பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக குற்றம் புரிந்தவர்களுக்கான தண்டனை விலக்களிப்பை தடை செய்யும் நாள் - நவம்பர் 2
2013-ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பொது அவையில் நிறைவேற்றப்பட்ட 68-ஆவது தீர்மானத்தின் அடிப்படையில் ஆண்டுதோறும் நவம்பர் இரண்டாம் தேதி பத்திரிக்கையாளர்களுக்கு எதிராக குற்றம் புரிந்தவர்களுக்கான தண்டனை விலக்களிப்பைத் தடை செய்யும் நாளாக (IDEI – International Day to End Impunity for Crimes against Journalist) அறிவிக்கப்பட்டுள்ளது.
2006 முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலான 15 ஆண்டுகளில், உலகம் முழுவதும் 1200 பத்திரிக்கையாளர்கள், மக்களுக்கு, செய்தி தந்ததற்காகக் கொல்லப்பட்டுள்ளனர். கொலையாளிகளில் 10 இல் 9 பேர், தண்டிக்காமல் விடப்படுகின்றனர். இது போன்ற வன்முறைகள் பத்திரிக்கையாளர்களிடையே ஒருவித அச்சத்தை ஏற்படுத்துவதோடு, சுதந்திரத்தையும் பறிக்கிறது.
பத்திரிக்கையாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனை விலக்களிக்கும் நடப்பு கலாச்சாரத்திற்கு எதிராக உறுதியான நடவடிக்கைகளை உறுப்பு நாடுகள் எடுக்கும் வகையில் இத்தீர்மானம் உந்துதல் தரும்.
2013, நவம்பர் 2-ஆம் தேதி மாலித் தீவில் இரு பிரெஞ்ச் பத்திரிக்கையாளர்கள் படுகொலை செய்யப்பட்டதன் நினைவாக இத்தினம் தேர்வு செய்யப்பட்டு அனுசரிக்கப்படுகிறது.
ஊடகவியலாளர்களுக்கு எதிரான குற்றங்களுக்கு தண்டனையின்மைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் 2021 சர்வதேச தினம், கொலைகளை மட்டுமல்ல, ஊடகவியலாளர்களுக்கு எதிரான வன்முறை அச்சுறுத்தல்களையும் விசாரிப்பதிலும், விசாரணை செய்வதிலும், வழக்கு நடத்துவதிலும் உள்ள முக்கியப் பங்கையும் எடுத்துக்காட்டுகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக