18 ஜனவரி, 2012

வீட்டுக்கடனுக்கான வருமானவரிச் சலுகை

வங்கியிலிருந்து வீட்டுக்கடனோ அல்லது வீட்டு அடமான கடனோ பெற்றிருக்கிறீர்களா? ஆம் என்றால், வருமான வரி துறை உங்களுக்கு வழங்கும் சலுகைகள் என்னென்னவென்று தெரியுமா? தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்.கடன் வாங்கி ஒரு வீட்டினை உரிமையாக்கிக்கொள்வது நமது வசதிகளை மேம்படுத்துவதோடு நின்று விடுவதில்லை. கடனை முழுவதுமாக திரும்ப செலுத்தி முடிக்கின்ற வரையிலும் வருமான வரி சலுகையையும் அது பெற்று தருகிறது.எனவே, வீட்டுக்கடன் பெற்றுத்தரும் வருமான வரி சலுகைகள் குறித்து முழுவதுமாக தெரிந்து கொள்வதற்கு முன், மாதாந்திர தவணை அதாவது (Equated Monthly Instalment-EMI) என்றால் என்ன என்பதை பற்றி தெரிந்து கொள்ள வேண்டியது அவசியம்.
  மாதத்தவணை
 வீடு வாங்குவது என்பது பலவகைப்படும். சிலர் கட்டிய வீட்டை வாங்கலாம். சிலர் கட்டுமான நிறுவனங்கள் கட்டிக்கொடுக்கும் தனி வீடு அல்லது அடுக்கு மாடி குடியிருப்புகளில் இருந்து வீடு வாங்கலாம். சிலர் தங்களுக்குரிய நிலத்தில் வீடு கட்டலாம். எனவே இதற்கு ஏற்ப சம்பந்தப்பட்டவர்கள் பெயரில் அல்லது வீடுகட்டுமான நிறுவனத்தின் பெயரில் வங்கி கடன் அளிக்கும். இந்த கடன் தொகை காசோலை அல்லது பணவிடை மூலம் தரப்படுகிறது கடனாக பெற்ற இந்த தொகையை நாம் குறிப்பிட்ட காலத்துக்கு மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையாக திரும்ப செலுத்துகிறோம். இதனைத்தான் இ.எம்.ஐ. (EMI) என்கிறோம்.இந்த இ.எம்.ஐ. இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு ஒரு பகுதி அசலாகவும், மற்றொரு பகுதி வட்டியாகவும் நமது கணக்கில் வரவு வைக்கப்படுகிறது.ஒவ்வொரு மாதமும் நாம் அசலையும் நிலுவையிலுள்ள தொகைக்கு வட்டியையும் சேர்த்தே செலுத்தி வருவதால் கடன் அளவு மாதாமாதம் குறைந்து வருகிறது. இவ்வகையில், ஆரம்ப காலத்தில் கடன் தொகை அதிகம் என்பதால் அதன் மீது செலுத்த வேண்டிய வட்டியும் அதிகமாகவே இருக்கும்.எனவே, ஆரம்பகாலத்தில் செலுத்தப்படும் இ.எம்.ஐ.- ல் பெரும் பகுதி வட்டிக்காகவே வரவு வைக்கப்படுகிறது. அப்படியானால், அசலுக்காக வரவு வைக்கப்படும் தொகை தொடக்க காலத்தில் குறைவாகவே இருக்கும் என்பதை சொல்லத்தேவையில்லை. இவ்வாறு மாதங்கள் செல்லச்செல்ல, இ.எம்.ஐ.- ல் வட்டிக்காக எடுத்துக்கொள்ளப்படும் தொகை குறைந்து வருவதையும், அசலுக்காக எடுத்துக்கொள்ளப்படும் தொகை அதிகரித்து வருவதையும் நாம் காணலாம்.வருமான வரி சலுகை, திரும்ப செலுத்தப்படும் அசலுக்கு ஒரு விதமாகவும், செலுத்தப்படும் வட்டிக்கு மற்றொரு விதமாகவும் வழங்கப்படுகிறது. இது மத்திய அரசின் தனி நபர்களுக்கான வரி சலுகை வருமான வரி சட்டம் 1961 ன் பிரிவு 80 சி யின்படி வழங்கப்படுகிறது.இந்த வருமான வரிச்சட்டப்பிரிவு என்ன சொல்கிறது தெரியுமா? பிராவிடெண்ட் பண்ட் (பி.எப்.), பொது பிராவிடெண்ட் பண்ட் (பி.பி.எப்.), இன்சூரன்ஸ் பிரிமியம் மற்றும் பங்குகளோடு இணைந்த சேமிப்பு திட்டங்கள் போன்றவற்றில் ஆண்டுக்கு, (மேற்சொன்ன அனைத்து திட்டங்களிலும் சேர்த்து) ரூபாய் ஒரு லட்சம் வரை சேமிக்கலாம்.இந்த ஒரு லட்சம் சேமிப்பு நமது மொத்த வருமானத்திலிருந்து குறைத்துக்கொள்ளப்படும். அதாவது, வரி செலுத்த வேண்டிய வருமானம் குறையும். உதாரணமாக உங்களது மொத்த வருமானம் ரூ. 5 லட்சம் என்று வைத்துக்கொள்வோம். மேலே குறிப்பிட்ட இனங்களில் உங்கள் சேமிப்பு ஒரு லட்சம் ரூபாய் ஆக இருக்கிறது என்றால், நீங்கள் வரி செலுத்த வேண்டிய வருமானம் 4 லட்ச ரூபாய் ஆக கணக்கிடப்படும்.ஒருவேளை, மேற்சொன்ன இனங்களில் நீங்கள் சேமிப்பு எதுவும் செய்யவில்லை என்று வைத்துக்கொள்வோம். அதுபோன்ற நிலையில் நீங்கள் வீட்டுக்கடன் வாங்கி இருந்தால், திருப்பி செலுத்தப்படும் வீட்டுக்கடன்களுக்கான அசலில் ரூபாய் ஒரு லட்சம் வரையில் வருமான வரி விலக்கு பெறலாம்.எந்த வீட்டு மீதான கடனுக்கு நீங்கள் வருமான வரி விலக்கு கோருகிறீர்களோ அந்த வீட்டில் நீங்கள் குடியிருக்க வேண்டும் என்பது வருமானவரி துறையின் விதியாக உள்ளது. ஒருவேளை, கடன் வாங்கி கட்டிய வீடு இருக்கும் அதே ஊரில் இல்லாமல், பணியின் காரணமாக வேறு ஊரில் நீங்கள் குடியிருப்பதாக வைத்துக்கொண்டால் உங்களுக்கு மேற் சொன்ன விதி பொருந்தாது. அதாவது, சலுகையை பெறுவதில் தடையில்லை.உதாரணமாக நீங்கள் சென்னையில் வேலை செய்கிறீர்கள்; சென்னையிலேயே குடியிருக்கிறீர்கள். அதே நேரம், நீங்கள் கடன் வாங்கி கட்டிய அல்லது வாங்கிய வீடும் சென்னையிலேயே இருக்கிறது என்று வைத்துக்கொள்வோம். இப்போது வருமான வரி துறை தரும் சலுகைக்கு நீங்கள் உரியவரல்ல. ஏனெனில், கடன் வாங்கி கட்டிய அல்லது வாங்கிய வீட்டில் நீங்கள் வசிக்கவில்லை என்பதனால் நீங்கள் சலுகை பெற தகுதியுடையவரல்ல. நீங்கள் சென்னையில் வேலை செய்கிறீர்கள்; அங்கேயே குடியிருக்கிறீர்கள். ஆனால், நீங்கள் கடன் வாங்கி கட்டிய அல்லது வாங்கிய வீடு மதுரையில் உள்ளது என்று வைத்துக்கொள்வோம். இப்போது உங்களுக்கு சலுகை உண்டு, மதுரையில் உள்ள வீட்டினை நீங்கள் வாடகைக்கு கொடுத்திருந்தாலும் கூட.இந்தச் சலுகையின் சிறப்பம்சம் என்னவென்றால், உங்களுக்கு ஏற்கனவே சொந்தமாக வேறு வீடுகள் இருந்தாலும் அதே பகுதியில் கடன் வாங்கி கட்டிய வீட்டில் நீங்கள் குடியிருக்கும் பட்சத்தில் நீங்கள் சலுகைக்கு தகுதியானவரே. எனவே, சென்னையில் கடன் வாங்கி கட்டிய வீட்டில் குடியிருக்கும் போது அதேபோல் கடன் வாங்கி மதுரையில் மற்றொரு வீட்டை கட்டியிருந்து, அதனை வாடகைக்கு கொடுத்திருந்தாலும் இரண்டு வீட்டிற்கும் வருமான வரி சலுகை உண்டு.அடுத்து, வீட்டுக்கடனுக்கு செலுத்தப்படும் வட்டி மீதான சலுகை குறித்து வருமான வரி சட்டம் என்ன சொல்கிறது? வருமான வரி சட்டம் 1961 ன் பிரிவு 24 ன்படி, வீட்டுக்கடன் மீது செலுத்தப்படும் வட்டி ரூ.1.50 லட்சம் வரை உங்களது மொத்த வருமானத்திலிருந்து குறைக்கப்படுகிறது. அதாவது, அந்த ரூ.1.50 லட்சத்திற்கு வருமான வரி கட்ட வேண்டியதில்லை. இன்னும் விளக்கமாக சொன்னால், வீட்டுக்கடன் மீது செலுத்தப்படும் வட்டி `வீடு மூலம் ஈட்டப்பட்ட வருவாய்' என்ற தலைப்பின் கீழ் செலவாக கருதப்பட்டு அது மொத்த வருமானத்திலிருந்து குறைக்கப்படுகிறது.அதே சமயம், குறிப்பிட்ட வீட்டின் மூலம் வாடகை கிடைப்பதாக இருந்தால் அது வருமானமாக கருதப்படும். அதாவது, வீட்டுக்கடனுக்காக செலுத்திய வட்டியிலிருந்து வாடகை வருவாய் குறைக்கப்பட்டு மீதமுள்ள வட்டி தொகைக்கே வருமான வரி சலுகை கிடைக்கும்.நீங்கள் எத்தனை வீட்டுக்கடனுக்காக வட்டியை செலுத்தினாலும் சரி மொத்தத்தில் ரூ. 1.50 லட்சம் அளவிற்கு தான் சலுகை பெறமுடியும்.வருமான வரி சட்டம் 1961 ன் பிரிவு 24 மேலும் ஒரு சலுகையை வழங்குகிறது. அதாவது, வீட்டுக்கடன் மீதான வட்டிக்குரிய வரி சலுகையை பெற நீங்கள் அந்த வீட்டில் குடியிருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல.
 முன்னதாக செலுத்தப்படும் வட்டி
கடன் பெற்று கட்டப்படும் வீடுகளின் கட்டுமானத்தின் வெவ்வேறு நிலைகளில் வங்கிகள் கடனை கொஞ்சம் கொஞ்சமாகவே வழங்கும். அப்போதெல்லாம், அசலுக்கான இ.எம்.ஐ-யை வங்கிகள் வசூலிப்பதில்லை. மாறாக, வழங்கப்பட்ட கடனுக்கான வட்டியை இ.எம்.ஐ. வாயிலாக உங்களிடமிருந்து வங்கிகள் வசூலிக்கும்.அவ்வாறு நீங்கள் செலுத்தும் வட்டியை எந்த நிதியாண்டில் செலுத்தினீர்களோ, அதே நிதியாண்டில் அதற்கான வருமான வரி சலுகையை பெற முடியாது. ஆனால், எந்த நிதியாண்டில் வீடு கட்டி முடிக்கப்படுகிறதோ அதிலிருந்து ஐந்து நிதியாண்டுகளுக்கு ஐந்து தவணைகளாக அந்த வட்டிக்கு வரி விலக்கு பெற முடியும்.உதாரணமாக, நீங்கள் 2003-04, 2004-05 மற்றும் 2005-06 ஆகிய வருடங்களில் முறையே ரூ.20 ஆயிரம், ரூ.30 ஆயிரம் மற்றும் ரூ. 30 ஆயிரம் வட்டிக்கான இ.எம்.ஐ. மட்டும் செலுத்தியதாக வைத்துக்கொள்வோம். ஆக மொத்தம், ரூ. 80 ஆயிரத்தை வட்டியாக மூன்றாண்டுகளில் நீங்கள் செலுத்தியுள்ளீர்கள்.ஆனால், வீடு 2006-07 ஆம் வருடத்தில் தான் கட்டி முடிக்கப்படுகிறது என்றால், இந்த ரூ. 80 ஆயிரத்துக்கான வரிச்சலுகையை 2006-07 ஆம் ஆண்டு தொடங்கி 2010-11 ஆம் ஆண்டு வரையிலான ஐந்து ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ.16 ஆயிரம் என்ற அளவில் வரி சலுகை பெறலாம்.ஒருவேளை வாங்கப்படுகிற வீடு இரண்டு பேர் பெயர்களில் இருந்தால்? இருவரும் இ.எம்.ஐ.-யை என்ன விகிதத்தில் பகிர்ந்து செலுத்துகிறார்களோ அதே விகிதத்தில் தான் சலுகையை பெற இயலும். உதாரணமாக, இருவர் சேர்ந்து வாங்கும் வீட்டிற்கான இ.எம்.ஐ. யில் 40 சதவீதத்தை ஒருவரும் 60 சதவீதத்தை மற்றொருவரும் பகிர்ந்து செலுத்துவதாக வைத்துக்கொண்டால் வருமான வரி சலுகையும் அதே 40:60 என்ற விகித அடிப்படையில் தான் கிடைக்கும்.வருமானவரிச்சலுகை தொடர்பான கூடுதல் தகவல்களை வருமான வரித்துறையின் இணைய தளத்தின் (http://www.incometaxindia.gov.in) மூலம் அறிந்து கொள்ளலாம்.

Free Code Script

18/01/2012

1. சீனாவில் மொத்த மக்கள் தொகையில், பாதிக்கும் மேற்பட்டோர், நகரங்களுக்கு வந்து விட்டதாக அந்நாட்டு அரசு நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
2. அமெரிக்க காங்கிரசில் தாக்கலாக உள்ள இரு மசோதாக்களை எதிர்த்து, இணையக் கலைக் களஞ்சியமான "விக்கிபீடியா' இன்று ஒருநாள் வேலை நிறுத்தம் செய்யப் போவதாகஅறிவித்துள்ளது.
3. அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முந்தைய கருத்து கணிப்பில் இப்போதைய அதிபர் பராக் ஒபாமாவுக்கும், குடியரசுக் கட்சியைச் சேர்ந்த மிட் ரோம்னிக்கும் இடையே கடும் போட்டி இருக்கும் என்று தெரிகிறது.
4. இந்திய-சீன எல்லைப் பகுதியில், அமைதியை உறுதிசெய்யும் புதிய செயல்முறை ஒன்றை உருவாக்குவது என செவ்வாய்க்கிழமை முடிவு செய்யப்பட்டது 5.55
5.எதிர்வரும் ஜூலை மாதம், பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார் தற்போதைய குடியரசுத் தலைவர்.
6. மூணாறில் கடந்த இரண்டு நாட்களாக பல்வேறு பகுதிகளில் வெப்பம் மைனஸ் நான்கு டிகிரி செல்சியஸ் வரை குறைந்து, கடும் பனிப்பொழிவு உள்ளது.
7. வணிகவரித் துறையை ரூ. 230 கோடியில் முழுமையாக கணினிமயமாக்க தமிழகமுதல்வர் உத்தர விட்டுள்ளார்.
8. புயலில் சேதம் அடைந்த படகுகளுக்கு முழு நிவாரணம் கிடைக்கும் வரை, மீன்பிடிக்கக் கடலுக்குச் செல்ல மாட்டோம் என்று, கடலூர் மாவட்ட மீனவர்கள் அறிவித்து உள்ளனர்.
9. தோஹாவில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியா 2 தங்கப் பதக்கங்களை வென்றது.
10. சுற்றுச்சூழல் பாதிப்பு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக, தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் ஆய்வு நடத்த தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு.
                                                                                                                                    -பாரதிஜீவா

Free Code Script

13 ஜனவரி, 2012

13.01.2012

1. பிரதமர் யூசுப் ராஸா கிலானிக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம், பாதுகாப்புச் செயலர் நீக்கம் போன்ற காரணங்களால் அரசியல் பரபரப்பு அதிகரித்திருக்கும் நிலையில், அதிபர் ஆசிப் அலி ஜர்தாரி வியாழக்கிழமை துபைக்குச் சென்றுவிட்டார்.
2. இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவின் இரண்டு நாள் இஸ்ரேலியப் பயணத்தின்போது,  மிக நெருங்கிய நட்பு நாடுகளுக்கு அளிக்கப்படும் விருந்து உபசரிப்பு அளிக்கப்பட்டது.
3.  சோமாலிய கடற்பகுதியில் அடிக்கடி நிகழும் கடற்கொள்ளையைத் தடுக்க அனைத்து நாடுகளிடையே ஒருங்கிணைந்த உத்தியுடன் கூடிய செயல்பாடு மிக அவசியம் என்று இந்தியா ஐ.நா அவையில் வலியுறுத்தியுள்ளது.
4. மத்தியப் பிரதேச மாநிலத்தில் முதல்வர் சிவராஜ் சிங் சௌகான் தலைமையில் சுவாமி விவேகானந்தரின் பிறந்த தினமான ஜனவரி 12 இல், சூரிய நமஸ்காரம் செய்யும் நிகழ்ச்சியில் 50 லட்சம் மாணவர்கள் நேற்று ஈடுபட்டனர்.
5. வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை, பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்த, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
6. இந்தியாவின் தொழில்துறை உற்பத்தி நவம்பர் மாதத்தில் 5.9 சதவீதமாக உயர்ந்தது.
7. பொங்கல் பண்டிகையை ஒட்டி, சிறப்புப் பேருந்துகளை, 17-ஆம் தேதி முதல் 22-ஆம் தேதி வரை இயக்க தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது.
8.  புயலில் பல நூறு ஏக்கர் கரும்பு பயிர்கள் சேதமடைந்துள்ளதால், கடந்த ஆண்டை விட இரு மடங்கு கூடுதல் விலைக்கு கரும்பு விற்கப்படுகிறது.
9.எரிவாயு எடுத்துச் செல்லும், சரக்குந்து உரிமையாளர்களின் கால வரையற்ற வேலைநிறுத்தம் தொடங்கியது.
10. 2015- ஆம் ஆண்டுடைபெறவுள்ளஉலக கோப்பைத் தொடரில் பங்கேற்க வேண்டுமென்றால், ஏதாவது ஒரு வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற வேண்டும் எனக் கூறியதன் மூலம், தொடர் போட்டியில் இருந்து ஓய்வு பெற இருப்பதை சூசகமாக தெரிவித்தார் தோனி.
                                                                                                                        -பாரதிஜீவா

Free Code Script

12 ஜனவரி, 2012

12/01/2012


                                                        
1.  தெற்காசிய நாடுகளில், பத்தாண்டுகளில், இராணுவத்திற்கான செலவு 50 விழுக்காடு அதிகரித்திருப்பதாக, அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. 
2. பிரிட்டனில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்துள்ளதால், வேலைக்காக  பூமியின் தென்கோடியில் உள்ள அண்டார்டிகாவுக்குக் கூட செல்ல, அந்நாட்டு இளைஞர்கள் தயாராக உள்ளனர். 
3. பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரசா கிலானி நேர்மையற்றவர் என உச்சநீதிமன்றம் பகிரங்கமாகத் தாக்கியுள்ளதை அடுத்து, இராணுவம் எச்சரிக்கை.
4. இந்தோனேசியாவின் மேற்குப் பகுதியில், கடலில் நேற்று கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து, சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது. 
5. உத்தரப் பிரதேச சட்டசபைத் தேர்தலில் வாக்காளர்களைக் கவர, அவர்களுக்கு வழங்க எடுத்துச் செல்லப்பட்ட ` 28 கோடி சிக்கியுள்ளது. 
6. 1.34 கோடி குடும்பங்கள் பயன்பெறும், ஏழைகளுக்கான முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தை” தமிழக முதல்வர் புதன்கிழமை தொடங்கி வைத்தார்.
7.  தானே புயலால் சேதமடைந்த பலா, முந்திரி மற்றும் தென்னை போன்ற பயிர்களை மீண்டும் பயிரிட இலவச மரக்கன்றுகள் வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
8.  கூடங்குளம் அணுஉலை 3 மாதங்களில் இயங்கத் தொடங்கும் என இந்திய அணு மின் கழகத்தின் இயக்குநர் எஸ்.ஏ. பரத்வாஜ் தெரிவித்தார்.
9. 160 அடி கொள்ளளவு கொண்ட சோலையாறு அணையின் நீர்மட்டம் நேற்று காலை 111.03 அடியாக இருந்தது. 
10. இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நடந்தது போன்ற சோகம் ஆஸ்திரேலிய தொடரில் ஏற்படாது. கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தி, வெற்றி பெறுவோம்,'' என, இந்திய கிரிக்கெட் வீரர் டிராவிட் தெரிவித்துள்ளார்.
                                                                                                -பாரதிஜீவா




Free Code Script

10 ஜனவரி, 2012

10/01/2012


                                                                 
1. இந்தியா - சீனா இடையிலான ராணுவ மட்டத்திலான பேச்சுவார்த்தை நடத்த, இந்திய ராணுவப் பிரதிநிதிகள் 15 பேர் கொண்ட குழு நேற்று சீனத் தலைநகர் பீஜிங்கிற்குச் சென்றது. 
2. ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் கடும் பனிப்பொழிவால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை, அம்மாநில முதல்வர் ஒமர் அப்துல்லா நேரில் ஆய்வு செய்தார்.
3. ஒருங்கிணைந்த ஜவுளிப் பூங்காக்களுக்கு, ஒன்பது கோடி ரூபாய் வரை, மானியம் வழங்க, தமிழக முதல்வர்  உத்தரவிட்டுள்ளார்.
4.  உத்தர பிரதேசத்தில், தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையின் போது, ஒரு வாகனத்திலிருந்து ` 13 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. 
5. நதிகளை இணைக்க, இதுவரை மத்திய அரசு செய்துள்ள பணி என்ன என்பது தொடர்பான, சுருக்கமான குறிப்பை, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட வழக்கறிஞர், ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என,உச்சநீதிமன்றம் மய்ய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது. 
6. இந்தியாவில் முதல்முதலாக, கடல் நீர்மட்ட உயர்வை ஆய்வு செய்யும் ரேடார் கருவி, குளச்சல் பகுதியிலுள்ள கடலில் அமைக்கப்பட்டது. 
7. வன விலங்குகள், விவசாய நிலங்களை சேதப்படுத்துகிறது என்பதற்காக, அவற்றை தடுக்க, கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது என, சென்னை ஆராய்ச்சி பிரிவு, தலைமை வனப் பாதுகாவலர் கூறியுள்ளார்.
8. மட்டைப்பந்துத் தொடர் போட்டிகளில் படுதோல்வி அடைந்த இந்திய வீரர்கள், தீவிர பயிற்சியில் ஈடுபடுவதற்கு பதிலாக, "கோ- கார்ட்டிங்' விளையாட்டில் பங்கேற்று சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.
                                                                             -பாரதிஜீவா


Free Code Script

9 ஜனவரி, 2012

09/01/2012


                                                       
1. அணு சக்தி எரிபொருள், மற்றும் அணு ஆயுதங்களை தயாரிக்க உதவும் செறிவூட்டிய யுரேனியம் தயாரிக்கும் நடவடிக்கையை புதிய மையத்தில் ஈரான் தொடங்கியுள்ளது.
2. சர்வதேச பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் வசித்தது தனக்குத் தெரியாது என்ற, அந்நாட்டின் முன்னாள் அதிபர் முஷாரப் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.
3. நாட்டில் நெருக்கடியான பொருளாதாரச் சூழல் நிலவுகிறது என்று, பிரதமர் மன்மோகன் சிங் கவலை தெரிவித்தார்.
4.  முல்லைப் பெரியாறு அணையைக் கட்டிய பொறியாளர் கர்னல் பென்னி குயிக்குக்கு, `1 கோடியில் மணிமண்டபம் கட்டப்படும் என்று, தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
5. தமிழக நதிகளை இணைத்தால் தண்ணீருக்காக, அண்டை மாநிலங்களை நம்பியிருக்க வேண்டிய அவசியம் ஏற்படாது என்று, முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜெ.அப்துல் கலாம் யோசனை தெரிவித்தார்.
6. போக்குவரத்துத் துறை சார்பில் இயக்கப்படும், இரவு நேரப் பேருந்துச் சேவை விரைவில், நகர் முழுவதும் விரிவுபடுத்தப்பட உள்ளது.
7. சென்னை ஓபன் டென்னிஸ் இரட்டையர் பிரிவில், இந்தியாவின் லியாண்டர் பயஸ், டிப்சரிவிச் (செர்பியா) ஜோடி, வாகையர் பட்டம் வென்றது. 
8. Prime Minister Manmohan Singh called upon the Indian communities living abroad to play a more active role and contribute "much more" to the building of a modern India.
9. The crowd on the third and last day of the fifth edition of Covai Flower Show broke its earlier records with over 1.25 lakh footfalls.

10. My fight against corruption will continue once I get better – Anna Hazare says.                                                                                                     - பாரதிஜீவா




Free Code Script

6 ஜனவரி, 2012

06/01/2012


                                                                  
1. காஷ்மீர் வரைபடத்தில் இருந்த தவறு சரிசெய்யப்பட்டு, புதிய வரைபடத்தை அமெரிக்க வெளியுறவுத் துறை தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
2.  பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலுக்கான முறையான அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டது. அத்துடன், வேட்புமனு தாக்கலும் துவங்கியது.
3. இந்தியாவில் பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்துவதற்காக 21 பெண்களைக் கொண்ட புதிய குழுவை, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் லஷ்கர்-இ-தொய்பா அமைப்பு உருவாக்கி வருவதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தன.
4. கரும்புக்கான ஆதரவு விலையை முதல் கட்டமாக டன்னுக்கு `2,100 ஆக உயர்த்தி முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
5.  தமிழக வாக்காளர்கள் எண்ணிக்கை முதல் முறையாக 5 கோடியைத் தாண்டியுள்ளது. மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை 5.04 கோடியாக அதிகரித்துள்ளது.
6.சிட்னி மட்டைப்பந்துத் தொடர் போட்டியில் இந்தியா, 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 265 ஓட்டங்கள் எடுத்து,பின்தங்கியுள்ளது.
7. Union Home Minister P. Chidambaram on Thursday inaugurated a ` 229- crore, e-office project for the Border Security Force (BSF).
8. Foodgrains production in the  Tamilnadu is expected to vault to 115 lakh tonnes this year as against 76.6 lakh tonnes last year 
9. The Transport Department – Coimbatore Circle has come up with a short film on CD to generate awareness on road safety.
10. Australian scientists have determined the structure of a key enzyme that could facilitate the understanding of how deadly viruses like HIV and Hepatitis C infect the human body.                                                                -பாரதிஜீவா


Free Code Script

Featured post

Reading maketh a human

https://www.thehindu.com/opinion/open-page/reading-maketh-a-human/article69907238.ece