர்களை ஆய்வு செய்ததில், பெரும்பான்மையானவர்களின்
உடலில் கதிரியக்கம் கொண்ட சீசியம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
3. தூக்குத் தண்டனை
பெற்றவர்களின் கருணை மனுக்களை பரிசீலிப்பது என்பது, மிகவும் சிக்கலான விஷயம் என, முன்னாள்
குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் கூறியுள்ளார்.
4. அகில இந்திய பணியில் உள்ள
அதிகாரிகளில்,சரியாக செயல்படாத அதிகாரிகளுக்கு, ஓய்வு கொடுக்க வேண்டும் என, மத்திய அரசு
கேட்டுக் கொண்டுள்ளது.
5. அடுத்த 5
ஆண்டுகளுக்குள் 60 ராக்கெட்டுகளை
ஏவுவதற்கு வசதியாக 3ஆவது ஏவுதளத்தை ஆந்திர மாநிலம்
ஸ்ரீஹரிகோட்டாவில் அமைக்க இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் (இஸ்ரோ) முடிவு
செய்துள்ளது.
6. இருதரப்பு உறவை வலுப்படுத்தும் வகையில், மத்திய
வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணா, தஜிகிஸ்தான்
நாட்டுக்கு 2 நாள் பயணம் செய்கிறார்.
7. மருத்துவக் கல்வி பயில
விரும்பும் மாணவர்களுக்கு, இந்த ஆண்டு மருத்துவக் கல்வித் துறை புதிதாக 3,595 எம்.பி.பி.எஸ்., இடங்களை உருவாக்கியுள்ளது.
8. மாணவர்கள் அனைவரும் மரம் நட வேண்டும்; அதிக மரங்கள் நட்டாலே சுனாமி, தானே புயல்
போன்ற பேரழிவுகளைத் தடுக்கலாம் என சட்டப்பேரவைத் தலைவர் டி. ஜெயகுமார் வலியுறுத்தியுள்ளார்.
9. நேற்று நடந்த
விறுவிறுப்பான இறுதி ஆட்டத்தில் 4-0 என்ற கோல் கணக்கில் இத்தாலி
அணியை, ஸ்பெயின் அணி வென்று, யூரோ
கோப்பையைத் தக்க வைத்துக் கொண்டது.
10. விம்பிள்டன் டென்னிஸ்
ஒற்றையர் பிரிவு நான்காவது சுற்றுக்கு, இங்கிலாந்து வீரர்
ஆன்டி முர்ரே முன்னேறினார்.
29 ஜூன், 2012
29/06/2012
1. உலகில் எந்த
பகுதியையும், ஒரு மணி
நேரத்திற்குள் சென்று தாக்கவல்ல, ஒலியை விட ஏழு மடங்கு
வேகமாக செல்லக்கூடிய, நவீன பிரமோஸ் ஏவுகணை, 2017இல் தயாராகும் என, விஞ்ஞானி சிவதாணு பிள்ளை
தெரிவித்துள்ளார்.
2. ஈக்வடார் நாட்டின் தூதரகத்தில்
தஞ்சம் புகுந்துள்ள, விக்கி லீக்ஸ் நிறுவனர் ஜூலியன்
அசாஞ்சை சரணடையும்படி, காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது.
3. பாகிஸ்தானில், இந்தியாவுக்காக உளவு பார்த்ததாக குற்றம் சுமத்தப்பட்டு, 31 ஆண்டு கால சிறைவாசத்திற்குப் பின் விடுவிக்கப்பட்ட சுர்ஜித் சிங்,
நேற்று, வாகா எல்லைப் பகுதி வழியாக,
இந்தியா வந்தடைந்தார்.
4. பொதுமக்கள் தரப்பில் இருந்து வந்த பலத்த
கோரிக்கையை அடுத்து, மதுபான
விற்பனை இல்லாத நகரமாக திருப்பதியை மாற்ற, ஆந்திர மாநில
அரசு பரிசீலித்து வருகிறது.
5. பெட்ரோல் விலை லிட்டருக்கு,ரூ.2.46 குறைக்கப்பட்டுள்ளது. இந்த விலை குறைப்பு,
நேற்று நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
6. தமிழ்நாடு அரசு கேபிள்
டிவி நிறுவனத்தின் மூலம் ரூ. 100 கோடி லாபம் கிடைத்துள்ளது
என அந்நிறுவனத் தலைவர் அறிவிப்பு.
7. சென்னைப் பல்கலைக்கழகத்தில் அனைத்து பி.எச்டி. மற்றும் எம்.பில்.
ஆராய்ச்சி மாணவர்களுக்கும் உதவித் தொகை வழங்கப்படும் என்று அந்தப் பல்கலைக்கழகத்
துணைவேந்தர் ஜி.திருவாசகம் அறிவித்துள்ளார்.
8. தலைமைச் செயலகத்தில் அரசுத் துறைகளில் மின்கசிவு
போன்ற காரணங்களால் தீ விபத்துகள் ஏற்படாமல் தடுக்க துறைதோறும் கண்காணிப்பு
அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
9. கோவை, திருப்பூர் மாவட்டங்களில், இடைநின்ற மாணவர்களுக்காக, விடுதி வசதியுடன்
கூடிய மூன்று சிறப்பு பள்ளிகள் துவங்கப்படவுள்ளதாக, மாவட்ட
முதன்மை கல்வி அலுவலர் (எஸ்.எஸ்.ஏ.,) பிரபாகரன்
தெரிவித்தார்.
10. யூரோ கோப்பை கால்பந்து
தொடரின் பைனலுக்கு, நான்காவது முறையாக முன்னேறியது நடப்பு
சாம்பியன்' ஸ்பெயின் அணி. நேற்று நடந்த அரையிறுதியில்
போர்ச்சுகல் அணியை, பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2
என்ற கோல் கணக்கில் வென்றது.
28/06/2012
1. மியான்மர் ஜனநாயக தலைவர் அவுங் சாங் சூச்சிக்கு, பிரான்ஸ் நாட்டின் கவுரவ குடிமகன் விருது
வழங்கப்பட்டுள்ளது.
2. இலங்கையில், முன்கூட்டியே தேர்தல் நடத்தும் பொருட்டு, மூன்று
மாகாண கவுன்சில்கள் நேற்று கலைக்கப்பட்டன.
3. ஐ.ஐ.டி., கல்வி நிறுவனங்களில் மாணவர்களை தேர்வு செய்யும் போது, அனைத்து பள்ளிப் பாடத்திட்டங்களிலும், முதல் 20
விழுக்காடு இடங்களை பிடித்த மாணவர்களுக்கு சிறப்பு வாய்ப்பு
அளிக்கும் வகையில் புதிய தேர்வு முறையை, ஐ.ஐ.டி., கவுன்சில் உருவாக்கியுள்ளது. இது, அடுத்தாண்டு
நடைமுறைக்கு வருகிறது.
4. சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி கண்டு
வருவதால், எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல்
விலையைக் குறைக்க முடிவு செய்துள்ளன. லிட்டருக்கு நான்கு ரூபாய் வரை
குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
5. பட்டதாரி மற்றும்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் காலியிடங்களை பதிவு மூப்பு அடிப்படையில்
நிரப்புவதற்காக ஜூலை 1ஆம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு
மீண்டும் நடத்தப்படும் என்று ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.
6. நீலகிரி மாவட்டம்
குன்னூர் பாஸ்டியர் நிறுவனம், ஐந்தாண்டுகளுக்கு பிறகு மீண்டும் செயல்பட துவங்கியது. இந்நிகழ்ச்சியில்,
மத்திய அரசின் ஒருங்கிணைந்த நோய் தடுப்பு திட்டத்துக்கு,
15 லட்சம் டோஸ் முத்தடுப்பு மருந்துகள் வெளியிடப்பட்டன.
7.கல்லூரி மாணவர்கள் மற்றவர்களிடம் சகிப்புத்
தன்மையோடு நடந்துகொள்ள வேண்டும் என்று, கோவை மாவட்டக்
காவல்துறைக் கண்காணிப்பாளர் உமா கேட்டுக் கொண்டார்.
8. யூரோ கோப்பை போட்டியில் வியாழக்கிழமை நடைபெறும் 2ஆவது அரையிறுதி ஆட்டத்தில் ஜெர்மனி-இத்தாலி அணிகள் மோதுகின்றன.
9. விம்பிள்டன் டென்னிஸ்
ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் சுவிட்சர்லாந்தின் ரோஜர் பெடரர் வெற்றி
பெற்றார்.
27/06/2012
1.இலண்டனில் உள்ள
புகழ்பெற்ற, பிக் பென் கடிகாரக்
கோபுரத்திற்கு, இரண்டாவது எலிசபெத் அரசியின் பெயர்
சூட்டப்பட்டுள்ளது.
2. பாகிஸ்தான் கடல்
எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் கைது செய்யப்பட்டுள்ள 315
இந்திய மீனவர்களை வியாழக்கிழமை விடுவிக்க அந்நாட்டு அரசு நடவடிக்கை
எடுத்துள்ளது.
3. குடியரசுத் தலைவர் தேர்தலை முன்னிட்டு, இந்தியா - பாகிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டம்
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
4. குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும்
பி.ஏ.சங்மா,மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை,
சந்தித்து, தனக்கு ஆதரவு அளிக்கும்படி
கோரிக்கை விடுத்தார்.
5. சென்னை அரசு பல் மருத்துவக்
கல்லூரி மற்றும் மருத்துவமனையை ஒப்புயர்வு மையமாகத் தரம் உயர்த்த, 10 கோடி ரூபாயை ஒதுக்கி, தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
6. பொதுத் தேர்தல் நடத்துவது போல்,
டி.என்.பி.எஸ்.சி., தேர்வை நடத்த,
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.
7. அண்ணா பல்கலைக்கழகத்
துணைவேந்தராக கடந்த 4 ஆண்டுகளாகப் பதவி வகித்து
வந்த,துணைவேந்தர் மன்னர் ஜவஹர், அந்தப்
பதவியிலிருந்து நேற்று ஓய்வு பெற்றார்.
8. கோவையில் தனியார் மெட்ரிக் பள்ளியில் பயின்று,
அப்பள்ளியிலேயே 11ஆம் வகுப்பிற்கு சேர்க்கை
வழங்கப்படாத மாணவர் சார்பில், மாவட்ட ஆட்சியரிடம் புகார்
அளிக்கப்பட்டது.
9.
தமிழ்நாடு வேளாண்
பல்கலையில், இளநிலை
பட்டப்படிப்பு மாணவர் சேர்க்கைக்கான, முதல் கட்ட கலந்தாய்வு,
ஜூலை 2ஆம் தேதி துவங்குகிறது.
10. யூரோ கோப்பை கால்பந்து தொடரில்
இன்று நடக்கவுள்ள முதலாவது அரையிறுதியில், நடப்பு
சாம்பியன்களான ஸ்பெயின், போர்ச்சுகல்
அணிகள் மோதுகின்றன. 26/06/2012
1.
வங்கதேசப் போரின்
போது தற்போதைய பிரதமர் ஷேக் ஹசீனாவையும், அவரது தாயையும் காப்பாற்றிய ஓய்வு பெற்ற இந்திய ராணுவ அதிகாரி அசோக்
தாராவுக்கு, அந்நாட்டு அரசு உயரிய விருது அளித்து
கவுரவிக்க உள்ளது.
2. இஸ்ரேலில்
உள்ள ஹீப்ரூ பல்கலைக்கழகத்தில் நோபல் பரிசு பெற்ற தேசியக் கவிஞர் ரவீந்திரநாத்
தாகூரின், 150ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது மார்பளவு சிலை திறந்துவைக்கப்பட்டது.
3. மும்பை தீவிரவாதத் தாக்குதல் சம்பவத்தில்
தொடர்புடையவராகத் தேடப்பட்டு வந்த சையத் ஜபியுதீன் அன்சாரி என்கிற அபு ஜிண்டால்
எனும் பயங்கரவாதியை தில்லி போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
4. மென்பொருள் தொழிலில்
மிக முக்கியமான மையமாக மாறியுள்ள ஆந்திரா, வன்பொருள் துறையில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக, மின்னணு
வன்பொருள் கொள்கையை வெளியிட்டுள்ளது.
5. குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடும் மைய நிதியமைச்சர் பிரணாப்
முகர்ஜி, இன்று, பிரதமரைச் சந்தித்து, நிதியமைச்சர் பதவியிலிருந்து
விலகி, நாளை மறுநாள், வேட்பு மனு
தாக்கல் செய்கிறார்.
6. மத்திய அரசின் திட்ட
ஒதுக்கீடாக, புதுச்சேரி மாநிலத்திற்கு 3,000 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.
7. மானியத்தில் வழங்கப்படும்
உரங்களைத் தொழிற்சாலைகளின்
பயன்பாட்டிற்கு பயன்படுத்துவோருக்கு 7 ஆண்டு சிறை தண்டனை
விதிக்கப்படும் என வேளாண் இணை இயக்குனர் எச்சரித்துள்ளார்.
8. தமிழகத்தில் அரசு
மருத்துவக் கல்லூரிகளில் நடப்புக் கல்வி ஆண்டில் (2012- 2013) எம்.பி.பி.எஸ். படிப்பில் சேரும் பொதுப் பிரிவு மாணவர்களுக்கான
கட்-ஆஃப் மதிப்பெண் 198.50-ஆக இருக்கும் என
மதிப்பிடப்பட்டுள்ளது.
