ஒரு பொது சுகாதாரப் பிரச்சினையான நிமோனியாவின் தீவிரத் தன்மையை எடுத்துரைக்கவும், அந்நோயை எதிர்த்துப் போராட மேலும் அமைப்புகள்/நாடுகளை ஊக்கப்படுத்தவும் உலக நிமோனியா தினம் கடைப்பிடிக்கப்படுகிறது.
குழந்தை நிமோனியாப் பிரச்சினையை எதிர்த்துப் பொது மற்றும் அரசியல் ஆதரவைத் திரட்ட உருவாக்கப்பட்ட, குழந்தை நிமோனியாவுக்கு எதிரான உலக அமைப்பால் (Global Coalition against Child Pneumonia - GCCP) முதன் முறையாக 2009-ல் இந்நாள் கடைப்பிடிக்கப்பட்டது.
நிமோனியா என்றால் என்ன?
நிமோனியா ஒரு கடும் மூச்சு மண்டலத் தொற்று நோய். இது நுரையீரலைப் பாதிக்கிறது. பொதுவாக நுரையீரல் நுண் அறைகளில், சுவாசிக்கும் போது காற்று நிரம்பி இருக்கும். ஆனால் நிமோனியாவில் இந்த நுண்ணறைகளில் சளியும், சீழும் நிரம்பி சுவாசிக்கும் போது வலியைக் கொடுத்து, உயிர்வளி உள்ளெடுப்பைத் தடை செய்யும். வைரஸ், நுண்ணுயிரி, காளான் போன்ற பலவற்றால் நிமோனியா உண்டாகிறது.
ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் நிமோனியா:
காய்ச்சலோடு இல்லாமலும் இருமல் மற்றும்/அல்லது மூச்சு விடுவதில் சிரமம், வேகமான சுவாசம் மற்றும் நெஞ்சுச் சுவர்(விரிவதற்குப் பதில்) உள்ளொடுங்குதல் .
கடுமையான பாதிக்கப்பட்ட குழந்தைகளால் உண்ண, குடிக்க இயலாமை, மயக்கம், குறைவெப்பம் அல்லது வலிப்பு ஏற்படலாம்.
5 வயதுக்குட்பட்ட குழந்தைகளின் மரணத்துக்கு முக்கியக் காரணமாக இருக்கும்
நாளின் முக்கியத்துவம்:
நிமோனியாவைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும், நிமோனியாவில் இருந்து காக்கவும் அதைத் தடுக்கவும் சிகிச்சைகளை ஊக்குவிக்கவும்,
நிமோனியாவை எதிர்கொள்ளும் நடவடிக்கைகளை உருவாக்கவும்,ஒவ்வோர் ஆண்டும் நவம்பர் 12-ஆம் தேதி இந்நாள் அனுசரிக்கப்படுகிறது.
உலக சுகாதார நிறுவனமும் (WHO) ஐக்கிய நாடுகள் குழந்தைகள் கல்வி அமைப்பும் (UNICEF) நிமோனியாவையும் வயிற்றுப் போக்கையும் தடுக்கவும் கட்டுப்படுத்தவும் ஒருங்கிணைந்த நடவடிக்கைத் திட்டத்தை (GAPPD) உருவாக்கியுள்ளன.
இலக்குகள்
நிமோனியா கட்டுப்பாட்டை வேகப்படுத்துவதோடு, நிமோனியாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளைக் காத்து, சிகிச்சை அளிப்பது இதன் நோக்கம் ஆகும். உயிரோடு பிறக்கும் குழந்தைகளில் நிமோனியாவால் ஏற்படும் மரணத்தை ஆயிரத்துக்கு மூன்றாகவும், வயிற்றுப் போக்கால் மரணமடையும் குழந்தைகளின் எண்ணிக்கையை ஆயிரத்தில் ஒன்றாகவும் 2025 ஆம் ஆண்டுக்குள் குறைப்பதே இதன் இலக்கு.
“ நிமோனியாவைத் தடுப்பது அதிர்ஷ்டம் சார்ந்ததல்ல. நடவடிக்கை சார்ந்தது ”
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக