29 பிப்ரவரி, 2012

01/03/2012


1. இனி புதிய அணு மின் நிலையங்களை அமைப்பதில்லை என்றும், படிப்படியாக மாற்று மின் திட்டங்களை செயல்படுத்தப் போவதாகவும் ஜப்பான் றிவித்தது.
2. அமெரிக்காவின் கொலம்பியா நீதிமன்றத்தில், இராஜபக்சேவுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் பிறப்பிக்கப்பட்ட சம்மனை, தமிழ்நெட் இணையத்தில் வெளியிடுமாறு, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3.  கேரளக் கடல்பகுதியில் தமிழக மீனவர்கள் 2 பேர், இத்தாலியக் கப்பலின் பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்ட விவகாரத்தை நீதிமன்றத்திற்கு வெளியே தீர்த்துக் கொள்ள, முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
4. திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி கோவிலின் சி அறையில், 3 கிலோ எடை கொண்ட 30 தங்கக் குடங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
5. இந்த ஆண்டு இறுதியில் 4ஜி ஸ்பெக்டரம் ஏலத்தில் விடப்படும் என்று தொலைத் தொடர்புத்துறை அமைச்சர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.
6. சில்லறை வணிகத்தில், அந்நிய நேரடி முதலீட்டிற்கு அனுமதி அளிக்கும் முடிவை, ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
7.  மேற்கு வங்க முதல்வர், மம்தா பானர்ஜியின் சகோதரரின் மகன், போக்குவரத்துக் காவலரைக் கன்னத்தில் அறைந்த குற்றத்திற்காக, கைது செய்யப் பட்டார்.
8.இந்த ஆண்டு முதல் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்கள் தேர்வு அறைக்குள் பெல்ட் அணிந்து செல்லக் கூடாது என்று தேர்வுத்துறை அதிகாரிகள் தெரிவி்ததுள்ளனர்.
9.தென்மண்டல காஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர், மீண்டும் வேலை நிறுத்தப் போராட்டத்தை துவக்குவதால், தமிழகம் உட்பட ஐந்து மாநிலங்களில், சமையல் எரிவாயுத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது.
10. இளம்வீரர்களுக்கு வழிவிடும் வகையில், ஒருநாள் போட்டிகளில் இருந்து சச்சின் ஓய்வு பெற வேண்டும் என்று முன்னாள் பாகிஸ்தான் கேப்டன் வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

Free Code Script

28 பிப்ரவரி, 2012

29/02/2012


1. இந்த ஆண்டின், அமைதிக்கான நோபல் பரிசுக்கு ,முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. 
2. ஐ.நா. மனித உரிமைகள் மாநாட்டில், இலங்கையின் போர்க்குற்றங்களுக்கு எதிரான தீர்மானம் இன்று கொண்டு வரப்படவுள்ளது.
3.  2009ஆம் ஆண்டு விடுதலைப் புலிகளுக்கும், சிங்களப் படைக்குமிடையே நடந்த இறுதிப் போரில் 9000 பேர் மட்டுமே கொல்லப்பட்டதாக ,இலங்கை அரசு அறிவித்துள்ளது.
4. அமெரிக்காவில், உடலுக்கு வெளியே இதயத்துடன் பிறந்த ஆண் குழந்தை, அதிசயமாக உயி்ர் பிழைத்துள்ளது.
5. சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே குழுவைச் சேர்ந்த, அரவிந்த் கேஜ்ரிவாலின் பெயர் வாக்காளர் பட்டியலில் இல்லாததால் ஜனநாயகக் கடமை ஆற்ற முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்.
6. தமிழகத்தில், குடும்ப அட்டைகளை புதுப்பித்துக் கொள்ள வழங்கப்பட்ட கால அவகாசத்தை, மேலும் ஒரு மாதம் நீட்டித்து, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
7. தமிழகத்தில் நிலவி வரும் மின்பிரச்னையை தீர்க்க, கூடங்குளம் அணுமின் திட்டம் அவசியம் தேவை என, இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைத்தின் முன்னாள் தலைவரும, மூத்த விஞ்ஞானியுமான, பல்தேவ் ராஜ் கூறியுள்ளார்.
8. வால்பாறை வனச்சரகத்திற்குட்பட்ட, ஆனைமலை புலிகள் காப்பகப் பகுதியிலுள்ள, வாட்டர்பால்ஸ் மற்றும் அட்டகட்டி வனப் பகுதியில் காட்டுத்தீ ஏற்பட்டுள்ளது.
9. லண்டன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கான தகுதிப் போட்டியில், வெற்றி பெற்ற இந்திய ஹாக்கி அணிக்கு, சகாரா இந்தியா பரிவார் நிறுவனம் சார்பாக `1 கோடியே 20 இலட்சம் பரிசுத் தொகையாக வழங்குகிறது. 
10. இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையே நடந்த ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கூடுதல் (போனஸ்)புள்ளிகளுடன் வெற்றி பெற்றுள்ளது.

