சர்வதேச இணைய நாள் (அக்டோபர் 29)
இணையத்திற்கு வயது 52 ஆகிறது.
1969 ஆம் ஆண்டு இந்த நாளில் தான், கலிபோர்னியா பல்கலைக் கழகத்திற்கும் ஸ்டான்போர்ட் ஆய்வு மையத்திற்கும் இடையே முதல் டேட்டா மெசேஜ், இணையத்தின் முன்னோடியான ஆர்பாநெட் (ARPANET) வழியாகப் பரிமாறிக் கொள்ளப்பட்டது. கற்பனையிலும் எண்ண முடியாத வேகத்தில், திட்டமிடாத திசைகளில், இணையத்தின் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. தொடர்ந்தும் வளர்கிறது.
ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 29-ஆம் தேதி சர்வதேச இணைய தினமாகக் கொண்டாடப்படுகிறது.2005ஆம் ஆண்டு முதல் சர்வதேச இணைய தினம் தொலைத்தொடர்பு மற்றும் தொழில்நுட்ப வரலாற்றில் நினைவுகொள்ளும் வகையில் முக்கியமான நாளாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.
இன்றியமையாத் தகவல்கள்:
1. 2014 ஆம் ஆண்டில், பன்னாட்டளவில் இணையத்தைப் பயன்படுத்துவோர் 280 கோடி. இவர்களில், 210 கோடி (75%) பேர் முதல் 20 நாடுகளைச் சேர்ந்தவர்களாவர். மீதம் உள்ள 70 கோடி பேர் மற்ற 178 நாடுகளைச் சேர்ந்தவர்கள். மொத்த இணையப் பயனாளர்களில், இந்த நாடு ஒவ்வொன்றிலும் 1% பேரே உள்ளனர்.
2. மொத்த இணையப் பயனாளர்களில், சீனாவில் 22% பேர் உள்ளனர். 2014ல் இவர்களின் எண்ணிக்கை 64 கோடியே 20 லட்சம். இதனை அடுத்து வரும் மூன்று நாடுகளான, அமெரிக்க, இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளின் மொத்த இணையப் பயனாளர்களைக் காட்டிலும் அதிகமான எண்ணிக்கையில், சீனாவில் உள்ளோர் இணையத்தைப் பயன்படுத்துகின்றனர்.
3. முதல் 20 நாடுகளில், இந்தியாவில், அதன் ஜனத்தொகையுடன் ஒப்பிடுகையில், இணையப் பயனாளர்கள் 19% பேர் மட்டுமே. ஆனால், ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து வரும் இணையம் பயன்படுத்துவோர் எண்ணிக்கை, மிக வேகமாக வளர்ந்து வருவதும் இங்கே தான்.
4. ஒவ்வொரு நாட்டிலும் வாழும் மக்கள் அடிப்படையில், மிக அதிக இணையப் பயனாளர்களைக் கொண்டிருப்பது, அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், பிரிட்டன் மற்றும் கனடா ஆகும். இந்த நாடுகளில் உள்ள மக்கள் தொகையில், 80% பேர் இணைய இணைப்பு பெற்றுள்ளனர்.இது 1969-ல், முதல் மின்னணு செய்தியை ஒரு கணினியில் இருந்து மற்றொரு கணினிக்கு அனுப்பிய நிகழ்வாகும்.
இன்றைய நவீன உலகில் இணையம் என்பது மக்களிடம் இருந்து பிரிக்க முடியாத ஒன்றாக மாற்றம் பெற்றுள்ளது. இணையப் பயன்பாடு என்பது தொழில் சார்ந்ததாகவும், மருத்துவம், பொழுது போக்கு என எல்லாவற்றிலும் பரவியுள்ளது.இதன் காரணமாக கிராமங்கள் முதல் நகரம் வரை ஒன்றிணைந்ததுடன் இதன் பயன்பாட்டினால் உலகில் எங்கோ ஒரு மூலையில் நடக்கும் ஒரு விஷயத்தைக் கூட செய்தியாகவோ, வேறு வகையிலோ நம்மால் உடனுக்குடன் அறிய முடிகின்றது.
தற்போதைக்கு, மொபைல் வழி இணைய இணைப்புதான், இணைய வர்த்தகச் சந்தையில் மிகத்துடிப்போடு இயங்குகிறது. இணையம் மிகச் சிறந்த நண்பன்.
நம் ஐயங்களைப் போக்கவும், நம் எண்ணக்கருத்துகளை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும், அறிவைப் பெருக்கவும்,பாதுகாப்பாகப் பயன்படுத்துவோம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக