25 பிப்ரவரி, 2012

25/02/2012


1. ஆப்கானிஸ்தான் அரசுடன் நேரடியாகப் பேச்சுவார்த்தை நடத்த முன்வருமாறு, தலிபான் உள்ளிட்ட ஆப்கன் பயங்கரவாத அமைப்புகளுக்கு, பாகிஸ்தான் முதன் முதலாக அழைப்பு விடுத்துள்ளது.
2. சோமாலியக் கடற்கொள்ளையர் பிரச்னைக்கு, அந்நாட்டு அரசுதான் தீர்வு காண வேண்டும் என்று, ஐ.நா அவையில், இந்தியா கருத்து தெரிவித்துள்ளது.
3.  பயங்கரவாதத்தை,மய்ய,மாநில அரசுகள் இணைந்தே எதிர்கொள்ள வேண்டும் என,10 மாநில முதல்வர்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கடிதம் எழுதியுள்ளார்.
4.  கூடங்குளம் அணுமின் நிலையத் திட்டத்தை எதிர்க்க, வெளிநாட்டு நிதியைப் பயன்படுத்தியதற்காக, 3 இந்திய தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உரிமங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.
5.  தன்னலமற்ற சமூக சேவையை பாராட்டி முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம், சமூக ஆர்வலர் அண்ணா ஹசாரே உள்ளிட்ட 27 பேருக்கு தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் சீதாராம் ஜின்டால் நிறுவனம் விருதுகள் வழங்கி கெளரவித்தது.
6.  செயல்படாமல் இருந்த, உடன்குடி அனல் மின்நிலையத் திட்டத்தை `8 ஆயிரம் கோடி செலவில், மாநில அரசின் திட்டமாக செயல்படுத்த முடிவு செய்துள்ளதாக, தமிழக முதல்வர் அறிவிப்பு.
7. தண்ணீர் விநியோகத்தை தனியார்மயமாக்க முயற்சிக்கும் கொள்கையை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
8. தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ், வண்ணார்பேட்டை மேம்பாலம் தொடர்பான தகவல்களை அளிக்க மறுத்த அதிகாரிகள், `12 ஆயிரம் நஷ்டஈடு வழங்கவேண்டும் என நெல்லை நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
9. குழந்தைகள் ஓவியம் வரைந்தால், பெற்றோர்கள் தடுக்கக் கூடாது; ஒரு மேதை பிறந்திருப்பதாக பெருமைப்பட்டு, ஊக்கப்படுத்த வேண்டும் என, சித்ரகலா அகாடமியின் தலைவர் ஓவியர் ஜீவா கூறினார்.
10.  ஒலிம்பிக் ஹாக்கி, தகுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஆட்டங்களில், இந்திய ஆடவர் அணி 4-2 என்ற கணக்கில் போலந்தையும், இந்திய மகளிர் அணி 1-0 என்ற கணக்கில் இத்தாலியையும் வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறின.      
                                                                                                                                      -பாரதிஜீவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Featured post

பொது அறிவு வினா - விடை

                                                                    பொது அறிவு  1. பாரதிதாசனின் இயற்பெயர் யாது ? சுப்புரத்தினம் 2. பெருஞ்சி...