9. கோவை மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையே நடைபெற்ற கபடி போட்டிகளில், ஆண்கள் பிரிவில் சுண்டக்காமுத்தூர்
அரசு பள்ளியும், பெண்கள் பிரிவில் குளத்துப்பாளையம் அரசு
பள்ளியும் சாம்பியன் பட்டம் வென்றன.
10. யூரோ கோப்பை கால்பந்துத் தொடரின் அரையிறுதிக்கு இத்தாலி அணி முன்னேறியது. பரபரப்பான
காலிறுதியில்,இங்கிலாந்தை பெனால்டி ஷூட்-அவுட் முறையில் 4-2
என்ற கோல் கணக்கில் வென்று இங்கிலாந்து
அணியைத் தொடரிலிருந்து வெளியேற்றியது.
25/06/2012
1. பாகிஸ்தான் பிரதமர்
பதவியிலிருந்து, யூசுப்
ரசா கிலானி, தகுதி நீக்கம் செய்யப்பட்டதால், முல்தான் தொகுதியில், அவரது மகன் போட்டியிட
உள்ளார்.
2. பெல்ஜியம் நாட்டின் பிரசல்ஸ்
நகரில், ஐரோப்பிய கூட்டமைப்புகளின் வர்த்தக மாநாடு,
வரும் 28ஆம் தேதி நடக்கிறது. இந்த மாநாட்டில்
பங்கேற்கும் இந்திய வர்த்தகத் துறை அமைச்சர் ஆனந்த் சர்மா தலைமையிலான குழு,
சில முக்கிய ஒப்பந்தங்களை மேற்கொள்ள உள்ளது.
3. எகிப்து நாட்டில் நடந்த
தேர்தலில், சகோதரத்துவ கட்சி வெற்றி பெற்றுள்ளதாக,
அந்நாட்டின் தேர்தல் ஆணையம், நேற்று
அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
4. அடுத்த நிதியமைச்சராக யாரை
நியமிப்பது என்பது தொடர்பாக குழப்பம் ஏற்பட்டுள்ளது என, பிரதமர்
மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
5.சுகாதாரப் பிரச்னைகளை சரிவர
நிவர்த்தி செய்யாத பட்சத்தில், அக்னி போன்ற ஏவுகனைகளை
செலுத்துவதால் எந்த நன்மையும் ஏற்பட்டுவிடாது, என,
மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ்
தெரிவித்துள்ளார்.
6. எதிரி நாடுகளின்
ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க,
டில்லி மற்றும் மும்பையில் ஏவுகணைப் பாதுகாப்புக் கவச முறைகளை
நிறுவ, இராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம்
(டி.ஆர். டி.ஓ.,) முடிவு செய்துள்ளது
7. காஷ்மீரில், இமயமலையில் உள்ள அமர்நாத் குகை கோவிலில் உருவாகும் பனி லிங்கத்தை
தரிசிப்பதற்கான யாத்திரை, நேற்று முறைப்படி துவங்கியது.
8. விழுப்புரம் மாவட்டத்தில் தானே புயலால் பாதிக்கப்பட்ட
தென்னை மரங்களை அப்புறப்படுத்த 4 கோடியே 43
லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
9. தெற்காசியாவில் குப்பையில்லா
நகரமாக உருவாக்க, இந்தியாவில் சிக்கிம் மற்றும் கோவை
மாநகராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன என, கோவை மாநகர மேயர்
கூறினார்.
10. யூரோ கோப்பை கால்பந்து
தொடரின் அரையிறுதிக்கு நடப்பு சாம்பியன் ஸ்பெயின் அணி முன்னேறியது. விறுவிறுப்பான காலிறுதியில் சாபி
அலோன்சா 2 கோல் அடிக்க, பிரான்ஸ்
அணியை எளிதாக வீழ்த்தியது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Featured post
Reading maketh a human
https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece
-
சிறுவயதில் நாம் பல பாடல்களைப் பாடியிருப்போம். "கைவீசம்மா கைவீசு!',... "தோசையம்மா தோசை!',... "அம்மா இங்கே...
-
1. சைவ சமயக் குரவர் ------------------- 2. மாணிக்க வாசகர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் ------------------- 3. ‘ அழுது அ...
-
விநாடி - வினா 1. எய்ட்ஸ் நோயைக் கண்டறிய உதவும் பரிசோதனையின் பெயர் என்ன? எலிசா பரிசோதனை 2. நவீனக் கணினியின் தந்தை யார்? சார்லஸ்...