1. லிபியாவில் கடந்தாண்டு நடந்த மக்கள்
புரட்சியின் போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை
விசாரிக்கும்படி, ஐ.நா பொதுச் செயலர் பான் கி மூன்
வலியுறுத்தியுள்ளார்.
2. கடந்த 244 ஆண்டுகளாக
உலகின் மிகப் பிரபலமான குறிப்புதவிப் புத்தகமாக விளங்கி வரும், "என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா' தனது புத்தக
வடிவ வெளியீடுகளை நிறுத்தத் திட்டமிட்டுள்ளது.
3.மாதச் சம்பளம் பெறுபவர்களுக்கு,புதிய வரவுசெலவுத்
திட்டத்தில், வருமான வரி விலக்கு வரம்பில் 20 ஆயிரம் ரூபாய் உயர்த்தப்பட்டு, 2 இலட்சம் வரை வரிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
4. விண்வெளிக்கு செய்மதியைக் கொண்டுசெல்லும்
நெடுந்தூர ஏவுகணை ஒன்றை ஏவவுள்ள வடகொரியாவின் திட்டத்தால்
மேற்குலக அணி நாடுகள் கவலை அடைந்துள்ளன.
5.
ஐ.நா. சபையில் அமெரிக்கா கொண்டுவந்த ,இலங்கைக்கு எதிரான
தீர்மானத்தை, இலங்கையிலுள்ள தமிழ் தேசியக் கூட்டணி கட்சி ஆதரவு தெரிவித்துள்ளது.
6. லோக்பால்
மசோதாவை நிறைவேற்ற, மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மீண்டும் ஒரு
மிகப்பெரிய போராட்டத்தை நடத்த தயாராவோம் என்று அன்னா ஹசாரே தெரிவித்துள்ளார்.
7. கட்டாய தலைக்கவசம் நடைமுறைபடுத்தப்பட்டதற்கு எதிராக மதுரை
உயர்நீதிமன்ற கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
8. சங்கரன்கோவில் தொகுதியில், எதிர்வரும்
ஞாயிற்றுக்கிழமையன்று இடைத்தேர்தல் நடைபெற உள்ளது.
9. கிரிக்கெட் வரலாற்றில் 100ஆவது சதத்தை அடித்து சாதனை
நிகழ்த்தியுள்ள மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கருக்கு, பிரதமர் மன்மோகன் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
10. ஆசிய கோப்பை மட்டைப்பந்துத் தொடரின் தகுதி ஆட்டத்தில், இந்திய அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேச அணி வீழ்த்தியது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக