21 மே, 2019

அயோத்திதாசர்

அயோத்திதாசர்
சமூகப் போராளி, தமிழறிஞர்

தென்னிந்தியாவின் முதல் ஜாதி எதிர்ப்புப் போராளி, சமூக சேவகர், தமிழறிஞர், சித்த மருத்துவருமான அயோத்தி தாசர் (C.Iyothee Thass) பிறந்த தினம் இன்று (மே 20). அவரைப் பற்றிய அரிய முத்துக்கள் பத்து:

* சென்னை ஆயிரம் விளக்குப் பகுதியில் பெரும் கல்விப் பின்னணி உள்ள குடும்பத்தில் பிறந்தார் (1845). இவருடைய தாத்தா, வழக்கில் இல்லாமல் போயிருந்த திருக்குறளைத் தன் குடும்ப சேமிப்பு ஏடுகளிலிருந்து மீட்டெடுத்து தமிழ் இலக்கியச் சுவடிகளைச் சேகரிப்பதில் தன் வாழ்நாளைச் செலவிட்ட எல்லிஸ் துரையிடம் வழங்கியவர். அதன் பின்னர்தான் திருக்குறள் அச்சு வடிவுக்கு வந்தது.

* தந்தையின் பணி காரணமாகக் குடும்பம் நீலகிரிக்குக் குடியேறியது. இவரது இயற்பெயர் காத்தவராயன். தந்தையிடமே ஆரம்பக்கல்வி கற்றார். பின்னர் காசிமேடு சதாவதானி வைரக்கண் வேலாயுதம் புலவர், வல்லக்காளத்தி வீ.அயோத்தி தாசர் பண்டிதர் ஆகியோரிடமும் கல்வி கற்றார். மேலும் சித்த மருத்துவம், தமிழ், இஸ்லாம், கிறிஸ்தவம், இந்த சமய தத்துவங்களையும் கற்றார்.

* தன் குரு மீது கொண்ட பற்றால் தனது பெயரை அயோத்தி தாசர் என மாற்றிக்கொண்டார். தான் சார்ந்த மக்களின் வாழ்க்கை, சமூகத்தில் அவர்களது நிலை, தீண்டாமைக் கொடுமை, கல்வியறிவின்மை இவற்றைப் பார்த்து வளர்ந்த இவர், அவர்களுக்காகப் போராடுவதையே தன் குறிக்கோளாகக் கொண்டார்.

* 1870-ல் நீலகிரியில் அத்வைதானந்த சபையை நிறுவினார். இதன் மூலம் தேயிலைத் தோட்டப் பணியாளர்கள், மலை ஜாதி பழங்குடியின மக்களை ஒன்றிணைத்து ஜாதி பேத உணர்வை ஒழிக்கப் பாடுபட்டார்.

* அனைவரும் கல்வி கற்கும் வாய்ப்புகளுக்கு உள்ள சமூகத் தடைகளை நீக்க வேண்டும், கிராம ஒன்றியங்கள், நகராட்சிகள் ஆகியவற்றில் அனைத்துப் பிரிவினருக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும், பொது நீர்நிலைகளைப் பயன்படுத்துவதற்கான தடை நீக்கப்பட வேண்டும் ஆகியவற்றுக்காகப் போராடி வந்தார்.

* ஒடுக்கப்பட்ட மக்களுக்காக சென்னையில் பள்ளிக்கூடங்கள் திறக்கப்பட முக்கிய காரணமாக இருந்தார். ஏழைகளுக்கு இலவசக் கல்வி, மதிய உணவு வழங்குவதில் முன்னோடியாக இருந்தார். 1885-ல் ‘திராவிட பாண்டியன்’ என்ற இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றினார்.

* 1891-ல் இரட்டைமலை நிவாசனுடன் இணைந்து பஞ்சமர் மகாஜன சபையைத் தோற்றுவித்தார். 1898-ல் ஏராளமான தீண்டத்தகாத மக்களுடன் இணைந்து புத்த மதத்தைத் தழுவினார்.

* 1907-ல் ‘ஒரு பைசா தமிழன்’ என்ற செய்தி வார இதழைத் தொடங்கினார். இதில் அரசியல், சமூகம், ஜாதி, மதம், இலக்கியம் குறித்து கட்டுரைகளை எழுதினார். பின்னர் இது ‘தமிழன்’ என்ற பெயரில் வெளிவரத் தொடங்கியது.

* ‘புத்தரது ஆதி வேதம்’, ‘இந்திரர் வேத சரித்திரம்’, ‘அம்பிகையம்மன் சரித்திரம்’, ‘அரிச்சந்திரன் பொய்கள்’, ‘கபாலீசன் சரித்திர ஆராய்ச்சி’, ‘சாக்கிய முனி வரலாறு’, ‘திருக்குறள் கடவுள் வாழ்த்து’, ‘புத்த மார்க்க வினா விடை’ உள்ளிட்ட பல நூல்கள், 30 தொடர் கட்டுரைகள், 2 விரிவுரைகள், 12 சுவடிகளுக்கு உரை, ஏராளமான அரசியல் கட்டுரைகள், கேள்வி பதில், பகுத்தறிவுக் கட்டுரைகள் என நூற்றுக்கணக்கில் எழுதியுள்ளார்.

* தாழ்த்தப்பட்ட சமூகத்தினரின் விடிவெள்ளியாகத் தோன்றி அவர்களின் முன்னேற்றத்துக்காகத் தன் வாழ்நாளை அர்ப்பணித்த அயோத்தி தாசர் 1914-ம் ஆண்டு 69-வது வயதில் மறைந்தார்.

Rajiv Gandhi anniversary

நாட்டின் ரத்த‌ நாளங்களான உள்ளா‌ட்சி அமைப்புகள் தங்களது தேவையை தாங்களே திட்டமிட்டு நிறைவேற்றிக்கொள்ளும்‌ வகையில், பஞ்சாயத் ராஜ் எனும் சட்டத்தை‌ நிறைவேற்றியவர். இந்தியாவில் ஏற்பட்ட தகவ‌ல் தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திட்‌டவர். இன்று உ‌லகமெங்கும் கணினித்துறையில் இந்திய இளைஞர்கள் கோலோச்சி வருவதற்கு‌ மூல காரணமாகத் திகழ்ந்‌தவர். அரை மனதுடன் அரசியலுக்கு வந்த போதிலும் அளவற்ற சாதனைகளைப் படைத்த‌வர். 198‌5ஆம் ஆண்டு, சுற்‌றுச்சூழலை‌ப் பாதுகாத்திட தனி அமைச்சகத்தை உருவாக்கினார். அதே வருடம், 'கட்சித்தாவல் தடைச் சட்டத்தை'‌ அறிமுகப்படுத்தி‌, நேர்மையற்ற அரசியல்‌வாதிகள் கட்சித்தாவல் மூலம் அரசியலை பாழ்படுத்தி‌ கேலிக்கூத்தாக்கி வருவதற்கு முடிவு கட்டினார்.

நேர்மையானவர்களுக்கும், துடிப்பானவர்களுக்கும் முக்கியத்துவம் அளிக்க‌ வேண்டும் என்ற அடிப்‌படையில் தனது அமைச்சரவையை உருவாக்கினார். அப்போது இந்திரா காந்தியிட‌மே நற்பெயர் வாங்கியவர் என்பதால், வி.பி.சிங்கிற்கு நிதித்துறையை ஒதுக்கினார் ராஜீவ்.

"நேருவைப் போல உலக சமாதானத்திற்காக விழையும் உண்மையான தலைவர்" என சிங்கப்பூரை கட்டமைத்த முன்னாள் பிரதமர் லீ குவான் யூ- வால் பாராட்டப் பெற்றவர். அவர்தான் ரா‌ஜீவ் காந்தி.

2 மே, 2019

Individuality


பதிணென் சித்தர்கள்



சித்தர்கள் என்றாலே சித்து பெற்றவர்கள். சித்து வேலை என்பது மாய வேலை என்று நினைப்பது தவறு. இந்த பூவுலகில் மனிதனை பண்படுத்த அவர்கள் ஏற்படுத்தி வைத்திருந்த கலையே சித்து.

சித்தர்கள் அழியாத உடம்பைப் பெற்றவர்கள். இரும்பை தங்கமாக்கும் வித்தையை கற்றவர்கள். கூடுவிட்டு கூடுபாயும் சக்தி கொண்டவர்கள். முக்கால நிகழ்வுகளையும் அறியக் கூடியவர்கள். நினைத்தவுடன் நினைத்த வடிவம் எடுத்துக்கொள்வார்கள். நீரிலும் நெருப்பிலும் வானத்திலும் நடந்து செல்லும் வல்லமை பெற்றவர்கள். உலகம் முழுவதையும் தன் வசப்படுத்தி நடத்தி செல்லும் ஆற்றல் பெற்றவர்கள் என புகழப்படுகிறார்கள்.

சித்தர்கள் தம் சித்தத்தை கொண்டு மனம், சித்தம், புத்தி, அகங்காரம் என்ற நான்கையும் சிவமாக ஆக்கிகொண்டவர்கள். சாதாரணமாகக் கோவில்களில் யந்திரங்களை ஸ்தாபிதம் செய்து அதன் மேல் விக்கிரகங்களை பிரதிஷ்டை செய்வார்கள். அதன் சக்தி குறைந்தால் மீண்டும் ஆகம நெறிப்படி குடமுழுக்குச் செய்வர். ஆனால் சித்தர்கள் அடக்கமாயிருக்கும் கோவில்களுக்கு குட முழுக்குத் தேவையில்லை. ஜீவன் முக்தர்களின் உயிர்சக்தியின் இயக்கம் எப்போதும் அலை இயக்கமாக அங்கே பரவி நிற்கிறது.

அதை பல சன்னிதிகளுக்கு செல்லும் போதே நம்மால் உணர முடியும். நமது உடலில் ஒருவிதமான அதிர்வு ஏற்படும். மனது நிம்மதி அடையும். எனவேதான் அவர்கள் அடங்கிய இடங்களை நோக்கி ஓடுகிறோம். மனைத தியானப்படுத்துகிறோம்.

இவர்கள் உலகத்தவரின் துன்பங்கள் நீங்க வேண்டும் என்ற சத்தியத்தோடு சமாதி பெற்றவர்கள். அந்தக் காரியத்தைத் தொடர்ந்து செய்து கொண்டேயிருப்பார்கள்.

இவர்கள் வினை காரணமாகப் பிறவி எடுப்பவர்கள் அல்ல. உலகை உய்விக்க வந்து தோன்றியவர்கள். இவர்களை நினைத்துப் போற்றினால் இவர்களின் அருளும் அதன் மூலம் இறையருளும் நமக்குக் கிடைக்கும்.

ஒரு சித்தன் சிறிது நேரம் சமாதி நிலையிலோ அல்லது தியான நிலையிலோ இருந்தால் அவன் பல ஆண்டுகள் உலகில் நல்ல அணுக்கள் வாழும் படி செய்து விடுவான். பெரும்பாலான சித்தர்களுக்கு ஆண்டவன் ஜோதி வடிவில் காட்சித் தருவான். சித்தர்களும் தம் பக்தர்களுக்கு ஜோதி வடிவிலேயே காட்சி தருவார்கள்.

கடவுளைக் காண முயல்கின்றவர்களை பக்தர்கள் என்றும் கண்டு தெளிந்தவர்களைச் சித்தர்கள் என்றும் தேவாரம் கூறுகிறது.

மந்திரம் தந்திரம் யந்திரம் இவற்றால் ஆன்ம லாபம் பெறுவதற்கு வழிகாட்டியவர்கள் சித்தர்கள்தான்.

🐂📣விவசாயப் பழமொழிகள்...📣🐂

⚛️தவளை கத்தினால் மழை 

⚛️அந்தி ஈசல் பூத்தால், 
அடை மழைக்கு அச்சாரம் 

⚛️தும்பி பறந்தால், தூரத்தில் மழை

⚛️எறும்பு ஏறில் ,பெரும் புயல் 

⚛️மார்கழி மழை மண்ணுக்கு உதவாது 

⚛️தை மழை நெய் மழை

⚛️மாசிப் பனி மச்சையும் துளைக்கும் 

⚛️தையும் ,மாசியும் வீடு மேய்த்து உறங்கு

⚛️புற்றுக் கண்டு கிணறு வெட்டு

⚛️வெள்ளமே ஆனாலும் 
பள்ளத்தேப் பயிர் செய் 

⚛️காணி தேடினும் கரிசல் மண் தேடு

⚛️களர் கெட பிரண்டையைப் புதை 

⚛️கெட்ட நிலத்துக்கு எட்டு வன்னி; 
கெட்ட குடும்பத்துக்கு எட்டு வெள்ளாடு

⚛️நன்னிலம் கொழுஞ்சி; 
நடுநிலம் கரந்தை ;
கடை நிலம் எருக்கு

⚛️நீரும் நிலமும் இருந்தாலும் 
பருவம் பார்த்து பயிர் செய் 

⚛️ஆடிப்பட்டம் தேடி விதை

⚛️விண் பொய்த்தால், மண் பொய்க்கும்

⚛️மழையடி புஞ்சை ; மதகடி நஞ்சை 

⚛️களரை நம்பிக் கெட்டவனும் இல்லை ; மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை

⚛️உழவில்லாத நிலமும் 
மிளகில்லாத கறியும் வழ வழ 

⚛️அகல உழவதை விட 
ஆழ உழுவது மேல் 

⚛️புஞ்சைக்கு நாலு உழவு 
நஞ்சைக்கு ஏழு உழவு 

⚛️குப்பை இல்லாத வெள்ளாமை சப்பை

⚛️ஆடு பயிர் காட்டும் ;
ஆவாரை கதிர் கட்டும் 

⚛️கூளம் பரப்பி கோமியம் சேர் 

⚛️ஆற்று வண்டல் தேற்றும் பயிரை 

⚛️நிலத்தில் எடுத்த பூண்டு 
நிலத்தில் மடிய வேண்டும்

⚛️காய்ச்சலும், பாய்ச்சலும் வேண்டும்

⚛️தேங்கிக் கெட்டது நிலம் ; 
தேங்காமல் கெட்டது குளம்

⚛️கோரையைக் கொல்ல கொள்ளுப் பயிர் விதை 

⚛️சொத்தைப் போல் 
விதையைப் பேண வேண்டும்

⚛️விதை பாதி வேலை பாதி

⚛️காய்த்த வித்திற்கு பழுது இல்லை 

⚛️பாரில் போட்டாலும் பட்டத்தில் போடு

⚛️கோப்பு தப்பினால், குப்பையும் பயிராகாது

⚛️ஆடி ஐந்தில் விதைத்த விதையும் புரட்டாசி பதினைந்தில் நட்ட நடவும் பெரியோர்கள் வைத்த தனம் 

⚛️கலக்க விதைத்தால்
களஞ்சியம் நிறையும். அடர விதைத்தால் போர் உயரும் 

SPOKEN ENGLISH

Present tense:


Who do this?
ஹூ டூ திஸ் ?
யார் இதைச் செய்கிறார்?

I do this.
ஐ டூ திஸ்.
நான் இதைச் செய்கிறேன்.

We do this.
வீ டூ திஸ்.
நாம் / நாங்கள் இதைச் செய்கிறோம்.

He does this.
ஹி டஸ் திஸ்.
அவன் இதைச் செய்கிறான்.

She does this.
ஷி டஸ் திஸ்.
அவள் இதைச் செய்கிறாள்.

It does this.
இட் டஸ் திஸ்.
அது இதைச் செய்கிறது.

They do this.
தே டூ திஸ்.
அவர்கள் / அவைகள் இதைச் செய்கின்றன.
-------------------------------------------------------------
Past Tense:

who did this ?
ஹூ டிட் திஸ் ?
யார் இதைச் செய்தது ?

I did this
ஐ டிட் திஸ்.
நான் இதைச் செய்தேன்.

we did this.
வீ டிட் திஸ்.
நாம் / நாங்கள் இதைச் செய்தோம்.

He did this.
ஹி டிட் திஸ்.
அவன் இதைச் செய்தான்.

She did this.
ஷி டிட் திஸ்.
அவள் இதைச் செய்தாள்.

It did this.
இட் டிட் திஸ்.
அது இதைச் செய்தது.

They did this.
தே டிட் திஸ்.
அவர்கள் / அவைகள் இதைச் செய்தன(ர்).
-------------------------------------------------------------
Future tense:

who will do ?
ஹூ வில் டூ?
யார் இதைச் செய்வார்?

I will do this.
ஐ வில் டூ திஸ்.
நான் இதைச் செய்வேன்.

We shall do this.
வீ ஷேல் டூ திஸ்.
நாம் / நாங்கள் இதைச் செய்வோம்.

You will do this.
யூ வில் டூ திஸ்.
நீ இதைச் செய்வாய்.

He will do this.
ஹி வில் டூ திஸ்.
அவன் இதைச் செய்வான்.

She will do this.
ஷி வில் டூ திஸ்.
அவள் இதைச் செய்வாள்.

It will do this.
இட் வில் டூ திஸ்.
அது இதைச் செய்யும்.

They will do this.
தே வில் டூ திஸ்.
அவர்கள் / அவைகள் இதைச் செய்யும்.
-------------------------------------------------------------
வைணவக் கவிஞர் தலைவன் - பொய்கையாழ்வார்




வைணவத்தினர் பொய்கையாழ்வாரைக் கவிஞர் தலைவன் என் போற்றுகின்றனர். இவர் காஞ்சி நகர் திருவெக்கா பொய்கையில் அவதரித்தார். பொய்கையில் அவதரித்த காரணத்தாலேயே இவர் பொய்கைஆழ்வார் என அழைக்கப்பட்டார். திருமாலின் கருணையால் அனைத்தையும் கற்றார். கற்றதின் பயனாய் இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தரக்கூடியது திருமாலின் தொண்டு தான் என்பதை உணர்ந்தார். அத்துடன் தன்னையே பெருமாளின் தொண்டிற்கு அர்ப்பணித்துக் கொண்டார். மொத்தம் 6 திவ்ய தேசங்களை மங்களாசாசனம் செய்துள்ளார். இவர்தான் முதலில் நாலாயிர திவ்ய பிரபந்தத்தை இவ்வுலகிற்கு அர்ப்பணித்தவர். சதா சர்வ காலமும் விஷ்ணுவின் நினைப்பிலேயே இருப்பார். தன்னையே மறந்து பகவானைப் பாடி மகிழ்வார். ஹரியும் சிவனும் ஒன்றுதான். ஹரியை வணங்குபவர்கள் சிவனை வெறுக்க வேண்டாம். சிவனை வழிபடுபவர்கள் ஹரியை பழிக்க வேண்டாம். இதை மக்களிடம் கூறிக்கொண்டதோடு ஹரியிடம் மாறாபக்தி கொண்டும் அவருக்கு சேவை செய்தும் வாழ்ந்து வந்தார். இறைவனை அடைந்து ஒன்றாக கலப்பது தான் ஆத்மாவின் தன்மை என்றும், இறைவனை பிரிந்திருப்பது தான் துன்பங்களுக்கெல்லாம் மூல காரணம் என்பதையும் பொய்கையாழ்வார் உணர்த்துகிறார். ஒரு சமயம் பொய்கை ஆழ்வார் திருக்கோவிலூர் மிருகண்டு முனிவரது ஆசிரமத்துக்கு சென்றார். அங்கு பூதத்தாழ்வாரும் பேயாழ்வாரும் வந்து சேர்ந்தனர். இவர்கள் மூவரும் நெருக்கியடித்து நிற்க அங்கு சங்கு, சக்கரத்துடன் திருமால் தோன்றி மூவருக்கும் காட்சியளித்தார். இவர் பேயாழ்வார் மற்றும் பூதத்தாழ்வாருடன் பல திவ்ய தேசங்களுக்கு சென்று பரந்தாமனைப் பாடி பணிந்தார். பெருமாளின் 108 திருப்பதிகளில் பொய்கையாழ்வார் தனியாக மங்களாசாசனம் செய்யாமல் , பிற ஆழ்வார்களுடன் சேர்ந்து மொத்தம் 6 கோயில்களை மங்களாசாசனம் செய்துள்ளார். 
பெண்கள் செய்ய வேண்டிய தானங்கள்

உலகில் இருக்கும் அனைத்து மதங்களும் தானங்கள் செய்வதை மிகவும் போற்றுகின்றன. தானங்களில் பல வகைகள் இருக்கின்றன. பெண்கள் தான் ஒரு குடும்பத்தின் அஸ்திவாரமாக இருக்கிறார்கள். அப்படிப்பட்ட பெண்கள் சில வகை தானங்கள் செய்வதால் அவர்களுடைய வாழ்வும். அவர்களின் சந்ததியினரின் வாழ்வு சிறப்படையும் என நமது சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. அந்த தானங்கள் என்னென்ன என்பதை இங்கு நாம் காணலாம்.நமது வீட்டிற்கு நமக்கு வேண்டப்பட்டவர்கள் அல்லது எதிராளிகள் என்று யார் வந்தாலும் முதலில் அவர்கள் பருக தண்ணீர் அல்லது மோர் போன்றவற்றை கொடுக்க வேண்டும். இப்படி செய்வதால் ஒரு வேளை நம் வீட்டிற்கு வந்திருக்கும் நபர்கள் எத்தகைய கெட்ட எண்ணத்தோடு வந்திருந்தாலும், தண்ணீர் அல்லது மோர் பருகுவதால் அவர்களின் வயிறு மற்றும் மனம் குளிர்ந்து, அவர்களின் தீய எண்ணங்கள் மறைகின்றன. எனவே தான் வீட்டுக்கு வருபவர்களுக்கு தண்ணீர், மோர் போன்றவற்றை முதலில் பருகக் கொடுக்க வேண்டும் என்கின்ற விதியை நமது முன்னோர்கள் நமக்கு வழியுறுத்தி கூறியிருக்கின்றனர். நமது வீட்டிற்கு சுமங்கலி பெண்கள் வரும் போது, அவர்கள் நமக்கு ஆகாதவர்களாக இருக்கும் பட்சத்திலும் அவர்களுக்கு மஞ்சள் மற்றும் குங்குமத்தை தர வேண்டும் என கூறப்படுகிறது. நாம் கொடுக்கின்ற குங்குமத்தை வீட்டுக்கு வந்திருக்கும் பெண்கள் நெற்றியில் இட்டுக் கொள்ளும் போது, அவர்களை அறியாமலேயே அவர்களின் மனதில் நல்லெண்ணங்கள் உருவாகும். இதனால் நம் வீட்டில் நேர்மறையான அதிர்வு ஏற்படும். இது அஷ்டலட்சுமிகள் நம் வீட்டிற்குள் வாசம் செய்யும் நிலையை உண்டாக்கும்.திருமணமான சுமங்கலிப் பெண்களுக்கு மஞ்சள் கிழங்கின் துண்டை, மஞ்சள் கயிற்றில் கட்டி தானம் வழங்குவது மிகவும் சிறந்தது. இந்த தானத்தை கோவிலில் வைத்து செய்வது மிகவும் விசேஷமாகும். மேலும் இந்த தானத்தை செய்வதற்கு நல்ல நாள், நட்சத்திரம், நேரம் எதையும் பார்க்க வேண்டியதில்லை. எந்த கிழமை வேண்டுமானாலும், எந்த தினத்திலும் இந்த தானத்தை செய்யலாம். உங்களுக்கு வசதி இருக்கும் பட்சத்தில் ஏழைப் பெண்களின் திருமணத்திற்கு மாங்கல்ய தானம் செய்யலாம். மஞ்சள் கயிறு மற்றும் மாங்கல்ய தானம் செய்யும் பெண்களின் மாங்கல்ய பலம் கூடும். எனவே மிகச் சிறப்பான இந்த தானத்தை குறைந்த பட்சம் வாழ்வில் ஒருமுறையாவது செய்வது நல்லது.ஆடை என்பது மனிதர்களுக்கு இன்றியமையாததாகும். அதிலும் பெண்களுக்கு மிகவும் முக்கியமான ஒரு விடயமாக ஆடை இருக்கிறது. எனவே வசதி குறைவான நிலையில் இருக்கும் ஏழைப் பெண்களுக்கு வஸ்திரதானம் செய்யும் பெண்களின் வாழ்வில் மிகச் சிறந்த நன்மைகள் ஏற்படும். குடும்பத்தில் சுபிட்சங்கள் பெருகும். ஏழைப் பெண்கள் மட்டுமல்லாமல் ஏழ்மை நிலையில் இருக்கும் ஆண்களுக்கும் வஸ்திர தானம் செய்யலாம். வஸ்திர தானம் செய்யும் போது ஏற்கனவே உபயோகித்த பழைய ஆடைகளை தானமாக தராமல், புத்தாடைகளை வஸ்திரதானம் செய்வதே ஏற்புடையதாகும்.அடுத்ததாக அனைத்து தானங்களையும் விட சிறந்த தானமாக சொல்லப்படுவதும், முக்கியமானதாக கருதப்படுவதுமாக இருக்கிறது அன்னதானம். பெண்கள் சக்தியின் வடிவமாக கருதப்படுகிறார்கள். எனவே பசியோடு வரும் எந்த ஒரு மனிதருக்கும் இல்லத்தில் வசிக்கும் பெண்கள் நிச்சயமாக அன்னதானம் இட வேண்டும் என முன்னோர்கள் கூறுகின்றனர். கடும் பசியில் வாடி வீட்டைத் தேடி வரும் நபர்களுக்கு பெண்கள் அன்னதானம் செய்யாமல் போவதால், அவர்களுக்கு சாபம் ஏற்படும் என சாஸ்திர நூல்கள் கூறுகின்றன. பிறருக்கு ஒரு வேளை கூட அன்னதானம் செய்ய இயலாத கடுமையான பொருளாதார கஷ்டத்தில் வாழும் நபர்கள் குறைந்தபட்சம் ஒரு பிஸ்கட் பொட்டலத்தை வாங்கி, உங்கள் வீட்டிற்கு அருகே இருக்கும் தெரு நாய்களுக்கு அந்த பிஸ்கட்டுகளை உணவாக தருவதும் அன்னதானம் செய்ததற்கு நிகரான பலனைத் தரும்.குழந்தையை பெற்றெடுக்க போகும் ஏழை பெண்களின் சீமந்தத்திற்கு உதவுவது சிறந்த புண்ணியத்தை உங்களுக்கு கொடுக்கும். வசதி குறைந்த ஏழைப் பெண்ணின் சீமந்த செலவை ஏற்றுக் கொள்வது அல்லது குறைந்தபட்சம் ஒரு நூறு ரூபாயாவது அப்பெண்ணிற்கு தருவதும் கூட மிகுந்த பலன்களை உங்களுக்கு தரும். இது போல ஏழ்மை நிலையில் இருக்கும் பெண்ணின் பிரசவத்திற்கு பிறகான பொருளாதார உதவிகளை செய்வது, உங்கள் மகள் அல்லது மருமகளுக்கு தடையில்லா புத்திர பாக்கியமும், ஆரோக்கியமான, அழகான குழந்தை பிறக்கின்ற அமைப்பு ஏற்படும்.தினமும் காலையில் வீட்டுக்கு வெளியே பெண்கள் அரிசி மாவு கொண்டு கோலம் போடுவது சிறந்தது. அந்த அரிசி மாவை ஆயிரக்கணக்கான எறும்புகள், ஈக்கள் போன்றவை சாப்பிட்டு பசியாறுகின்றன. இதனால் அந்த உயிர்களின் ஆசிகளும் நமக்கு கிடைக்கிறது. எனவே எப்போது கோலமிடும் போதும் அரிசி மாவு கோலம் போடுவதை வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும். அதே போல் நமது வீட்டில் இருக்கும் தானியங்களை பறவைகளுக்கு உணவாக வைக்க வேண்டும். அதனுடன் ஒரு சிறு பாத்திரத்தில் அப்பறவைகள் அருந்துவதற்கு நீரையும் வைப்பது நல்லது. கோடைகாலங்களில் பறவைகள் பல இடங்களில் நீர் தேடி அலைகின்ற அவல நிலை ஏற்படுகிறது. அப்போது நம் வீட்டில் அப்பறவைகளின் பசியாற உணவும், தாகம் தீர்க்க நீரும் இருப்பதைக் கண்டு அவை மகிழ்ந்து நம்மை ஆசிர்வதிக்கின்றன.மேலே சொல்லப்பட்டிருக்கும் தானங்கள் அனைத்துமே நாம் எல்லோரும் எளிதில் செய்யக்கூடிய தான வகைகளாகவே இருக்கின்றன. இந்த தானங்கள் எளிமையானதாக தோன்றினாலும், இவற்றை செய்வதால் நமக்கும் நமது சந்ததியினருக்கும் ஏற்படும் பலன்கள் எண்ணிலடங்காதவை. எனவே இந்த தானங்களை அனைவரும் வாழ்வில் குறைந்தபட்சம் ஒரு முறையாவது செய்வது மிகவும் சிறப்பானதாகும்.

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...