Free Code Script

28/02/2012


1. இந்த ஆண்டின் சிறந்த படத்திற்கான ஆஸ்கார் விருது கறுப்பு வெள்ளையில் எடுக்கப்பட்ட, பேசாப்படமான, “தி ஆர்ட்டிஸ்ட் படத்துக்குக் கிடைத்துள்ளது.
2. ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு அமெரிக்க இராணுவத் தளத்தில், அண்மையில் குரானின் பிரதிகள் எரிக்கப்பட்டதற்காக ஆப்கானிய மக்களிடம் அமெரிக்க அதிபர் ஒபாமா மன்னிப்பு கோரியுள்ளார்.
3. அருணாச்சல பிரதேசத்துக்கு, தான் பயணம் மேற்கொள்வதை சீனா எதிர்ப்பது மிகவும் துரதிஷ்டமானது என்று, பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனி கூறினார்.
4. நாடு தழுவிய அளவில் இன்று வங்கி ஊழியர்கள் பொது வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால், வங்கிப் பணிகள் வெகுவாக பாதிக்கப்படும் எனத் தெரிகிறது.
5. தேசிய நதிகள் இணைப்புத் திட்டத்தை விரைவுபடுத்த, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
6. கூடங்குளம் எதிர்ப்பாளர்களை, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று ஜனதா கட்சித் தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வலியுறுத்தல்.
7. கூடங்குளத்தில் உற்பத்தியாகும் மின்சாரத்தில் ஆயிரம் மெகாவாட் மின்சாரம் தமிழகத்துக்கு வழங்கப்படும் என மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். 
8.பேருந்துக் கட்டண உயர்வால்,தமிழகஅரசுக்கு மாதத்திற்கு `196 கோடி கூடுதல் வருவாய் கிடைக்கிறது என,போக்குவரத்துத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
9.கோவை மாநகராட்சியின்,முதல் பெண் துணை மேயராக,லீலாவதி உன்னி தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.
10.ஆஸ்திரேலியாவில் நடைபெறும்,முத்தரப்பு,ஒருநாள் மட்டைப்பந்துப் போட்டி, இறுதி லீக்கில்,இந்தியா,இன்று இலங்கையை எதிர்கொள்கிறது.

Free Code Script

27 பிப்ரவரி, 2012

27/02/2012


1. அறிவியல் மற்றும் ஆராய்ச்சித் துறையில் சீனாவை விட இந்தியா பின் தங்கியிருப்பதாக பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
2. உலக நாடுகளிலேயே கத்தார் நாடுதான் பணக்கார நாடு எனச் செய்தி வெளியிட்டுள்ளது அமெரிக்காவின் ஃபோர்ப்ஸ் பத்திரிகை.
3. எதிர்காலத்தில் எண்ணெய் விலை அதிகரிப்பிற்கு, இந்தியா, சீனா, பிரேசில் போன்ற நாடுகளில் வளர்ந்து வரும் தேவைதான் முக்கிய காரணமாக இருக்கும் என அமெரிக்க அதிபர் ஒபாமா கருத்துத் தெரிவித்துள்ளார்.
4. பயங்கரவாதத் தாக்குதல் உள்ளிட்ட செய்திகளை ஒலிபரப்புவதில், தொலைக் காட்சிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்க வேண்டுமென்று செய்தி ஒலிபரப்பு தர ஆணையத்திடம், தில்லி காவல்துறை புகார் அளித்துள்ளது.
5. உத்தரப்பிரதேசத்தில் ஆறாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரம் நேற்றுடன் முடிவடைந்தது. 13 மாவட்டங்களிலுள்ள 68 தொகுதிகளுக்கு, நாளை தேர்தல்.
6. தீவிரவாதிகளைக் கைது செய்ய சிறப்பு அதிகாரம் வழங்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு தேசிய பாதுகாப்புப்படை தலைமை இயக்குநர் கடிதம் எழுதியுள்ளார்.
7.  இத்தாலியக் கப்பலின் பாதுகாவலர்கள் மீதான விசாரணை, சரியான திசையிலேயே செல்கிறது -மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ.கே. அந்தோனி 
8.  பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், மின்வெட்டால் பாதிக்கப் படாமல் இருக்க, மேல்நிலை மற்றும் உயர்நிலைப் பள்ளிகளுக்கு மின்னாக்கிகள் மூலம் மின்சாரம் வழங்கப்படும் எனத் தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
9.  சென்னையில் இன்று முதல் மின்வெட்டு 2 மணிநேரமாவதால், 300மெகா வாட் மின்சாரம் மிச்சமாகும். தமிழகத்தின் பிற நகரங்கள் மற்றும் ஊரகப் பகுதிகளுக்கு மின் வெட்டு 4 மணி நேரமாகக் குறைக்கப்படுகிறது.
10. தில்லியில் நேற்றிரவு நடைபெற்ற தகுதிச்சுற்றின் இறுதி ஆட்டத்தில், இந்திய ஆடவர் ஹாக்கி அணி, எட்டிற்கு ஒன்று என்ற கணக்கில் பிரான்சை வீழ்த்தியதன் மூலம், இலண்டன் ஒலிம்பிக் போட்டியின் பிரதான சுற்றில் விளையாடத் தகுதிபெற்றது.                                                                               -பாரதிஜீவா

25 பிப்ரவரி, 2012

25/02/2012


1. ஆப்கானிஸ்தான் அரசுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு, தலிபான் உள்ளிட்ட ஆப்கன் பயங்கரவாத அமைப்புகளுக்கு, பாகிஸ்தான் முதன் முதலாக அழைப்பு விடுத்துள்ளது.
2. சோமாலியக் கடற்கொள்ளையர் பிரச்னைக்கு, அந்நாட்டு அரசுதான் தீர்வு காண வேண்டும் என்று, ஐ.நா அவையில், இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.
3.  பயங்கரவாதத்தை,மய்ய,மாநில அரசுகள் இணைந்தே எதிர்கொள்ள வேண்டும் என,10 மாநில முதல்வர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.
4.  கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தை எதிர்க்க, வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தியதற்காக, 3 இந்திய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
5.  தன்னலமற்ற சமூக சேவையை பாராட்டி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே உள்ளிட்ட 27 பேருக்கு தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் சீதாராம் ஜின்டால் நிறுவனம் விருதுகள் வழங்கி கெளரவித்தது.
6.  செயல்படாமல் இருந்த, உடன்குடி அனல் மின்நிலையத் திட்டத்தை `8 ஆயிரம் கோடி செலவில், மாநில அரசின் திட்டமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக, தமிழக முதல்வர் அறிவிப்பு.
7. தண்ணீர் விநியோகத்தை தனியார்மயமாக்க முயற்சிக்கும் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
8. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், வண்ணார்பேட்டை மேம்பாலம் தொடர்பான தகவல்களை அளிக்க மறுத்த அதிகாரிகள், `12 ஆயிரம் நஷ்டஈடு வழங்கவேண்டும் என நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
9. குழந்தைகள் ஓவியம் வரைந்தால், பெற்றோர்கள் தடுக்கக் கூடாது; ஒரு மேதை பிறந்திருப்பதாக பெருமைப்பட்டு, ஊக்கப்படுத்த வேண்டும் என, சித்ரகலா அகாடமியின் தலைவர் ஓவியர் ஜீவா கூறினார்.
10.  ஒலிம்பிக் ஹாக்கி, தகுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில், இந்திய ஆடவர் அணி 4-2 என்ற கணக்கில் போலந்தையும், இந்திய மகளிர் அணி 1-0 என்ற கணக்கில் இத்தாலியையும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறின.      
                                                                                                                                      -பாரதிஜீவா

24 பிப்ரவரி, 2012

24/02/2012


1. அயல் பணி ஒப்படைப்பு நிறுவனங்களுக்கு வரி விதிக்க அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா முடிவு செய்துள்ளார். இதனால் பல இந்திய நிறுவனங்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
2.  ஜக்கிய நாடுகள் சபைக்கான அமைதிக் குழுவில் இருந்து இலங்கை முன்னாள் ராணுவ அதிகாரி சவீந்தர சில்வா நீக்கப்பட்டுள்ளார்.
3. கேரள மாநிலத்தின் புகழ்பெற்ற பத்மநாப சுவாமி கோயிலின் ரகசிய நிலவறைகளில் சி மற்றும் டி  குறியிடப்பட்ட அறைகளைத் திறப்பதற்கு உச்ச நீதிமன்றம் நேற்று அனுமதியளித்தது. 
4. உத்தரப் பிரதேச சட்டப் பேரவைக்கு நேற்று நடந்த 5-ஆம் கட்டத் தேர்தலில் 59 விழுக்காடு வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
5. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ராணுவ முகாம்கள் மீது புதன்கிழமை இரவு பனிப்பாறைகள் சரிந்து விழுந்ததில் 14 இராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்; 7 பேரைக் காணவில்லை.
6. மாவட்டந்தோறும் 2 இலட்சம் மரக்கன்றுகள் வீதம் தமிழகம் முழுவதும் 64 லட்சம் மரக்கன்றுகளை நடும் திட்டத்தைத் தமிழக முதல்வர் நேற்று தொடங்கி வைத்தார்.
7. இந்தியாவின் மிகப்பெரிய தனியார் மின்னுற்பத்தி நிறுவனமான ஜிண்டால் பவர் லிமிடெட் நிறுவனத்தின் தலைவரும், எம்.பி.யுமான நவீன் ஜிண்டால் தலைமைச் செயலகத்தில் முதல்வரைச் சந்தித்துப் பேசினார்.
8. காவல்துறையில் இளைஞர்களின் வரவு மிகவும் தேவையாக உள்ளது. ஐ.பி.எஸ். போல ஏதாவது ஒரு சிவில் சர்வீஸ் தேர்வில் வெற்றி பெற்று சமூகத்திற்குப் பாடுபட வேண்டும்  என்று கோவை மாநகர காவல்துறை துணை கமிஷனர் ஹேமா கருணாகரன் கூறினார்.
9. ஒலிம்பிக் ஹாக்கி தகுதிச்சுற்றுப் போட்டியில், இன்று நடைபெறும் ஆட்டத்தில் இந்திய அணி, போலந்தை எதிர்கொள்கிறது.
10. இந்திய மட்டைப்பந்து அணிக்கு மூன்று கேப்டன்களை நியமிப்பது பற்றி பரிசீலிக்கப்பட்டு வருகிறது. 

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...