1. இந்தியா - சீனா இடையிலான இராணுவ மட்டத்திலான
பேச்சுவார்த்தை நடத்த, இந்திய ராணுவப் பிரதிநிதிகள் 15
பேர் கொண்ட குழு நேற்று சீனத் தலைநகர் பீஜிங்கிற்குச் சென்றது.
2. ஜம்மு-காஷ்மீரில் நிலவிவரும் கடும்
பனிப்பொழிவால், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ள
பகுதிகளை, அம்மாநில முதல்வர் ஒமர்
அப்துல்லா நேரில் ஆய்வு செய்தார்.
3. ஒருங்கிணைந்த
ஜவுளிப் பூங்காக்களுக்கு, ஒன்பது கோடி ரூபாய் வரை,
மானியம் வழங்க, தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
4. உத்தர பிரதேசத்தில், தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையின் போது, ஒரு வாகனத்திலிருந்து ` 13 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
5. நதிகளை இணைக்க, இதுவரை மத்திய அரசு செய்துள்ள
பணி என்ன என்பது தொடர்பான,
சுருக்கமான குறிப்பை, நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட
வழக்கறிஞர், ஒரு வாரத்திற்குள் சமர்ப்பிக்க வேண்டும் என,உச்சநீதிமன்றம்
மய்ய அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
6. இந்தியாவில் முதல்முதலாக, கடல் நீர்மட்ட உயர்வை ஆய்வு செய்யும் ரேடார் கருவி, குளச்சல் பகுதியிலுள்ள கடலில் அமைக்கப்பட்டது.
7. வன விலங்குகள், விவசாய நிலங்களை
சேதப்படுத்துகிறது என்பதற்காக, அவற்றை தடுக்க, கடுமையான நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது என, சென்னை ஆராய்ச்சி பிரிவு, தலைமை வனப் பாதுகாவலர்
கூறியுள்ளார்.
8. மட்டைப்பந்துத் தொடர் போட்டிகளில் படுதோல்வி அடைந்த இந்திய வீரர்கள், தீவிர பயிற்சியில் ஈடுபடுவதற்கு பதிலாக, "கோ- கார்ட்டிங்' விளையாட்டில் பங்கேற்று
சர்ச்சையை கிளப்பியுள்ளனர்.
-பாரதிஜீவா
Free Code Script
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக