10 நவம்பர், 2021

உலக மனநல நாள் - நவம்பர் 10

 



     ஒவ்வோர் ஆண்டும், அக்டோபர் 10ஆம் தேதி, உலக மனநல தினமாக அனுசரிக்கப்பட்டு வருகிறது. உலகம் முழுவதிலும் மனநலப் பிரச்னைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், மனநலத்துக்கு ஆதரவாக முயற்சிகளை ஒன்று திரட்டுவதும் இந்த தினத்தின் நோக்கம் ஆகும்.

      சிறந்த ஆரோக்கியம் என்பது ஆரோக்கியமான உடலைப் பெற்றிருப்பது மட்டுமல்ல. ஆரோக்கியமான மனமும் இருக்க வேண்டும். ஆரோக்கியமான மனத்தைப் பெற்றிருப்பவர் தெளிவாகச் சிந்திப்பவராகவும், வாழ்க்கையில் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளைத் தீர்த்துக் கொள்பவராகவும், நண்பர்கள், உடன் பணிபுரிபவர்கள், குடும்பத்தினர் ஆகியோரோடு நல்லுறவு பேணுபவராகவும் ஆத்ம திருப்தி உடையவராகவும் சமூகத்தில் உள்ளவர்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பவராகவும் விளங்க வேண்டும். மனம் சார்ந்த இந்தத் தன்மைகளையே மனநலம் என்று கூறலாம்.

       உலகம் முழுவதும் மனநலம் பேணுதலைப் பற்றிய கருத்துகளை, மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்காக இந்த விழிப்புணர்வு நாளை உலக மனநலக் கூட்டமைப்பு 1992-ஆம் ஆண்டு ஏற்படுத்தியது. ஒவ்வோர்ஆண்டும் ஒவ்வொரு தீமின் (மையக்கருவின்) கீழ் இந்த தினம் அனுசரிக்கப்படும்.

     பெண்கள் மற்றும் மன ஆரோக்கியம் (1996), குழந்தைகள் மற்றும் மன ஆரோக்கியம் (1997), மன ஆரோக்கியம் மற்றும் மனித உரிமைகள் (1998) மற்றும் மன ஆரோக்கியம் மற்றும் முதுமை (1999) ஆகியவை அதன் ஆரம்ப கருப்பொருள்கள்.

இந்த ஆண்டின் கருப்பொருள் ‘சமத்துவமற்ற உலகில் மனநலம் பேணுதல்’ என்பதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...