ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் தெனாலி என்ற இடத்தில் பிறந்த ரோசையா, வணிகவியலில் பட்டம் பெற்றவர். கல்லூரிப் பருவத்தில் மாணவர் தலைவராக தேர்வான அவர், பின்னர் அரசியலில் நுழைந்தார். 1968, 1974, 1980 ஆகிய ஆண்டுகளில் ஆந்திர சட்டமேலவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1995 முதல் 1997ம் ஆண்டு வரை ஆந்திர மாநில காங்கிரஸ் தலைவராக அவர் செயல்பட்டுள்ளார். 1998ம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வானார். ராஜசேகர ரெட்டியின் திடீர் மறைவைத் தொடர்ந்து கடந்த 2009ம் ஆண்டு ஆந்திர முதலமைச்சராக பொறுப்பேற்ற ரோசையா, ஜெகன்மோகன் ரெட்டி சூறாவளியில் சிக்கி அடுத்த ஆண்டே பதவியிழந்தார். ஆந்திர சட்டசபையில் 16 முறை நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து அவர் சாதனை படைத்துள்ளார். தற்போது ஆந்திர சட்டப்பேரவை உறுப்பினராக பதவி வகிக்கிறார். ரோசையாவுக்கு சிவலெட்சுமி என்ற மனைவியும், 3 குழந்தைகளும் உள்ளனர். இவர் தற்போது தமிழக ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அதிகாரபூர்வ செய்தியை ஜனாதிபதி மாளிகை வெளியிட்டுள்ளது.
27 ஆகஸ்ட், 2011
14 ஆகஸ்ட், 2011
13 ஆகஸ்ட், 2011
11 ஆகஸ்ட், 2011
இங்கிலாந்தில் அமைதி திரும்பட்டும் ; சோமாலியாவில் உணவுப் பஞ்சம் தீரட்டும்
எழுதப் படாத சட்டங்களைக் கொண்டு, தங்களது மரபுகளையே வாழ்க்கையாகக் கொண்டு வாழும் ,உலகின் மிகச் சிறந்த மக்களாட்சி நாடுகளுள் சிறந்த நாடாகவும் இருக்கும் இங்கிலாந்தில் கலவரம்,வன்முறை, சூறையாடல், போன்ற செய்திகளைக் காணவும், கேட்கவும் மனம் வருந்துகிறது.சூரியன் மறையாத ஆட்சியைக் கொண்டிருந்த இந்நாடும் ,இந்நாட்டு மக்களும்,இன்று படும் வேதனையைச் சொல்லி மாளாது.பொது மக்கள் என்ன பாவம் செய்தனர்? ஒன்றுமறியா அப்பாவிகள் இவ்வாறு அல்லல் படுவது யாராலும் சகித்துக்கொள்ள முடியாத ஒன்று!
சோமாலிய நாட்டிலோ இன்னுமொரு கொடுமை!உணவின்றி தினமும் ஆயிரக்கணக்கான குழந்தைகள் மாண்டுபோகின்றனர்.மனிதத் தன்மை உள்ள எந்த ஒரு நாட்டவரும் இதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.உணவு அளிக்க ஐ.நா அவையும் ,மற்ற நாடுகளும் தயாராக இருந்தாலும் அதை மக்களுக்கு அனுமதிக்கவோ, அதை அவர்கள் பெற்றுக்கொள்ளவோ. அந்நாட்டில் இருந்து செயல்படும் தீவிரவாதக்குழுக்களும்,இராணுவமும் அனுமதிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
மக்கள் சமுதாயம் இவற்றையெல்லாம் கண்டும் காணாதது போல இருப்பது, மனித சமுதாயம் மனிதத்தன்மையை இழந்து வருகிறதோ என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது....
9 ஆகஸ்ட், 2011
பெட்ரோல் விலை குறைய வாய்ப்பு!
அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள பொருளாதார சுணக்கத்தின் காரணமாக, தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என்ற எண்ணத்தின் காரணமாக உலக அளவில் கச்சா எண்ணையின் விலை,ஒரு பீப்பாய் விலை90டாலருக்கும் குறைவாக விற்பனையாவதால், இந்தியாவில் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலைகளும் குறையக்கூடும் என எதிர்பார்க்கபடுகிறது.
இதை மய்ய பெட்ரொலியத்துறை அமைச்சர் ஜெயபால் ரெட்டியும் சூசகமாகத்தெரிவித்துள்ளார். இதன் மூலம் நாட்டில் பெட்ரோல் டீசல் ஆகியவற்றின் விலைக் குறைப்பை விரைவில் எதிர்பார்க்கலாம்.
இன்னும் 10 நாட்களுக்குள் ............
தமிழகத்தில் இன்னும் 10 நாட்களுக்குள் சமச்சீர் கல்வியை நடைமுறைப்படுத்தும்படி தமிழக அரசுக்கு இந்திய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் கடந்த 2 1/2 மாதங்களாக தமிழக மாணவர்கள், பெற்றோர்களுக்கு ஏற்பட்டிருந்த குழப்பம் விலகியுள்ளது. இந்த உத்தரவை உடனடியாக, தமிழக அரசு நடைமுறைப் படுத்தும் என தமிழக முதலமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார்.
4 ஆகஸ்ட், 2011
Tamilnadu Budget 2011 - 2012 / Freebies to students - தமிழக அரசின் வரவு- செலவுத் திட்டம்- மாணவர்களுக்கான சலுகைகள்
அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10 ,11 ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ 1500 வீதமும், 12 ஆம் வகுப்பில் பயிலும் மாணவர்களுக்கு ரூ 2000 வீதமும் வழங்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. மேலும் 11. 12 வகுப்பு மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டமும் அறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி முறைப்படி தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆறாம் வகுப்பு முதல் மாணவர்களுக்கு 4 சோடி கால்சட்டைகளுடன் கூடிய சட்டைகளும், மாணவிகளுக்கு, சல்வார் கமீசுகளும் வழங்கப்படவும் இந்த அறிவிப்பு வழிவகை செய்துள்ளது.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Featured post
பொது அறிவு வினா - விடை
பொது அறிவு 1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...
-
1. சைவ சமயக் குரவர் ------------------- 2. மாணிக்க வாசகர் இறைவனால் ஆட்கொள்ளப்பட்ட இடம் ------------------- 3. ‘ அழுது அ...
-
விநாடி - வினா 1. எய்ட்ஸ் நோயைக் கண்டறிய உதவும் பரிசோதனையின் பெயர் என்ன? எலிசா பரிசோதனை 2. நவீனக் கணினியின் தந்தை யார்? சார்லஸ்...
-
சிறுவயதில் நாம் பல பாடல்களைப் பாடியிருப்போம். "கைவீசம்மா கைவீசு!',... "தோசையம்மா தோசை!',... "அம்மா இங்கே...